பூவன் வாழைப்பழம் பயன்கள் | Poovan Banana Benefits Tamil  

 பூவன் வாழைப்பழம் பயன்கள் | Poovan Banana Benefits Tamil  

விலை மலிவானதும் எங்கும் எளிதாக கிடைக்கக்கூடியது இந்த பூவன் வாழைப்பழங்கள். சொல்லப்போனால் இது இல்லாத பெட்டிக் கடைகளே இல்லை என்றே சொல்லலாம். இது அளவில் சிறியதாக இருந்தாலும் குணத்தில் மிக மிகப்பெரியது.

பொதுவா எதுவுமே எளிதாக கிடைத்து விட்டால் அதன் மதிப்பு நமக்கு தெரிவதில்லை இது, இந்த பூவன் பழத்திற்கும் பொருந்தும். உண்மையில் இந்த பூவன் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு பாருங்கள்.

ஏகப்பட்ட நன்மைகள் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளப் போவது தினமும் ஒரு பூவன் பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன? யாரெல்லாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்? சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? என்பது  பற்றி பார்ப்போம்.

பூவன் வாழைப்பழம் பயன்கள் | Poovan Banana Benefits Tamil

Poovan Banana Benefits Tamil  
Poovan Banana Benefits Tamil

பூவன்  வாழைப்பழத்தில் பழத்தில் உள்ள சத்துக்கள் 

இந்த பூவன் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் என பல ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது.

மலச்சிக்கல்  பிரச்சனை 

மலச்சிக்கல் உள்ளவர்கள், அதிக நார்ச்சத்து உள்ள இந்த பூவன் பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கம் சீராகி மலம் எளிதாக வெளியேறும்.

உண்மையில் மலச்சிக்கல்தான் பல நோய்களுக்கு அடிப்படையே. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கும் முன்பு ஒரு பூவன் பழம் சாப்பிட்டு இளம் சூடான வெந்நீர் குடித்து வருவது நல்லது.

செரிமான  பிரச்சனை 

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை மற்ற உணவுகளை தவிர்த்துவிட்டு இந்த வாழைப்பழத்தை மட்டும் ரெண்டு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

இதில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.

பூவன் வாழைப்பழம் பயன்கள்

அல்சர்

அல்சர்  உள்ளவர்கள், இதை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட அல்சர் பிரச்சனைகள் கூட குணமாகும்.

அதிலும் நன்றாக கனிந்த பழத்தை சாப்பிட்டால் புண்ணுடன் கூடிய அலட்சியம் குணமாக்கும்.

பூவன் வாழைப்பழம் பயன்கள் | Poovan Banana Benefits Tamil

செரட்டோனின் ஹார்மோன்

இதில் உள்ள செரட்டோனின் என்ற மிக முக்கியமான ஹார்மோன் நமது மனம் மகிழ்ச்சியாக இருக்க செய்கிறது.

அதாவது மூளையில் இயற்கையாக செரட்டோனின் உருவாக்க இது உதவுகிறது. மேலும் பூவன் பழத்தில் உள்ள மெலட்டோனின் தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு உடலின்  இயற்கையான சுழற்சியும் ஒழுங்குபடுத்தும்.

பூவன் வாழைப்பழம் பயன்கள் Poovan Banana Benefits Tamil  

நோய் எதிர்ப்பு சக்தி 

துத்தநாகம், வைட்டமின் ஏ, செலினியம் மற்றும் புரதம் என, பல சத்துக்களைக் கொண்ட இது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் அதிக அளவில் வழங்குகிறது.

முக்கியமாக தசைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது. சோர்வான தசைகளை வலுவாக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம் 

இதில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து, இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. குறிப்பாக இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் சீராக இயங்க உதவி செய்கிறது.

பொதுவா பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறந்தது என்பதால்பொட்டாசியம் அதிகம் உள்ள இந்த பூவன் பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆபத்தான நோய்களை தவிர்க்க முடியும்.

கண் பார்வை 

தினமும் ஒரு பூவன் பழம் சாப்பிட்டு வரும்பொழுது இதிலிருக்கும் அதிக வைட்டமின் ஏ சத்து கண் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது.

poovan banana images

இரும்பு சத்து

இதில் உள்ள அதிக இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் இதில் உள்ள அதிக இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை போக்கக்கூடியது. அதே போன்று இதில் உள்ள பொட்டாசியம் சத்து உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது.

இதனால் மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. நரம்புகளையும் சீராக வைக்க உதவுகிறது.  மாலை நேரங்களில் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிட்டு வருவது நல்லது.

முக்கியமாக இதனால் இரவு நேரத்தில் நன்றாக தூக்கமும் வரும்.

கர்ப்பிணி பெண்கள் 

சில கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் எழுந்த உடன் தலைசுற்றல், உடல் சோர்ர்வு , வாந்தி மயக்கம் போன்றவை ஏற்படக்கூடும்.  இந்த சமயங்களில் உடலில் சத்து  இழந்து காணப்படுவார்கள்.

இவர்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் இழந்த சக்தி திரும்பக் கிடைக்கும். முக்கியமாக உடல் சூட்டையும் குறைக்கக்கூடியது.

புகை பழக்கம் 

புகை பிடிப்பவர்களுக்கு அந்த பழக்கத்தை கைவிட இது ஒரு சிறந்த மருந்தாகும். அதாவது புகை பிடிக்கும் எண்ணம் மனதில் தோன்றும் பொழுது அந்த சமய ஒரு பூவன் பழம் சாப்பிட்டால் அந்த எண்ணம் மாறிவிடும்.

மேலும் இதில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம் சத்துக்கள் புகைப்பிடிப்பதால் உண்டான நிக்கோடின் கிருமிகளை உடலிலிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது.

poovan banana side effects in tamil

காலை உணவு

முக்கியமாக காலை நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ள முடியாவிட்டால் இரண்டு வாழைப்பழங்களை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான மாவு சத்தும் சத்தும் கிடைத்துவிடுகிறது.

இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், மதிய உணவு எடுத்துக் கொள்ளும் வரை, பசி இல்லாமலும் இருக்கும் .

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? 

ஒரு நடுத்தர அளவு  வாழைப்பழத்தில்14 கிராம் சர்க்கரையும், 6 கிராம்  ஸ்டார்ச்சும் உள்ளது. அதே நேரம் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும்  கொண்டதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக வாழைப்பழம் சாப்பிடலாம்.

மேலும் 

அதே சமயம், அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளோடு சேர்த்து சாப்பிடாமல் தனியாக சாப்பிடுவது நல்லது.

அதாவது காலையில் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரண்டு இட்லி சாப்பிடலாம்.

அவ்வாறு  சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்து ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் மிகுந்த கனிந்த பழமாக இல்லாமல் கெட்டியான பழமாக சாப்பிடுவது நல்லது.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

8 Comments

  1. Pingback: url
  2. Pingback: 77bet
  3. Pingback: bitcoin news

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning