உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் | Weight Loss in Tamil Language

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும் | Weight Loss in Tamil Language

இன்று நிறைய பேருக்கு உடல் எடை அதிகரித்தல் மற்றும் தொப்பை ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.

உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் இரவு உணவு, ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், உடல் எடையும் அதிகரிக்கக்கூடாது. உடலுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்க வேண்டும். அப்படி நம்முடைய உணவு எப்படி இருக்க வேண்டும்? அதைப்பற்றிதான் இங்கு பார்க்கப் போகிறோம்.

காலையும், மதியமும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் உடல் உழைப்பிற்கு ஏற்ப சாப்பிடலாம். ஏனென்றால் காலை மற்றும் மதியம் சாப்பிட்ட பிறகு ஏதேனும் வேலை செய்து கொண்டு தான் இருப்போம்.

how to reduce weight in tamil language

ஆனால் இரவு நேரத்தில் அப்படி இல்லை. சாப்பிட்ட உடன் தூங்கத்தான் செல்கிறோம். எனவே உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் சத்தான கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

முக்கியமாக எண்ணெய் உணவுகள் மற்றும் கொழுப்பு அதிகமான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இப்பொழுது உடல் எடை குறைய இரவில் சாப்பிட வேண்டியவை பற்றி பார்ப்போம்.

வாழைப்பழம்

இரவு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காண முடியும்.

அதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தசைகளை ஓய்வெடுக்க செய்து இரவில் நல்ல பெற உதவுவதோடு உடல் எடை குறைய உதவி புரிகிறது.

முக்கியமாக உங்கள் உடலுக்கு தேவையான கலோரிகள் மொத்தமும் அந்த ஒரு வாழைப்பழத்திலேயே இருக்கிறது. இரவு ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்து வரலாம்.

how to weight loss in tamil language

தானிய உணவுகள்

தானிய உணவுகளை வேகவைத்து சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தாலே உங்கள் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

அதே போன்று முளைகட்டிய தானியங்கள் கொஞ்சமாக தேன் சேர்த்து சாப்பிடலாம். முளைகட்டும் முறையால் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தைராய்டு போன்ற எதிர் ஊட்டச்சத்துக்கள் குறைக்கப்படுகின்றன.

இதனால் சிக்கலான ஸ்டார்ச்கள் உடைக்கப்பட், செரிமானத்திற்கு உதவும் நொதிகள் சுரக்கப்படுகின்றன.

how to reduce the weight in tamil

முட்டை

இரவு நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேக வைத்த முட்டைகளின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். வயிறு நிறையாவிட்டாலும் உடலுக்குத் தேவையான சத்துகள் மொத்தமும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டையின் வெள்ளைக்கரு என்பது புரதத்தின் அரசனாகும். வெள்ளைக்கரு மட்டும் உட்கொண்டால் புரதசத்தை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால்ஐ நீக்கி உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு

இரவு நேரங்களில் முழு சாப்பாடு மற்றும் அதிகப்படியான உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

இது உங்கள் உடல் எடையை மிக விரைவாக அதிகரிக்க செய்யும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இரவு நேர சத்தான கலோரிகள் குறைவான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் என்பதால் இங்கே சொன்ன இந்த உணவு முறை பின்பற்றினால் உடல் எடையில் ஒரே மாதத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning