கடுக்காய் பொடி பயன்கள் | Kadukkai Powder Benefits in Tamil

கடுக்காய் பொடி பயன்கள் | Kadukkai Powder Benefits in Tamil

கடுக்காயின் அதிசய நன்மைகள்

கம்பு ஊன்றும் கிழவனும் கடுக்காய் சாப்பிட்டால் கம்பீரமாக நடப்பான் என்று ஒரு பழமொழி சொல்கிறது. அதாவது, உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மைப்படுத்தும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு. இதனால்தான் இதற்கு அமுதம் எனும் பெயரையும் கொடுத்துள்ளனர்.

கடுக்காய் சுவை மற்றும் அவசியம்

கடுக்காயின் சுவை துவர்ப்பு சுவை. நம் உடலுக்கு அறுசுவைகளும் சமமாக கிடைக்க வேண்டும். ஆனால் நம் அன்றாட உணவில் துவர்ப்பு சுவை மிகவும் குறைவு. இந்த துவர்ப்பு சுவை தான் ரத்தத்தை சுத்தப்படுத்தி பல நோய்களை தடுக்கும்.

கடுக்காய் பயன்கள் | Kadukkai Uses
கடுக்காய் பயன்கள் | Kadukkai Uses

கடுக்காய் பொடியை எப்போது , எப்படி சாப்பிட வேண்டும்?

தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன் அரை மணி நேரம் முன்னர் 5 கிராம் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதை தொடர்ந்து குடித்து வந்தால் பல நோய்கள் இயற்கையாகப் போய் விடும்.

கடுக்காய் சாப்பிடுவதால் குணமாகும் நோய்கள்

  • கண் பார்வை குறைபாடு நீங்கும்
  • வயிற்று, குடல், வாய்ப்புண், தொண்டைப்புண் குறையும்
  • தேமல், படை, தோல் நோய்கள் குணமாகும்
  • சிறுநீரக புண், எரிச்சல், கல்லடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல் நீங்கும்
  • மூலம் நோய், பௌத்திரக்கட்டி (piles), ரத்த மூலம், உள் மூலம் அனைத்தும் குணமாகும்.
  • சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன் போன்றவையும் குறையும்.
  • பித்த நோய், வெள்ளைப்படுதல், உடல் உஷ்ணம், உயிரணு குறைபாடு போன்றவற்றுக்கும் உதவும்

கடுக்காயின் குடல் மற்றும் ரத்த நன்மைகள்

  • கடுக்காய் குடலை சுத்தமாக்கும்.
  • மலச்சிக்கலை நீக்கும்
  • குடல் புழுக்களை வெளியேற்றும்
  • வயிறு உறுப்புகளை பலப்படுத்தும்
  • ரத்தத்தை சுத்தப்படுத்தி மூளை, இதயத்தையும் வலுவாக்கும்
  • நினைவாற்றலை பெருக்கும்
  • இதனால் மனிதன் இளமையைப் பேணிக் கொள்ளலாம்.

திரிபலா மருந்து

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து செய்யப்படும் மருந்து திரிபலா. இது யாரும் பயன்படுத்தக்கூடியது. ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள் இதை இரவு உணவுக்குப் பிறகு அல்லது காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், பக்க விளைவுகளை குறைக்கும். இது சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்து.

கடுக்காய் பொடி பயன்கள் Kadukkai Powder Benefits in Tamil

 கடுக்காய் எந்த பகுதியைச் சாப்பிடக்கூடாது

கடுக்காயின் வெளிப் தோல் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதின் உள்ளிருக்கும் விதை பகுதி பயனற்றது. அதுபோல இஞ்சியின் வெளி தோல் போன்று, கடுக்காயின் விதை மருத்துவம் தராது.

எங்கே கிடைக்கும், எப்படி பயன்படுத்துவது

கடுக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு பயன்படுத்து வாழ்க்கையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Amazon Link

100gm Click  To buy 

200gm Click  To buy 

முடிவுறை 

கடுக்காய் உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய அரிய செல்வம். இன்றே வாங்கி பயன்படுத்தத் தொடங்குங்கள், ஆரோக்கியமாக வாழுங்கள்.

கடுக்காய் பொடி பயன்கள் | Kadukkai Powder Benefits in Tamil

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின் பக்கத்தினை Disclaimer கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning