கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil

உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு நம் இந்திய நாட்டில்தான் அதிகமான மருத்துவ குணம் கொண்ட மூலிகை வகைகள் உள்ளன.

இதில் பல மூலிகைகள், நம் வீட்டு தோட்டங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளர்ந்து வருகிறது.

ஆனால், இந்த மூலிகைகளின் நன்மைகள் தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மை.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

இப்படிப்பட்ட ஒரு அருமையான மருத்துவ மூலிகைதான் கற்பூரவள்ளி. இதனுடைய மருத்துவ குணங்கள் தெரிந்து, சிலர் இன்று வீடுகளில் இதை தொட்டிகளில் வளர்த்து வருகிறார்கள்.

கற்பூரவள்ளி கிருமிகளை அழிக்கும் சிறந்த கிருமி நாசினி என்றே சொல்லலாம்.

இது மருத்துவகுணம் அதிகம் உள்ள காரணத்தினால் தான் நமது முன்னோர்கள் வீட்டிற்கு முன்புறம் கற்பூர வள்ளி செடியினை துளசியுடன் சேர்த்து வளர்த்தனர்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஒரு அரு மருந்தாக கற்பூரவள்ளி விளங்குகிறது.

இந்தியாவில் தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது.

கற்பூரவள்ளியின் இலையானது வட்ட வடிவில் பஞ்சு போன்ற தோற்றத்துடனும், தொட்டு பார்ப்பதற்கு மென்மையாகவும் காணப்படும்.

கற்பூரவள்ளி காரத்தன்மை கொண்டும் நீர்ச்சத்து அதிகம் கொண்டும் காணப்படுகிறது. இதற்க்கு ஓம வள்ளி என்று கூட மற்றொரு பெயர் இதற்க்கு உண்டு.

கற்பூரவள்ளி இலையை சாதாரணமாக அப்படியே எடுத்து மென்று சாப்பிடலாம். இல்லையெனில் தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

கற்பூரவள்ளி இலையை கையினால் தொட்டு தடவி முகர்ந்தால், ஓமத்தின் மனம் தரும்.

இதன் இலையில் சுரக்கும் ஒரு விதமான ஆவியாகும் தன்மை உடைய நறுமண எண்ணெய்தான் இந்த மனத்திற்கு காரணம்.

மழை மற்றும் குளிர் காலங்களில் வயசு வித்தியாசம் எதுவும் இல்லாமல் அனைவருக்கும் சளி, ஜல்தோஷம் ஏற்பட்டும். மேலும் மூக்கடைப்பு, மூக்கில் ஒழுகுதல், தொண்டை கட்டு இவற்றை சரி செய்ய கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து வைத்து கொள்ளவும்.

மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்க கற்பூரவள்ளி இலை சாற்றினை மூக்கில் உறிஞ்சவும்.

தொண்டை கட்டு இருமல்,சளி போன்ற பிரச்சனைகள் குணமாக கற்பூரவள்ளி இலை சாற்றினை தொண்டையில் படுமாறு அருந்த வேண்டும்.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

ஜுரம்

கால நிலை மாற்றத்தின் காரணமாக ஆகும் காரணத்தினால் பலருக்கு ஜுரம் ஏற்படுவது, இயற்கையானது தான்.

ஜுரத்தினை சரிசெய்வதற்கு உடனடியாக ஆங்கில மருந்துகளை நாடாமல் சிறிது
கற்பூரவள்ளி இலையினை கசக்கி அதன் சாறினை உள்ளுக்கு அருந்த வேண்டும்.

கற்பூரவள்ளி இலைகளை நன்றாக கசக்கி, சூடேறும் அளவிற்கு நெஞ்சு, கழுத்து மற்றும் நெற்றி பகுதியில் தேய்ப்பதன் மூலமாக ஜுரம் விரைவில் குணமடையும் .

நுண்கிருமி தொற்று

நமது உடலின் மேற்பரப்பு தோலில் சிலருக்கு படை சொறி, அரிப்பு போன்றவை ஏற்படலாம்.

நுண்கிருமி தொற்று ஏற்பட்ட இடங்களில் கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து நீரில் அலசி அதனை நன்றாக கசக்கி சாறினை விடவும்.

விஷ கடி

சில பூச்சிகள் கடிப்பதால் தோலில் இருக்கும் நஞ்சையும், தோழி ஏற்பட்டிருக்கும் வீக்கத்தையும் போக்குவதற்கு கூட கற்பூரவள்ளி பயன்படுகிறது.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

எலும்பு வலி

ஆஸ்டோபோரஸிஸ் என்பது, உடலில் இருக்கும் எலும்புகள் மற்றும் மூட்டுப் பகுதிகளை பாதிக்கும் ஒரு நோயாகும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு எலும்புகள், மூட்டுகள்தேய்மானமடையும்.

கற்பூரவள்ளி இலைகளில், எலும்புகள், மூட்டுகளின் நலத்தை மேம்படுத்தும்.

ஒமேகா 6 எனப்படும் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வேதிப்பொருள் கற்பூரவள்ளி இலைகளில் அதிக அளவில் உள்ளது. இந்த இலைகளைக் கொண்டு செய்யப்பட்ட தைலத்தை, மூட்டுகள், எலும்புப் பகுதியில் தேய்த்து வரவும்.

அவ்வாரு செய்து வருவதன் மூலமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.

புற்றுநோய்

இன்றைய காலகட்டத்தில் உடலின் எந்த புற்றுநோய் வேண்டுமானாலும் ஏற்படலாம். புற்றுநோய்களில் பல வகைகள் இருக்கு. இதில் தற்போது உலக அளவில் அதிக பேர் புற்றுநோயால் பாதிப்படுகின்றனர்.
ஒமேகா 6 புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட கூடிய ஆற்றல் கொண்டது.

கற்பூரவள்ளி இலைகளில் உள்ள ஒமேகா 6 என்கின்ற வேதிப்பொருளானது புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது என புற்றுநோய் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

கவலை

ஒரு சிலர் அவ்வப்போது சிறிய பிரச்சனைகள், ஒரு சில தேவையற்ற விஷயங்களுக்கு மிகுந்த பயம் மற்றும் கவலை கொள்வார்கள்.

இதன் காரணமாக அவர்களுக்கு ஒரு வகையான படபடப்பும், மனதில் அமைதியின்மையும் ஏற்படும்.

கற்பூரவள்ளி இலையை பறித்து அதனது வாசனையை அடிக்கடி முகர்ந்து வருபவர்களுக்கு இதில் இருக்க கூடிய ஒரு வகையான ரசாயன பொருட்கள் மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றினை சரி செய்யும்.

சிறுநீர் பாதிப்பு

நமது ரத்தத்தில் இருக்க கூடிய அளவுக்கு அதிகமான உப்புகள் மற்றும் உடலில் உள்ள தேவைற்ற இதர பொருட்களை சுத்தகரிக்கிறது. அந்த கழிவுகளை சிறுநீர் வழியாக நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது.

கற்பூரவள்ளி இலை சிறுநீரை அதிக அளவில் பெருக்கும் ஆற்றல் கொண்டது.

சிறுநீரகங்களில் அதிக அளவில் சேரும் உப்புகளை கரைத்து, சிறுநீரகங்களின் நலனை காக்கிறது.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

ஆஸ்துமா

சுற்றுசூழல் மற்றும் காற்றில் ஏற்படும் மாசுக்கு நிறைந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு ஆஸ்துமா ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில சமயங்களில் மூச்சு திணறல் ஏற்படும். ஆஸ்துமா நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினமும் கற்பூரவள்ளி செடியின் இலைச்சாற்றை, பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றோடு கலந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படு மூச்சடைப்பு நீங்கும்.

நுரையீரல் புற்றுநோய்

புகை பிடிப்பதால், நுரையீரலில் அதிக அளவு நச்சுக்கள் சேர்ந்து கொள்ளும். சுவாசிக்கும் போது, சிறிது சிரமத்தை ஏற்படுத்துகிறது.

நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பை உருவாக்குகிறது.

கற்பூரவள்ளி இலைகளின் சாற்றை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி அருந்தி வந்தால் புகை பிடிப்பதால் நுரையீரலில் தங்கி இருக்கும் நச்சுக்கள் மாசுக்கள் நீங்கும்.

நுரையீரல் சம்பந்தமான புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது.

ஆனால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டே, இதைச் செய்தால், பலன் இருக்காது.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

அஜீரண பிரச்சனை

சில வகையான உணவுகள் அதிக அளவிலும், நேரம் கடந்து சாப்பிடு போதும் அஜீரண பிரச்சனை ஏற்படுகிறது.

நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனையும் உருவாகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கற்பூரவள்ளிச் செடியின் இலைச் சாற்றில் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜிரண கோளாறுகள் நீங்கும்.

கற்பூரவள்ளி வளர்ப்பு

இவ்வளவு பயனளிக்கும் இந்த செடியை வளர்ப்பது அவ்வளவு கடினமான ஒரு வேலை இல்லை.

நீங்கள் வீட்டிலேயே பெரிய அளவு பராமரிப்பு ஏதும் இல்லாமல், கற்பூரவள்ளியை எளிதில் வளர்க்கலாம்.

ஒரு சிறு தொட்டியில் மண் இருந்தாலே போதும். கற்ப்பூர வள்ளி செடியின் தண்டு படுதியை வெட்டி எடுத்து நட்டாலே போதும்.

கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் Karpooravalli in Tamil

நன்கு புதர் போல வளரும். இதன் இலைகள் பார்ப்பதற்கு பச்சையா அழகா இருப்பதினால் இதனை அழகு செடியாகவும் பயன்படுத்தலாம்.

நமக்கு ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதனையும் படிக்கலாமே

கட்டாயம் எங்களது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்

Related Posts

3 Comments

  1. Pingback: Highbay
  2. Pingback: pglike

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning