பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? பழங்கள் எப்படி சாப்பிட வேண்டும்?
பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும்? பழங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? என்று பார்ப்போம். தினமும் பழங்கள் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பது நிச்சயமான உண்மை. பழங்களில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் நிரம்பி உள்ளன.
முக்கியமாக நமது திசுக்களை அழிந்து விடாமல் பாதுகாக்கும் தாவர இரசாயனங்கள் பழங்களில் உள்ளதால் பல தீவிர நோய்கள் வராமல் தடுக்க முடியும். முக்கியமாக தினமும் பழங்கள் சாப்பிடு பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிப்பதால் நம்மை நோய்கள் நெருங்காது.
அதே சமயம், பழங்கள் சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் அனைவருக்கும் இருக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு பழங்கள் சாப்பிடுவதில் நிறைய இருக்கும். எந்த பழங்கள் சாப்பிடுவது? எதை சாப்பிடக் கூடாது? எப்படி சாப்பிடுவது? எப்படி சாப்பிடக்கூடாது? இப்படி நிறைய சந்தேகங்கள் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவு அனைவருக்குமே பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்.
வளர்ச்சிதை மாற்றம்
பொதுவா பழங்கள் மிகவும் ஆரோக்கியமான நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்தவை. இதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள், உடலின் வளர்ச்சிதை மாற்ற நடவடிக்கைகளில் சரியான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம்.
பழங்களில் உள்ள தாவர இரசாயனங்கள், நமது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றவும், உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
முக்கியமாக தலைமுடி ஆரோக்கியமாக வள, சருமம் பொலிவாக இருக்க, இதயம் ஆரோக்கியமாக இருக்க, குடல் ஆரோக்கியம், கல்லீரல் ஆரோக்கியம், மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்க, ஞாபக சக்தி அதிகரிக்க, கண்களின் ஆரோக்கியம் மேம்பட, புற்றுநோய் வராமல் தடுக்க என்று, பழங்கள் பல நன்மைகளைத் தருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
முக்கியமாக, வயதான காலத்தில் வரக்கூடிய நோய்களை வராமல் தடுக்கும் சக்தி, இந்த பழங்களுக்கு உண்டு. உண்மையில், எல்லா பழங்களுமே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை என்றாலும் சிட்ரஸ் பழங்கள் மிக முக்கியமானது.
அந்த வகையில், எலுமிச்சை, நெல்லிக்கனி, கொய்யாப்பழம், திராட்சை, கிவி பழங்கள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, கமலா ஆரஞ்சு, மாதுளை இவைகள் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் ஆகும்.
இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே, நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
சுறுசுறுப்பாக இருக்க
காலையில் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
அது மட்டுமல்ல இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.
இளமையான தோற்றம்
பப்பாளியை எடுத்துக் கொண்டால் இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் சருமத்திற்குத் தேவையான கொலாஜன்ஐ உற்பத்தி செய்யும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் சருமம் விரைவில் தொய்வடையாமல் இளமையாக இருக்கும்.
பழங்களில் அதிக நீர்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடு பொழுது நம் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கி நம்மை என்றும் சுறுசுறுப்பாக வைக்க உதவும். இப்படி ஒவ்வொரு பழங்களும், ஒவ்வொரு நன்மைகளை கொண்டுள்ளது.
பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்
நிறைய பேருக்கு உள்ள ஒரு சந்தேகம் பழங்களை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்? எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது என்பதே.
உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடனும் புத்துணர்வுடன் இருக்கச் செய்யும். அதிலும் காலை நேர உணவாக, பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் இன்னும் நல்லது.
அதாவது நமது ஆற்றல் மேம்பட்டு உடலின் செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருக்கும். குறிப்பாக செரிமான மண்டலம் ஆரோக்கியமாக செயல்படும்.
குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதற்கு இந்த பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள்தான் காரணம்.
மேலும், உடலுக்கு வேண்டிய ஆன்டிஆக்ஸிடென்ட் முழுமையாகக் கிடைக்கும்.
அனைத்துப் பழங்களிலும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதால் free radicalகளால் ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டு உடலைத் தாக்கும் தொற்று நோய்கள் தாக்காதவாறு உடலைப் பாதுகாக்கும்.
முக்கியமாக பழங்களில் நீர்சத்து அதிக அளவில் உள்ளதால் இது உடலை வறட்சியின்றி பராமரிக்கும்.
அதே போன்று மலச்சிக்கல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள் நார்ச்சத்து மற்றும் நீர்சத்து உள்ள பழங்களை அதிகம் உண்பதால் நல்ல பலன் கிடைக்கும்.
பழங்களை எப்போது சாப்பிட கூடாது
How to Eat Fruit Properly in Tamil உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து, பழங்கள் சாப்பிடலாம். அதாவது, கால மதிய இடைவெளியில் மாலை இடைவெளியில் அல்லது இரவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.
முக்கியமாக சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடக் கூடாது. காரணம் சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
சாப்பிட்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானம் ஆகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டப் போகும். இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கலாமா
பழச்சாறு தயாரிக்கும் பொழுது அதன் சுவைக்காக வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொண்டால் அதன் மருத்துவ நன்மைகள் கிடைக்காமலே போய்விடும்.
முக்கியமாக பழச்சாறு பிழியும்போது தோலை நீங்கி விடுவதால் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்காது.
எனவே பழங்களை துண்டுகளாக நறுக்கி சாப்பிடுவதே சிறந்த முறையாகும். இதனால் நார்ச்சத்தும் கிடைக்கும். வெள்ளை சர்க்கரையும் சேர்க்க வேண்டிய தேவையில்லை.
பழச்சாறுஆக குடிக்கும் பட்சத்தில் அதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிடலாம்.
பழங்களில் சுவையை அதிகரிக்க
பொதுவா பலாப்பழம் சாப்பிட்டால்மந்தமான உணர்வு உண்டாகும் அந்த உணர்வை தடுக்க, அதனுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். அதேபோன்று கொய்யாப்பழம் சாப்பிடு பொழுது தொண்டை கரகரப்பது போன்று தோன்றினால் மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.
மேலும் வெள்ளரி மற்றும் விளாம்பழம் சாப்பிடு பொழுது பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் சுவை அதிகரிக்கும். இப்படி ஒவ்வொரு பழங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா
சர்க்கரை நோயாளிகள் பழங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது தவறான நம்பிக்கை. தினமும் சில துண்டுகள் கொய்யா, ஆப்பிள் ஆகியவை அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.
முக்கியமாக இவர்கள் தினமும் ஏதாவது ஒரு சிட்ரஸ் பழம் சாப்பிட்டு வருவது நல்லது. அதே போன்று எலுமிச்சை, நெல்லிக்கனி திராட்சை, கிவி பழங்கள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பப்பாளி, கமலா, ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வரலாம்.
மற்ற பழங்களை துண்டுகளாக நறுக்கியோ அல்லது ருசித்து மென்று சாப்பிட்டால்தான் அவற்றில் உள்ள நார்ச்சத்தும், ஊட்டச்சத்துக்களும் முழுமையாக கிடைக்கும்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்ப்பது நல்லது. அதே சமயம் மற்ற பழங்களை பொறுத்தவரையில் மிகவும் கனிந்த பழமாக இல்லாமல் செம்பழமாக அதே சமயம் அளவாக சாப்பிடுவது நல்லது.
முக்கியமாக ஜூஸ் போன்று குடித்தால் உடனே இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் பழங்களை நறுக்கி சாப்பிடுவதே நல்லது.
உண்மையில் நாவல் பழம் சர்க்கரை நோயாளிகளுக்காகவே இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான பழமாகும். இதன் விதைகளும் ரத்தத்தில் சர்க்கரை அளவே சீராக வைக்கக்கூடியவை.
விதையற்ற பழங்களை சாப்பிட கூடாது
மிக முக்கியமாக தற்போது எங்கும் மலிவாக கிடைக்கும் விதையற்ற(seedless) திராட்சை மாதுளை போன்ற ஹைபிரிட் (hybrid) ரகங்கள் நாவிற்கு மட்டுமே சுவை கொடுக்குமே தவிர சத்துக்களை கொடுக்காது.
எனவே அனைத்திலுமே விதை உள்ள பழங்களாக பார்த்து வாங்கி சாப்பிடுவதே நல்லது. உண்மையில் தினமும் பழங்கள் சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. மருத்துவரிடம் செல்ல அவசியமே இருக்காது.
இதனையும் படிக்கலாமே
- தேமல் மறைய பாட்டி வைத்தியம் | Thembal Treatment in Tami
- சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா?
- காட்டுயானம் அரிசி பயன்கள் | Kattuyanam Rice Benefits in Tamil
- காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்
- பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil
- கொத்தமல்லி நன்மைகள் | Kothamalli Benefits in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
- குங்குமப்பூ பயன்கள் | Kungumapoo Benefits in Tamil
- வெந்தய கீரை பயன்கள் | Vendhaya Keerai Benefits
- உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் 10 உணவுகள்
- இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
அனைவரும் நமது வலைத்ததளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
How to Eat Fruit Properly in Tamil
9 Comments
Comments are closed.