நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் | Naval Palam Uses in Tamil

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் | Naval Palam Uses in Tamil

ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் இந்த நாவல் பழத்தை சாப்பிட்டால் பல அரிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை தரும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, விட்டமின் சி, விட்டமின் பி என்று நிறைய சத்துக்கள் உள்ளன.

நாவல் பழத்தில் மட்டுமல்ல இதன் இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாடுகலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாக்பெர்ரியைவிட இந்த நாவல் பழம் பல மடங்கு சத்துக்கள் கொண்டது.

Naval Palam benefits in tamil

அந்த வகையில் இங்கே, நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பத்து மிக முக்கியமான நன்மைகள் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். உண்மையில் இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கும் தெரிந்தால் இதெல்லாம் தெரியாமல் இருந்து விட்டோமே என்று நினைப்பீர்கள்.

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் | Naval Palam Uses in Tamil

ஹீமோகுளோபின் எண்ணிக்கை

இந்த நாவல் பழம் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. காரணம் இதில் அதிக அளவில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் தேவையான இரும்பு சத்து மற்றும் இரும்பு சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சியும் வளமாக உள்ளது.

இந்த ஹீமோகுளோபின்தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. இப்படி ஆக்ஸிஜன் அனைத்து உறுப்புகளுக்கும் சரிவர சென்றால்தான் உடல் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இயங்க முடியும். எனவே, ஹீமோகுளோபின்குறைவாக உள்ளவர்கள் நாவல் பழ பருவகாலதில், தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நாவல் பழம் நன்மைகள்

சரும ஆரோக்கியம்

பொதுவாக நம்முடைய முகத்தில் சுருக்கங்கள் பருக்கள் இருந்தால் என்னதான் கலராக இருந்தாலும் பார்க்க, வசீகரமாக இருக்காது. அந்த வகையில், சரும சுருக்கம் மற்றும் முகப்பரு இவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் துவர்ப்பு பண்புகள் இந்த நாவல் பழத்தில் நிறைந்துள்ளன.

அதுமட்டுமல்ல, இதில் உள்ள அதிக vitamin C, இரத்தத்தையும் சுத்தப்படுத்துவதால், நம்முடைய சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.

முக்கியமாக வெண்புள்ளி இருப்பவர்கள் இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் | Naval Palam Uses in Tamil

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த நாவல் பழத்தை சாப்பிட்டு வர வேண்டியது அவசியம். இது குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

அது மட்டுமல்ல, இதன் விதையில் உள்ள டெம்போ லைன் உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். எனவே இந்த நாவல் விதையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தி

இந்த நாவல் பழத்தில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்சிஜன் ஏற்றிகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

அதே போன்று, இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளும் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

எலும்புகள் வலிமை

இந்த நாவல் பழத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. நாம் சாப்பிடும் உணவில் உள்ள கால்சியத்தை உறிஞ்ச மக்னீசியம் சத்து அவசியம்.

எனவே எலும்புகளின் வலிமையை அதிகரிக்க இந்தபருவகாலதில் கிடைக்கும் நாவல் பழத்தை நிறைய சாப்பிடுங்கள். முக்கியமாக இது எலும்பை வலுவாக வைத்துக் கொண்டு, எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் Naval Palam Uses in Tamil

சிறுநீர் எரிச்சல்

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் ஏற்படும். இதை குணப்படுத்த நாவல் பழ சாற்றில் மூணு தேக்கரண்டி எடுத்து ஒரு தேக்கரண்டி நாட்டு சர்க்கரையுடன் கலந்து குடிக்க வேண்டும்.

இப்படி தினமும் காலை, மாலை என இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் | Naval Palam Uses in Tamil

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கடுமையான வலியால் துடித்துப் போவார்கள். இவர்கள்இந்த நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

Naval Palam Uses in Tamil

மஞ்சள் காமாலை

தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால், குடல், இரைப்பை மற்றும் இதயத்தின் தசைகள் வலுவாகும். அதே போன்று கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும், மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக்கூடியது.

இரத்த ஓட்டம்

இதில் உள்ள இரும்பு சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் பல்வேறுபி குடும்ப வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், இது ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது.

இதனால் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் சரியான அளவு ஆக்சிஜென் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கச் செய்து வறட்சியை ஊக்குவிக்கிறது.

நாவல் பழத்தின் மருத்துவ பயன்கள் | Naval Palam Uses in Tamil

Naval Palam images

புற்றுநோய்

இதில் புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய அதிகப்படியான ஆக்ஸிஜனேற்ற மற்றும், புற்றுநோய் எதிர்ப்புபண்புகளைக் கொண்டுள்ளது. இவைகள் புற்றுநோய் செல்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கக் கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை கொண்ட எனவே நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரும்பொழுது புற்றுநோய் வராமல் தடுக்கும்.

எனவே நாவல் பழத்தை இனி அவசியம் வாங்கி சாப்பிடுங்கள். உண்மையில் அந்தந்த பருவகாலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களை சாப்பிட்டு வந்தால் நம்மை நோய்கள் நெருங்கவே முடியாது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: Cartel oil co
  2. Pingback: bk8
  3. Pingback: university

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning