உலர் பழங்கள் நன்மைகள் | Dry Fruits Benefits in Tamil

உலர் பழங்கள் நன்மைகள் | Dry Fruits Benefits in Tamil

 

ஒரு பக்கம் நோய்கள் அதிகரித்து வந்தாலும் மற்றொரு புறம் நம்மிடையே விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது.

உண்மையில் நம்மில் பலர் உணவு விஷயத்தில் அக்கறை காட்ட தொடங்கியுள்ளனர். முக்கியமாக நொறுக்குத்தீனிகள் என்று பார்க்கும் பொழுது நிறைய பேர் ஆரோக்கியமற்ற தவிர்த்து பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் என்று உளர் பழங்களை ( Nuts ) சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இது, நல்ல விஷயம் என்றாலும் நிறைய பேருக்கு, இதைப் பற்றிய சில சந்தேகங்களும் இருக்கும்.

  • உளர் பழங்களில் ( Nuts ) என்னென்ன சத்துக்கள் உள்ளது?
  • ஒரு நாளைக்கு எந்த அளவுக்கு சாப்பிடலாம்?
  • உளர் பழங்களை ( Nuts ) சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?
  • சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
  • முக்கியமாக யார், யார் அவசியம் சாப்பிட வேண்டும்?

இப்படி பல சந்தேகங்கள் பற்றி பார்ப்போம்.

dry fruits and nuts in tamil

உளர் பழங்களில் ( Nuts ) உள்ள சத்துக்கள்

ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம்

இந்த சத்து கடல் மீன்களில் உள்ளது போன்றே இதிலும் வளமாக உள்ளது. இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலமானது மனித உடலால் தயாரிக்க முடியாத சத்து என்பதால் உணவுகளின் மூலம் பெற முடியும்.

அந்த வகையில் சைவம் சாப்பிடுபவர்கள் உடலுக்கு நன்மை செய்யும் இந்த நல்ல கொழுப்பை பெற தினமும் உளர் பழங்கள் சாப்பிட்டு வரலாம்.

இது தமனிகளில் தங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுவதால் இதய நோய்கள் மற்றும், பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

அது மட்டும் அல்ல இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சியை உண்டாக்கவும், நரம்பு அணுக்களை வளர்க்கவும், அறிவாற்றல் நினைவுத்திறன் என ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

எனவே படிக்கும் மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை அவசியம் நட்ஸ் சாப்பிட்டு வருவது நல்லது.

வைட்டமின் ஈ

அனைத்து உளர் பழங்களில் ( Nuts ) வைட்டமின் ஈவளமாக உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்தாகும்.

இந்த வைட்டமின் இ தான் இளமையை தக்க வைக்கும் சக்தி கொண்டது.

கொலஸ்ட்ரால்

பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா இவற்றில் உள்ள நல்ல கொழுப்பானது ரத்த உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் சக்தி கொண்டவை.

இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதிகப்படியான கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இந்த உளர் பழங்களை ( Nuts ) தினமும் அளவாக சாப்பிட்டு வரலாம்.

fox nuts in tamil

ஞாபக சக்தி

அதே போன்று, படிக்கும் மாணவர்கள் சாப்பிடும் உணவில், உளர் பழங்கள் ( Nuts )ஐ சேர்த்து வந்தால் இதில் உள்ள போலிக் அமிலம், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் போன்ற சத்து மூளையில் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் நரம்பு மண்டலத்தை பாதுகாத்து ஞாபக சக்தி அதிகரிக்கும்.

கர்ப்பிணி பெண்கள் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை அறிவாளியாக ஆரோக்கியமாக பிறக்கும்.

வால்நட்

இதிலுள்ளஆல்பா லினோலெனிக் அமிலம் மன அழுத்தத்தைப் போக்கக் கூடியது. எனவே, வேலைப்பளு அதிகம் உள்ளவர்கள் தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தத்தில் இருந்து முற்றிலும் முடியும்.

அதே போன்று பிஸ்தாவை டயட்டில் சேர்த்து வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

முக்கியமாக இதில் அதிக அளவில் நுரையீரல் புற்றுநோய் தடுக்கும் இரசாயனம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

வால்நட்ஐ இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும்.

அதுமட்டுமல்லாமல் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும். முக்கியமாக, வளரும் குழந்தைகளுக்கு தினமும் ஐந்து வால்நட் கொடுத்து வந்தால் இது, மூளையின் ஆற்றலை நன்றாக தூண்டுவதால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

Dry Fruits Benefits in Tamil

ஆண்கள் ஆரோக்கியம்

ஆண்கள் தினமும் சிறிதளவு நட்ஸ் சாப்பிட்டு வந்தால் அவர்களின் விந்தணுவின் தரமான அதிகரிக்கும். மேலும் உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும்.

முக்கியமாக நட்ஸ்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானதும் அதிகரிக்கும்.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களைப் பொறுத்தவரையில் தினமும் ஊற வைத்த வால்நட் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோயை, தவிர்க்கலாம்.

மேலும் இதில், அதிக அளவில் வைட்டமின் பி ஏழு சத்துக்கள் இருப்பதால் தலைமுடி உதிர்வதையும் தடுத்து நன்றாக வளர செய்யும்.

தினமும் உளர் பழங்கள் ( Nuts ) அதிகம் சாப்பிடலாமா?

இதனால் உடல் எடை அதிகரிக்குமா?

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

உண்மையில் எண்ணிலடங்கா நன்மைகளைக் கொண்ட நட்ஸ்களில் அதிகப்படியான கலோரி மற்றும் கொழுப்பு இருப்பதினால் ஒரே நேரத்தில் அதிகப்படியாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டியது, அவசியம்.

ஒரு நாளில் எந்த உளர் பழங்கள் ஆக இருந்தாலும் ஒரு கைப்பிடிக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • வால்நட் என்றால் ஐந்து போதுமானது.
  • முந்திரி என்றால் ஐந்து அல்லது, ஆறு பருப்புகள் போதுமானது.
  • பாதாம் பருப்பு என்றால் பத்து பருப்புகள் போதுமானது.

நிறைய பேர் TV பார்த்துக்கொண்டே பக்கத்தில் நட்ஸ் வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயம்.

இப்படி சாப்பிட்டால் நிச்சயம் கலோரி அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும். அதோடு செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

உண்மையில் ஒரு நட்ஸில் எண்பது சதவீதம் கொழுப்பு உள்ளது.

இந்த கொழுப்பு மிகவும் ஆரோக்கியமான கொழுப்பு என்றாலும் அதிகம் கொண்டுள்ளது. எனவே இவற்றை அளவாக சாப்பிட்டு வரலாம்.

உண்மையில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதற்கும் பொருந்தும்.

nuts benefits in tamil

இரவில் உளர் பழங்கள் ( Nuts ) சாப்பிடலாமா?

நட்ஸ் சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லக்கூடாது. தூங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடலாம்.

அதோடு சுவைக்காக, இனிப்பு, காரம், உப்பு என்று சேர்த்து சாப்பிட்டால் அதன் மருத்துவ நன்மைகள் கிடைக்காமல் போகலாம்.

மாறாக இதனால் தீமைதான் வரும். எனவே அப்படியே பச்சையாக சாப்பிடலாம். முக்கியமாக வறுத்து சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும்.

காரணம் வறுக்கப்பட்ட உலர் பழங்களில் ஆரோக்கியமான கொழுப்புகள் எல்லாம் குறைந்துவிடும்.

சர்க்கரை நோயாளிகள் நட்ஸ் சாப்பிடலாமா?

அனைத்து நட்ஸ்களிலும் நார்ச்சத்துக்கள் மிகுந்துள்ளதால் இவைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ஆரோக்கிய இழப்பை நட்ஸ் சாப்பிடுவதால் ஈடுகட்ட முடியும். அதே போன்று நட்சில் உள்ள அமினோ அமிலங்கள் தமனியில் சுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

மேலும் புரதங்களும் இதில் நிறைந்துள்ளதால் நமது தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, உளர் பழங்களை அளவாக சாப்பிட்டால் அதிக நன்மைகளை பெற முடியும்.

எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அளவாக சாப்பிட்டு வரலாம். முக்கியமாக வளரும் குழந்தைகள் படிக்கும் மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், அவசியம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்

Related Posts

3 Comments

  1. Pingback: bonanza178 slot

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning