பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil

பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil

நமது முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவு முறைகளிலும் ஏதேனும் ஒரு நன்மை இருந்தது. ஆனால் நாம் இப்பொழுது பயன்படுத்துகின்ற உணவு முறைகளில் ஒரு சிலவற்றில் எந்தவித சத்துக்களும் கிடையாது.

உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கிறது என்று தெரிந்தும் நாம் உண்ணுகின்றோம். நாம் சாப்பிடுவதற்கு அரிசி சன்னமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

ஆனால் அந்த காலங்களில் மனிதனுக்கு சத்துக்களை தரும் அரிசிகள் பட்டத்தை தீட்டப்படாத அரிசிகளாக இருந்தன. அந்த வகையில் இன்று நாம் மிகவும் பயனுள்ள பூங்கார அரிசியின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம்.

poongar rice in tamil

பூங்கார் அரிசி

பூங்கார் அரிசி ஆனது 1980 இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து காப்பாற்றப்பட்ட ஒரு நெல்வகை.

இந்த நெல் வகையின் சிறப்பு என்னவென்றால் வறண்ட நிலத்திலும், சிறிய நீர் தேக்கம் உள்ள இடங்களிலும் வளரக்கூடியது இந்த பூங்கார் அரிசி.

பூங்கார் அரிசியில் உள்ள சத்துக்கள்

  • ஜிங்க்
  • அயன்
  • வைட்டமின் பி1
  • நார்ச்சத்து
  • கார்போஹைட்ரேட்
  • ஆன்டி-ஆக்சிடென்ட்
  • தயாமின்

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களுக்கான அரிசி என்று கூறப்படுவதற்கு காரணம், எந்தவித ஹார்மோன் மாற்றம் ஏற்பட்டாலும் அதை தடுத்து ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்க கூடிய சத்து இதில் அடங்கியுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களை பெறுவதற்கும், குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

சுகப்பிரசவம் பெற விரும்பக்கூடிய பெண்கள் ஏழாவது மாதம் முதல் இந்த பூங்காறு அரிசியினை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் சுகப்பிரசவத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும் பாலூட்டும் தாய்மார்கள் பால் சுரக்கவும் மகப்பேறு அடைவதற்கும் இது பெரிதும் உதவியாக உள்ளது.

பூங்கார் அரிசி மருத்துவ பயன்கள்

அல்சர்  குணமாக

இதில் இருக்கக்கூடிய வைட்டமின் பி1 வயிற்றுப்புண் காரணமாக ஏற்படக்கூடிய அல்சர் இணை குணப்படுத்த உதவுகின்றது.

குழந்தை ஆரோக்கியம்

சிறு குழந்தைகளுக்கு இந்த அரிசி இணை உணவாகக் கொடுப்பதன் மூலமாக செரிமான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கும்.

சர்க்கரை நோய் குணமாக

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த பூங்கார் அரிசி இணை உணவாக சாப்பிட்டு வரும்பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும்

நமது முன்னோர்கள் உடல்நலமானது ஆரோக்கியமாக இருப்பதற்கும் எந்த ஒரு தொற்று நோய்களும் எளிதில் நம்மை அண்டாமல் இருப்பதற்கும் பெரிதளவில் பயன்படுத்தி வந்த அரிசி வகைகளில் இந்த பூங்கார் அரிசி மிகவும் முக்கியமான ஒன்று.

Poongar Rice Benefits in Tamil

பூங்கார் அரிசி சமைக்கும் முறை

எந்த வகையான அரிசியாக இருந்தாலும் அதனை நன்றாக கழுவி அதன் பின் 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அரிசியை தண்ணீரிலே நன்றாக வேக வைக்கலாம். இது இன்னும் சுவையினை கூட்டிக் கொடுக்கும். பூங்கார் அரிசியினை நன்றாக வேக வைத்து சாதமாக சாப்பிடலாம்.

அரிசியை ஊறவைத்து நிழலில் உலர்த்தி ஒன்று, இரண்டாக அரைத்து அதனை மாவாக்கி அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து புட்டு போன்று செய்து சாப்பிடலாம்.

இந்த அரசியலை மாவாக அரைத்து பால் கொழுக்கட்டை, இடியாப்பம் இது போன்றும் செய்து சாப்பிடலாம்.

தினசரி காலையில் இந்த பூங்கா அரிசியினை பயன்படுத்தி தோசை, இட்லி, கஞ்சி இது போன்ற முறையில் சாப்பிட்டு வரலாம், இந்த பூங்கார் அரிசி எந்த ஒரு பக்க விளைவும் தராத ஒன்று.

இந்த அரிசியை அனைத்து வயதினரும் தாராளமாக சாப்பிடலாம்.

மிகவும் குறிப்பாக நோயுற்றவர்கள் இந்த அரசினை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: naga356
  2. Pingback: คอริ่ง
  3. Pingback: Terrorism

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning