பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil

பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil

இந்த கீரையில் நோய் எதிர்ப்பு சக்த , அதிக அளவில் காணப்படுகிறது. எனவே அடிக்கடி இந்த கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் பல வகையான நோய்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளலாம்.

பசலைக் கீரையில்,பல வகைகள் காணப்படுகின்றன. நாம் இந்த பதிவில் பல வகையான பசலைக் கீரையின் பயன்களையும் காணலாம்.

பசலை கீரை வகைகள்

குத்து பசலைக் கீரை

நம் உடலில் புது ரத்தத்தை உருவாக்கி உடலுக்கு நல்ல பலனைத் தருகிறது. இந்த இலையை நம் உடலில் கொப்புளம், வீக்கம் இருக்கும் இடத்தில் சிதைத்து நாம் அதனைப் பயன்படுத்தும் போது இவைகள் அனைத்தும் மிக விரைவில் குணமாகும்.

இதன் இளம் தண்டை அரைத்து வேர்க்குரு, கை கால் எரிச்சல் போன்றவற்றிற்கு தடவினால் மிக விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

பசலைக் கீரை சாப்பிடுவதால் நீர் அடைப்பு, வெள்ளை ஒழுக்கு, மூத்திரக் கடுப்பு போன்றவை நீங்கும்.

மலச்சிக்கல், தொந்தி பிரச்சனை போன்றவற்றிற்கு இந்த கீரை நல்ல நிவாரணியாக காணப்படுகிறது.

கால், கை, மூட்டுக்களில் வரக்கூடிய வாதத்தையும் போக்கக் கூடிய தன்மை இந்த பசலைக் கீரைக்கு உள்ளது.

இந்த கீரையின் சாறு, முகப்பருக்களையும் நீக்கக் கூடிய தன்மை கொண்டது.

வெள்ளை பசலைக் கீரை

வெள்ளை பசலைக் கீரையை நம் உணவில் பயன்படுத்துவதன் மூலம் மூத்திரத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்கின்றது.

pasalai keerai benefits

கொடிப்பசலை

நாம் கொடிப்பசலையை உணவில் எடுத்துக் கொள்ளும்போது நம்முடைய தாகம், உடல் சூடு போன்றவற்றை தவிர்க்கின்றது.

பாசிப்பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் வெள்ளை வெட்டை நோய்கள் சரியாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கொடிப் பசலையை சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கின்றது.

குழந்தைகளுக்கும் இதன் தண்டின் சாற்றை நாம் கற்கண்டுடன் சேர்த்து குடிக்கக் கொடுத்து வந்தால் அது ஜீரண வளர்ச்சிக்கு உதவுவதோடு சளி, நீர்க்கோவை போன்றவற்றையும் மிக விரைவில் சரியாக்குகின்றது.

இது இரும்புச் சத்தை அதிகரிக்கின்றது. ஆண், பெண் நல்லுறவை ஏற்படுத்துகின்றது.

பசலைக்கீரை பயன்கள்

சிலோன் பசலைக் கீரை

சிலோன் பசலைக் கீரை சாப்பிடுவதனால் வாதம், பித்தம், கபம் ஆகியவை, மிக விரைவில் குணமாகின்றன.

கண்களுக்கு அதிக நன்மை தருகின்றது. இந்த பசலைக் கீரையுடன் நாம் பருப்பு சேர்த்து சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, ஆகியவையும் மிக விரைவில் நீங்குகின்றது.

இந்த கீரையை, நாம் அதிக அளவில், உணவில் பயன்படுத்துவதால், ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவையும் மிக விரைவில் குணமாகின்றது.

pasalai keerai images

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning