சீத்தாப்பழம் நன்மைகள் | Seethapalam Benefits in Tamil
பழங்கள் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆரஞ்சு வாழை, மா, திராட்சை போன்ற பழங்கள் தான்.
ஆனால் சீசன்களில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒருசில பழங்கள் மட்டுமே நமக்கு ஞாபகம் வரும்.
அதில் வித்தியாசமான தனிச் சுவை கொண்ட ஒரு பழம் தான் சீத்தாப்பழம்.
இதனுடைய இலைகள், தோல், விதை, மரப்பட்டை போன்ற அனைத்து பாகங்களுமே மருத்துவ தன்மை கொண்டது ஆகும்.
சீத்தாப்பழத்தில் உள்ள குளுகோஸ், சுக்ரோஸ் ஆகிய இரண்டும் அதிக அளவில் இருப்பதன் காரணமாக உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது.
சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
- வைட்டமின்கள்
- புரதம்
- கொழுப்பு சத்து
- இனிப்பு சத்து
- நார்ச்சத்து
- தாது பொருட்கள்
- வைட்டமின் பி
- வைட்டமின் சி
- வைட்டமின் ஈ
- மெக்னீசியம்
- கால்சியம்
- பொட்டாசியம்
- இரும்புச் சத்து
ரத்த அழுத்தம்
சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய இரண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்ய ஊக்குவிக்கின்றது. ரத்த அழுத்தமானது சீராக்கி இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
அதிகளவில் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீத்தாப்பழத்தை உயர் ரத்த அழுத்தம் குறைந்த ரத்த அழுத்தம் உள்ள இருபாலரும் தாராளமாக சாப்பிடலாம் .
நச்சுப் பொருட்களை வெளியேற்ற
சீத்தாப்பழம் அனைத்து வகையான சத்துக்களையும் கொண்டு இருக்கின்றது அதாவது வைட்டமின்கள் புரதம் கொழுப்பு சத்து நார்சத்து போன்றவை.
உடலில் உள்ள திசுக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய நட்சுக்களினை உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றுவதற்கு ஆன்டி ஆக்சிடன்ட் தேவைப்படுகின்றது.
ஆன்டிஆக்சிடென்ட் இவர்களுக்கு தரக்கூடியது வைட்டமின் சி சத்து தான்.
ஆனால் வைட்டமின் சி சத்தானது உடலில் அதிக நேரம் தங்குவதில்லை. ஆகவே ஒவ்வொருவரும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள பொருட்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எலும்பு வலிமை
சீத்தாப்பழம் உடலுக்கு நன்கு வலிமையை தரக்கூடியது. இதில் கால்சியம் நிறைந்திருக்கும் காரணத்தினால் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும்.
தசைப்பிடிப்பு ஏதேனும் இருந்தால் சீதா பழம் சாப்பிடுவதன் மூலமாக தசைப்பிடிப்புகள் சரியாகி தசைகள் வலிமையாகும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சீத்தாப்பழம் மிகப்பெரிய அளவில் பயன்படுகின்றது.
இதில் வைட்டமின் 6 அதிக அளவில் இருக்கும் காரணத்தினால் மூச்சுக்குழல் அலர்ஜியை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.
நுரையீரல் தொடர்பான அத்தனை சிக்கல்களுக்கும் சீதாப்பழம் நன்மை தரக்கூடிய ஒன்றாக உள்ளது.
ஆகவே இது ஆஸ்துமா யை எதிர்த்து போராடக்கூடிய ஒரு இயற்கை அருமருந்தாக விளங்குகிறது.
சளி காய்ச்சல்
இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள காரணத்தினால் சளி பிடித்துக் கொள்ளும் என்ற பயம் அனைவர் மனதிலும் ஏற்படக்கூடிய ஒன்று.
ஆனால் அது சீதாப்பழம் ஆனது குளிர் காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டது.
உடல் எடை
உடல் மெலிந்து காணப்படுபவர்கள் தங்களது உடல் எடையை அதிகரிப்பதற்காக பல வகைகளில் முயற்சி செய்வர்.
அவர்கள் உடல் எடையை அதிகரிக்க அதிக கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவார்கள் ஆனால் அது உடலுக்கு ஆரோக்கியம் விளைவிப்பது அல்ல.
ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சேர்த்து உடல் எடையை அதிகரிப்பதன் மூலமாக நோயற்ற உடலினை பெறலாம்.
இவர்கள் சீதாப் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைக்கின்றன.
மேலும் கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்துக்கள் நிரம்பியுள்ள காரணத்தினால் சீத்தாப்பழம் உடல் எடையை சீராக அதிகரிக்கின்றது.
செரிமானம்
நாம் உண்ட உணவானது நன்கு செரிமானம் ஆகும் பொழுது தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆற்றலும் கிடைக்கின்றது.
சீதாப்பழம் விழுதினை சாப்பிடுவதால் ஐந்து கிராம் அளவுக்கு நார்ச் சத்து நம் உடலுக்கு கிடைக்கிறது.
இதில் தாமிரச் சத்தும் அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது.
ஆகவே மலச்சிக்கல் வராமல் தடுத்து உடல் இயக்கத்திற்கு பயன்படக்கூடிய நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றது.
சீதாப்பழம் ஆனது செரிமான பிரச்சனைகளை சரி செய்வதனால் வாந்திபேதி தலை சுற்றல் பித்தம் இது போன்ற பிரச்சனைகள் எதுவும் வராமல் ஆரோக்கியமான உடலினை பெறலாம்.
இதனையும் படிக்கலாமே
- அரைக்கீரை பயன்கள் | Arai Keerai Benefits in Tamil(Opens in a new browser tab)
- தண்டுக்கீரை பயன்கள் | Thandu Keerai Health Benefits(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- அவரைக்காய் பயன்கள் | Avarakkai in Uses Tamil(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
11 Comments
Comments are closed.