சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா? 

சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா? 

சுட்டெரிக்கும் வெயில்  தொடங்கிவிட்ட நிலையில் வெயிலை சமாளிக்க சில குளிர்ச்சியான உணவுகளை சேர்த்தே ஆக வேண்டும்.

பொதுவாகவே  அந்தந்த பருவ கால நிலைக்கு ஏற்ப சில உணவுகளை சேர்த்துக் கொண்டால்தான் பருவ கால மாற்றத்தை சமாளிக்க முடியும்.

அந்த வகையில் கோடை காலத்தை சமாளிக்கக்கூடிய சப்ஜா விதை பற்றிதான் இங்கே  பார்க்கப் போகிறோம். உண்மையில் இதை இந்தியாவில் மட்டுமல்ல  அமெரிக்காவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

அந்த வகையில் இந்த சப்ஜா விதை பற்றிய நிறைய சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கும்.அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா

சப்ஜா விதை  

திருநீற்றுப்பச்சிலை என்ற செடியின் விதைதான்  இந்த சப்ஜா விதை. நம் முன்னோர்கள் எல்லாம் இதைப் பற்றி தெரிந்தும், பயன்படுத்தியும், பயனடைந்தும் வந்துள்ளனர்.

இந்த சப்ஜா விதை பார்ப்பதற்கு எள் போன்று இருக்கும். இதில்  கலோரிகள் குறைவான அளவில் இருப்பதாலும்  அதிக அளவில்   ஊட்டச்சத்து இருப்பதாலும் இது அற்புதமான உணவாகும்.

sabja seeds health benefits in tamil

சப்ஜா விதையில் உள்ள சத்துக்கள் 

ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்பு சத்து உள்ளிட்ட  பல முக்கிய சத்துக்கள்  இதில் நிறைந்துள்ளன. இந்த சப்ஜா விதை  அனைத்து நாட்டு மருந்து கடை மற்றும் பல் பொருள் அங்காடிகலிலும்  கிடைக்கிறது.

நிறைய பேருக்கு உள்ள ஒரு சந்தேகம் இதை ஊற வைக்காமல் சாப்பிடலாமா? என்று. ஊற வைக்காமல் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் ஊற வைத்துதான் சாப்பிட வேண்டும்.

இந்த விதையை, ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைத்தாலே போதும் உறிஞ்சிக்கொண்டு உப்பிக்கொண்டு பார்க்கவே அழகா இருக்கும்.

இந்த ஊறிய சப்ஜா விதை அதிக நார்ச்சத்துக்கள் கொண்டது. . உண்மையில் கோடையில் ஏற்படக்கூடிய பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. இப்பொழுது  ஒவ்வொன்றாக பார்ப்போம்.

உடல் சூடு குறைய 

பொதுவாக கோடையில் அதிக வெப்பத்தின் காரணமாக உடல் சூடு அதிகரிக்கும். இதனால் பலருக்கு கண் எரிச்சல்,  உடல் முழுவதும் எரிவது போன்ற உணர்வு ஏற்பட்டு மன உளைச்சலை கொடுக்கும்.

இதற்கு ஒரு தேக்கரண்டி சப்ஜா விதைய இரவில் படுக்கும் முன்பு  200 மி.லி தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகி இந்த பிரச்சனைகள், போன இடம் தெரியாது.

முக்கியமாக அன்றைய நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதை ஊற வைக்கும் பொழுது நார்ச்சத்து அதிகரிப்பதோடு செரிமான நொதிகளும் உருவாகும்.

முக்கியமாக ஒரு நாளைக்கு தேவையான அனைத்து ஆற்றலும் இந்த சப்ஜா விதை சாப்பிடுவதால் கிடக்கிறது.

sabja seeds benefits in tamil

சிறுநீர் எரிச்சல்

கோடையில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை சிறுநீர் எரிச்சல், நீர் தாரை புண் போன்றவை,

இவைகள் போதுமான தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும் கிருமி தொற்றுகளாலும் ஏற்படுகிறது. இதற்கு முதல் நாள் ஊறவைத்த சப்ஜா விதைய காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதன் பிறகு, சுத்தமாக இந்த பிரச்சனை வரவே வராது.

நோய் எதிர்ப்பு சக்தி 

சப்ஜா விதையை ஊற வைத்து சாப்பிடும்  பொழுது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை அதிகம் உள்ளதா கிருமிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது

வைரஸ்களை   எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

உடல் எடை குறைய 

இதில் உள்ள அதிக நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்களை உறிஞ்சுகிறது. இதன் மூலம் அதிக அளவிலான கொழுப்பு கரைவதோடு தேவையற்ற கொழுப்பால் உண்டாகும் உடல் எடையும் குறையும். எனவே கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், சப்ஜா விதைய சாப்பிட்டால், கொலஸ்ட்ராலை  கட்டுக்குள் வைக்க முடியும்.

sabja seeds uses in tamil

சர்க்கரை நோய் கட்டுக்குள் வர 

இந்த சப்ஜா விதையில் உள்ள, அதிக நார்ச்சத்து, சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

எனவே, சர்க்கரை நோயாளிகள், தினமும் ஒரு தேக்கரண்டி  விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

இரத்த அழுத்தம் சீராக

இந்த சப்ஜா விதையில்  பொட்டாசியம் அதிகமாக உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு தேக்கரண்டிசப்ஜா விதைய, தண்ணீரில் ஊற வைத்து அதை பாலில் கலந்து பருகினால் ரத்த அழுத்தம் சீராகும்.

முக்கியமாக, இதில் அதிகம் உள்ள பீட்டா கரோட்டின், கண் தொடர்பான பிரச்சனைகளை போக்க உதவுகிறது.

மஞ்சள் காமாலை குணமாக 

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதைய இளநீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து சாப்பிட்டால் நோயின் பாதிப்பு குறையும்.

மேலும் இது உடலில் உள்ள  பித்தத்தைப் போக்கி உடல் சூட்டை குறைகிறது.

அல்சர் குணமாக 

அல்சர்  உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைய ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர்  தீவிரம் குறையும். பொதுவாக  அல்சர் உள்ளவர்கள், கோடை காலத்தை சமாளிக்க இது ஒரு அருமையான மருந்தாகும்.

மேலும், ஜீரண பாதையில் ஏற்படும் புண்களையும் குணப்படுத்தும். அதே போன்று, வாயுத் தொல்லையும் போக்கக் கூடியது.

sabja seed image

தலைமுடி ஆரோக்கியம் 

கருமையான மற்றும் வலுவான கூந்தலுக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் கே  மற்றும் புரதமும் இதில் நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான தலை முடியை பெற இந்த சப்ஜா விதைய ஊறவைத்து குடித்து வரலாம்.

முக்கியமாக  இதில் உள்ள ஆக்ஸிஜன் ஏற்ற பண்புகள் சருமத்திற்கும் தலைமுடிக்கும் பயன் தரக்கூடியது.

மலச்சிக்கல் குணமாக 

கோடையில் அதிக வியர்வையின் காரணமாக நீரிழப்பு ஏற்படக்கூடும் மலம் இறுகி மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த மலச்சிக்கலைப் போக்கும் அருமையான மருந்து இந்த சப்ஜா விதை.

காரணம் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி மலச்சிக்கலைப் போக்கி உடலை நச்சுத்தன்மை இல்லாமல் பாதுகாக்கிறது.

முக்கியமாக, மலச்சிக்கலால் பிரச்சனையால் அவதிப்பட கூடிய  முதியவர்கள்  ஒரு தேக்கரண்டி   அளவிற்கு ஊறிய சப்ஜா விதையை   சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.

மூலம் குணமாக 

மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சப்ஜா விதைய தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம். மூல நோய்க்கு, நல்ல மருந்து இது.

பெண்கள் ஆரோக்கியம் 

பெண்களை பொறுத்தவரையில் சப்ஜா விதைய ஊற வைத்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி பெரும்.  மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் அடிவயிற்று வலியை குறைக்கவும் உதவுகிறது. முக்கியமாக வெள்ளைப்படுதலையும் குணப்படுத்துகிறது.

நன்னாரி சர்ப்பத்தில் இதை கலந்து சாப்பிடலாம். மேலும் எலுமிச்சை ஜூஸ்  மற்றும் பாலில் அல்லது தண்ணீரில் மற்றும் இயற்கை பானங்களிலும் கலந்து சாப்பிடலாம்.

சியா விதைகளும், சப்ஜா விதைகளும் ஒன்றா? 

நிறைய பேருக்கு உள்ள ஒரு சந்தேகம் சியா விதைகளும், சப்ஜா விதைகளும் ஒன்றா? என்பது. உண்மையில், சப்ஜா விதை கருப்பு நிறத்தில் எள் போன்று வட்ட வடிவத்தில் இருக்கும். ஆனால் சியா விதையோ கருப்பு சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

மேலும் உற்று கவனித்தால் ஓவல் வடிவதில்  இருக்கும். ஆனால், ரெண்டு விதைகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

ஆரம்பகால கர்ப்பிணி பெண்கள் சப்ஜா விதைய சாப்பிடுவதன் மூலம் கரு களைய வாய்ப்புள்ளது என்றும், பாலூட்டும் தாய்மார்களும் இதனை சாப்பிடக் கூடாது என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது அதிக குளிர்ச்சித் தன்மை உடையதால் இது அதிகம்  குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இதன் அதிக குளிர்ச்சித் தன்மை காரணமா சைனஸ்,  ஜலதோஷம் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

எனவே நீங்களும் இனி கெமிக்கல்  நிறைந்த குளிர்பானங்களைத் தவிர்த்து இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த சப்ஜா விதைய ஊற வைத்து இங்கே சொன்னது போன்று சாப்பிட்டுப் பாருங்கள்  கோடைகால தாக்கமே தெரியாது.

இதனையும்  படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

3 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning