தேமல் மறைய பாட்டி வைத்தியம் | Thembal Treatment in Tamil

தேமல் மறைய பாட்டி வைத்தியம் | Thembal Treatment in Tamil

தேமல் எப்படி ஏற்படுகிறது

தேமல் சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கின்றது. வெப்பமண்டல நாடுகளில் வசிப்பவர்களுக்கு தேமல் படை நோய்கள் அதிக அளவில் ஏற்படுகின்றது.

அதிக அளவில் வியர்வை வருவதன் காரணமாக வியர்வையின் மூலமாக எளிதில் இந்த தேமலானது ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவுகிறது. தோலில் ஏற்படுகின்ற காளான் நோய்களில் முதன்மையாக இருப்பது இந்த தேமல் தான்.

முகத்தில் தேமல் மறைய

தேமல் அறிகுறி

கை கால் பகுதிகள் மற்றும் முகம், கழுத்து பகுதி, முதுகு பகுதி, மார்பகங்கள், தோள்பட்டை ஆகிய இடங்களில் தோழி நிறம் ஆனது சற்று குறைந்து, வட்ட வட்டமாக திட்டு திட்டாக காணப்படுவது தான் இந்த நோயிற்கான அறிகுறி.

படை ஏற்பற்ற இடங்களை சுற்றி அரிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்று.

யாருக்கெல்லாம் தேமல்  வரும்

இயல்பாகவே உடலில் அதிக அளவில் வியர்வை சுரப்பவர்களுக்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை நீண்ட நாட்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த தேமல் பிரச்சினையானது அடிக்கடி ஏற்படும்.

சுய சுத்தம் இல்லாமல் இருப்பவர்களும், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களும், அதிக அளவு மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் வசிப்போருக்கும், அதிக அளவில் தண்ணீர் புழக்கம் உள்ள இடங்களில் இருப்பவர்களுக்கும் இந்த தேமல் நோயானது எளிதில் தொற்றும்.

மேலும் இது வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றில் இருந்தும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

thembal skin problem solution

தேமல் மறைய பாட்டி வைத்தியம்

Tips 1

தேமல் பிரச்சனை உள்ளவர்கள் இனிப்பு உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக கசப்பான உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

Tips 2

வெந்தயம் மற்றும் கருவேப்பிலை நன்றாக பொடி செய்து சாப்பிட்டு வருவதன் மூலமாக தேமல் பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.

thembal skin problem in tamil

Tips 3

சுண்டக்காயினை குழம்பில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம் அல்லது வத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Tips 4

கருஞ்சீரகத்தினை நன்றாக வறுத்து அதனை பொடி செய்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தேமல் இருக்கக்கூடிய இடங்களில் தடவி வருவதன் மூலமாக தேமல் பிரச்சினையை சரி செய்யலாம்.

Tips 5

தேமல் இருக்கக்கூடிய இடங்களில் குப்பைமேனி இலை அல்லது வேப்பிலை இணைத்து தடவி வர மூலம் சரி செய்யலாம்.

themal skin disease in tamil

Tips 6

தேமல் உள்ளவர்கள் உடல் சூட்டினை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி இரண்டு முதல் மூன்று லிட்டர் வரையாவது தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ச்சி நிறைந்த உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். உடல் சூட்டினை அதிகரிக்க கூடிய உணவுகளினை எடுத்துக் கொள்ளாமல் தவிப்பது நல்லது.

முடிந்தவரை தினசரி இரண்டு முறை குளிப்பது அவசியம் முக்கியமாக உடலின் ஈரப்பதத்தினை நன்றாக துடைத்த பின்னரே ஆடை அணிய வேண்டும்.

Tips 7

குளிக்கும் சமயங்களில் நலங்கு மாவு என்று சொல்லக்கூடிய நன்றாக அரைக்கப்பட்ட பாசிப்பருப்பு மாவுடன் வெட்டிவேர் கோரைக்கிழங்கு, வேப்பிலை, சீரகம் இவற்றை பொடியாக செய்து தடவி வருவதன் மூலமாக தேமல் முற்றிலும் சரியாகும்.

Tips 8

சுத்தமான மஞ்சள்  எடுத்து நன்றாக இடித்து நல்லெண்ணெயில் காய்ச்சி தேமல் இருக்கக்கூடிய இடங்களில் தேய்த்து வருவதன் மூலமாக தேமல் குறையும்.

themal home remedies

Tips 9

துளசி இலை, வெற்றிலை ஆகிய இரண்டும் எடுத்து நன்றாக மை போன்று அரைத்து தேமல் இருக்கக்கூடிய இடங்களில் பூசி வருவதன் மூலமாக தேமல் குறையும்.

Tips 10

தொட்டால் சுருங்கி இலையினை நன்றாக அரைத்து சாறு பிழிந்து, அந்த சாரினை தேமல் இருக்கக்கூடிய இடங்களில் காலை, மாலை என இரு வேலைகளிலும் தடவி வருவதன் மூலமாக மிக விரைவில் தேமல் மறைவதை உணர முடியும்.

Tips 11

முட்டையின் வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப்பிஞ்சு ஆகிய மூன்றினையும் நன்றாக அரைத்து தேமல் இருக்கும் இடங்களில் தடவலாம்.

Tips 12

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சம் பல சாற்றினை பிழிந்து விட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.

மேலும் எலுமிச்சம் பழச்சாற்றினை தேமல் உள்ள இடங்களில் தேய்த்து சிறிது நேரத்திற்கு பின்னர் நன்றாக கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வருவதன் மூலமாக தேமல் குணமாகும்.

இதனையும் படிக்கலாமே

  1. சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
  2. மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil
  3. பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
  4. முளை கட்டிய பயறு பயன்கள் | Mulaikattiya Pachai Payaru Benefits in Tamil
  5. உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
  6. கோதுமை மருத்துவ பயன்கள் | Kothumai Benefits in Tamil
  7. குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Rice Benefits in Tamil

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning