வைட்டமின் சி உள்ள தானியங்கள் | Vitamin C Foods in Tamil
உடல் சரியாக இயங்குவதற்கு ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும் அவசியம். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுதுதான் நோய்களும் உண்டாகிறது.
அன்று நம் முன்னோர்கள் சாப்பிட்ட உணவுகள் எல்லாமே மருந்தாக இருந்தது. எனவே எல்லா ஊட்டச்சத்துக்களும் எளிதாக கிடைத்து அவர்கள் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
ஆனால் இன்றோ அப்படி கண்ணில் கண்டதையெல்லாம் சாப்பிடுகிறோம். அவைகள் சத்துக்கள் உள்ளதா? இல்லையா? என்பதை கூட யோசிக்க மறுக்கிறோம்.
பொதுவாக ஊட்டச்சத்து வரிசையில் மிக முக்கியமானது வைட்டமின் சி. இது ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம்.
அந்த வகையில், இந்த விட்டமின் சி ஏன் முக்கியம்? இது உடலில் குறைந்தால் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகிறது? எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் வைட்டமின் சியை எளிதாக பெற முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.
நோய் எதிர்ப்பு சத்தி
வைட்டமின் சியில் நிறைய ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளது. இது வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்வதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
உடலில் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடும் ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் நோய்த் தொற்றுகலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
எனவே வைட்டமின் சி நமது உடலில் குறைவாக நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமை குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை உண்டாகும்.
வைட்டமின் சியை உடல் தானாகவே தயாரிக்க முடியாது. இதை எளிதாக உணவுகள் மூலமே பெற முடியும். நிமோனியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது, நோய் எதிர்ப்பு சக்தி விரைவாக அதிகரித்து அந்த நோயிலிருந்து விடுபட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொதுவாக சளி மற்றும் சுவாச நோய் தொற்றுகள் போன்ற கடுமையான தொற்று நோய்களை தடுக்கவைட்டமின் சி உதவுகிறது.
மேலும் இந்தவைட்டமின் சி, உயிரணுக்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்தஆக்ஸிஜநெற்றி ஆகும்.
இரும்பு சத்து
இது நமது உடலில் மிக இன்றிய சத்தாகும். இதுதான் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. இந்த ரத்த சிவப்பு அணுக்களில் உள்ள முக்கியமான புரதமே ஹீமோகுளோபின். இதுதான் உடலின் செல்களுக்கும், திசுக்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது.
அதாவது நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜன்ஐ நுரையீரல்ல இருந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வது இந்த ஹீமோகுளோபின் தான். இவன் சீரான அளவில் இருந்தால்தான் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே இந்த ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும் இந்த இரும்பு சத்தை நமது உடலால் உறிஞ்ச வைட்டமின் சி மிக மிக முக்கியம்.
இதய ஆரோக்கியம்
எனவே ரத்த சோகை ஏற்பட வைட்டமின் சி குறைபாடும் முக்கிய காரணம். அதுமட்டுமல்ல விட்டமின் சி தமனிகளின் சோர்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
மேலும் கொலஸ்ட்ராலையும் குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதே போன்று அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையக்கூடும்.
முக்கியமாக,வைட்டமின் சி இன்சுலின் சுரப்பைத் தூண்டி ரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைக்க உதவும்.
மன அழுத்தம்
இந்த வைட்டமின் சி மன அழுத்தம் காரணமாக ஏற்படும் மூளை மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
வைட்டமின் சியை தேவையான அளவில் எடுத்துக் கொள்ளும் பொழுது மன அழுத்த ஹார்மோன்களை, ஒழுங்குபடுத்துவதால் நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்க உதவுகிறது.
வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களின் ரத்த ஓட்டத்தில் அதிக அளவு நச்சுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுநீரக ஆரோக்கியம்
நமது உடலில் இருந்து சிறுநீர் வழியாக பல விதமான நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் வெளியேறுகின்றன. அதில் ஒன்று யூரிக் அமிலம். இந்த வைட்டமின் சி, சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் சிறுநீரில், யூரிக் அமிலத்தின் அளவு வெகுவாக குறைந்து எதிர்காலத்தில் சிறுநீரகங்களில் கற்கள் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மூட்டு வலி
ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உருவாகி அவை அந்த மூட்டு பகுதிகளில் படிந்து விடுவதால் கீல்வாதம் பிரச்சனை ஏற்படுகிறது.
அந்த வகையில்,வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் யூரிக் அமிலம் குறைந்து.
கீல்வாதம் நோய் பாதிப்பு நீங்கி மூட்டுகளில் வலி ஏற்படுவது குறையும் என்றும் கூறப்படுகிறது.
மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு,வைட்டமின் சி அளவை அதிகரிக்க வைட்டமின் சி கூடுதல் ஆக வழங்கப்படுகிறது.
காரணம் இந்த வைட்டமின் சி மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
எலும்பு
முக்கியமாக வைட்டமின் சி உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூல குருத்தெலும்பு திசுக்களின் உற்பத்தி ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
மேலும் எலும்பு வலுப்படுவதற்கும் எலும்புப்புரைஐ தடுப்பதற்கும் இந்தவைட்டமின் சி உதவும். அதே போன்று, உடற்பயிற்சியின் போது போதுமான அளவுவைட்டமின் சி எடுத்துக் கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பின் ஆக்ஸிஜன் ஏற்றத்தை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி எடை மற்றும் கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது.
கண்புரை
வைட்டமின் சி,ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குவதன் மூலம் வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை அபாயத்தை குறைத்து பார்வையை மேம்படுத்துகிறது.
ஈறுகள்
வைட்டமின் சி குறைபாட்டினால் பற்கள், ஈறுகள் பாதிக்கும். இதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும். எனவே,வைட்டமின் சி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது ஈறுகளில் வீக்கம் மற்றும் நிறமாற்றம், ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது இவற்றைத் தடுத்து ஆரோக்கியமான ஈறுகளைப் பராமரிக்க உதவுகிறது.
சருமம்
வைட்டமின் சி குறைபாட்டினால் தோல் வறண்டு போகும் அதே போன்று சரும ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் சி முக்கியம்.
சரும நிறத்தை இயற்கையாகவே வைட்டமின் சியானது சருமத்திற்கு தேவையான கொலாஜின் சுரப்பில் முக்கிய பங்காற்றுகிறது.
இது சருமம் தளர்ச்சி அடைதல், கோடு மற்றும் சுருக்கங்கள் விழுதலை தடுக்கிறது. முக்கியமாக சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதம் என்றால் அது வைட்டமின் சி என்றே சொல்லலாம்.
வெட்டுக்காயம், உடைந்த எலும்பு தீக்காயங்கள் அல்லது காயங்கள் குணமாக இந்த வைட்டமின் சி உதவுகிறது. இப்பொழுது வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகள் பற்றி பார்ப்போம்.
வைட்டமின் சி உள்ள உணவுகள்
அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் இந்தவைட்டமின் சி அதிகம் உள்ளது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், சாத்துக்குடி, நார்த்தை பழம், திராட்சை போன்றவை சிட்ரஸ் பழங்களாகும்.
இவைகளை அவ்வப்போது எடுத்து வருவதன் மூலம் வைட்டமின் சி எளிதாக பெற முடியும்.வைட்டமின் சி நிறைந்த பழங்கள் பல இருந்தாலும், அவற்றில் எளிதாக கிடைக்கக்கூடிய கொய்யாப்பழம்வைட்டமின் சியின் சிறந்த மூலமாகும்.
அதே போன்று இலந்தைப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் சி உள்ளது. மேலும் பப்பாளி, காலிஃபிளவர், தக்காளி, வெள்ளரிக்காய்,ப்ரோக்கோலி, தர்பூசணி, குடைமிளகாய் மற்றும் கிவி பழங்களில், வைட்டமின் சி அதிகம் உள்ளது.
எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் வைட்டமின் சி குறைபாட்டை தவிர்க்க முடியும்.
இதனையும் படிக்கலாமே
- சப்ஜா விதை நன்மைகள் | Sabja Seeds Benefits in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் | Orange Fruit Benefits in Tamil
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் | Hemoglobin Increase Food in Tamil
- அங்கோர் வாட் கோவில் வரலாறு | Cambodia Angkor Wat Temple History in Tamil
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
6 Comments
Comments are closed.