குங்குமப்பூ பயன்கள் | Kungumapoo Benefits in Tamil

குங்குமப்பூ பயன்கள் | Kungumapoo Benefits in Tamil

குங்குமப்பூன்னு சொன்னாலே நம்ம எல்லாருக்குமே ஞாபகம் வருகின்ற ஒரு விஷயம் குழந்தை சிகப்பா பிறப்பதற்காக சாப்பிடுவது என்பது தான்.

குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை நிஜமாகவே சிகப்பா பிறக்குமா? இதைப்பத்தி சந்தேகம் இருந்தாலும் கூட, மனைவி கர்ப்பமானதுமே எல்லா கணவர்மார்களும் மறக்காமல் இந்த குங்குமப்பூ வாங்கி கொடுத்துருவாங்க.

குங்குமப் பூ சாப்பிட்ட பலருக்கும், குழந்தை கருப்பாதாங்க பிறந்திருக்கு. இதுக்கு என்ன காரணம்? குங்குமப்பூ பத்தி நம்ம கிட்ட அதிக அளவு விழிப்புணர்வு இல்லை என்பது தான் காரணம்.

குங்குமப்பூ பயன்கள்

குங்கமப்பூ உற்பத்தி

குங்கமப்பூ தாவரத்தின் பூவில் இருந்து சேகரிக்க படுற காம்பு பகுதியை தான் குங்கமப்பூ என்று கூறுகிறோம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் தான் அதிகமாக பூக்கும்.

பூவை பறித்து காம்புகளை காய வைத்து அதில் இருந்து குங்குமப் பூ தயாரிக்கபடுகின்றது. ஒரு லட்சத்தி அறுபத்தி ஐந்தாயிரம் பூக்கள்லில் இருந்து வெறும் ஒரு கிலோ குங்குமப்பூ மட்டும் தான் சேகரிக்க முடியும்.

தரமான குங்குமப்பூ

தரமான குங்குமப்பூ அறுவடை செய்யவேண்டும் என்றால் ஆறு ஆண்டில் இருந்து பத்து ஆண்டு மட்டுமே, நிலத்தில பயிரிடவேண்டும்.

அப்போதான் தரமான குங்குமப்பூ கிடைக்கும். குங்குமப்பூவை தயாரிக்கவும் அதுக்கான கால அவகாசமும் அதிகம் என்பதினால் அதன் விலையும் அதிகம்.

குங்குமப்பூ விளைவிடம்

பொதுவாக இந்த குங்குமபூ இந்தியாவில் காஸ்மீர்லயும் மற்றும் ஸ்பெயின், ஈரான், கிரீஸ் நாடுகளில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் ஸ்பெயினில் விளைய கூடிய குங்கப்பூ தரமானது என்று கூறப்படுகிறது.

saffron flower in tamil

குங்குமப் பூ தரம்

தரமான குங்கும பூ என்றால் அதில் என்பது சதவீதம் சிகப்பாகவும் இருபது சதவீதம் மஞ்சள் நிறத்திலேயும் இருக்கும்.

தரமற்றதுன்னா இருபது சதவீதம் மட்டுமே சிவப்பாதான் இருக்கும். சில வியாபாரிகள் விலையை குறைக்க வேண்டும் என்பதற்காக தரமற்ற குங்குமப்பூவில் மை அடித்து அதை சிகப்பா மாத்தி பின்னர் விற்பனை செய்கிறார்கள்.

அதே போன்று தேங்காய் துருவல், மெல்லிய நூல் இவற்றில் மை அடித்து கலப்படம் செய்கிறார்கள். இந்த கலப்படம் கலந்த பொருட்கள் தான் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. அது தெரியாமல் ஒரு சில பேர் வாங்கி அதை பயன்படுத்துகின்றோம்.

குழந்தை சிவப்பாக பிறக்குமா?

கர்ப்பமாக இருப்பவர்கள் குங்குமப்பூ சாப்பிட்டா குழந்தை நல்ல சிவப்பாக பிறக்கும் என்று சொல்வாங்க. அதுல கொஞ்சம் கூட உண்மையே இல்லை.

குழந்தை சிவப்பாக பிறப்பதற்கும், கருப்பாக பிறப்பதற்கும் நமது பரம்பரையோட ஜீன்கள் மட்டுமே காரணம். அதை தவிர குங்கும பூவின் பங்கு எதுமே இல்லை.

saffron benefits in tamil

குங்குமப்பூ பயன்கள்

இந்த குங்குமப்பூவை பொறுத்தவரைக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு நிறைய பயன்களை கொடுக்கிறது.

கருவுற்ற பெண்கள் ஐந்து மாதம் முதல் ஒன்பது மாதம் வரை இந்த குங்குமப்பூவை சாப்பிடலாம். இதனால் இரதம் சுத்தமாகும்.

குழந்தை பிறந்த பின்பும் சாப்பிடலாம். இரத்த சோகை எதுவம் ஏற்படாமல் தடுத்து நல்ல பசியை தூண்டும். ஆனால் குங்குமப்பூவை குறிப்பிட்ட அளவு தான் சாப்பிடணும். அதிகமா எடுத்துக்க கூடாது.

அது மாதிரி கருவுற்ற பெண்களுக்கு சளி இருமல் பிரச்சனை இருந்தால் அது வயிற்றில் உள்ள குழந்தையின் நலத்துக்கு கேடு விளைவிக்கும். எனவே சளி, இருமல் தாக்காமல் இருக்க இந்த குங்குமப்பூ ஒரு சிறந்த மருந்து.

குங்குமப்பூ துவர்ப்பு தன்மை என்பதினால் இந்த குங்குமபூவ facial கூட பயன்படுத்தலாம்.

உங்க வீட்ல் சமைத்து முடித்ததும் அந்த உணவுல் குங்குமப்பூவை கொஞ்சம் சேர்த்துகொள்ள்ளவும்.

இதனால நல்ல மணம் வீசுவது மட்டும் இல்லாமல் உணவும் சுவையாக இருக்கும். முக்கியமாக ஜலதோஷம், இருமல், புற்றுநோய், பார்வை குறைபாடு பிரச்சனைகளுக்கு இது ரொம்பவே சிறந்தது.

மேலும் இது வாய்ப்புண் குணமாக மிகவும் உதவியாக இருக்கும்.

Kungumapoo Benefits in Tamil

சுத்தமான குங்குமபூ கண்டுபிடுக்கும் முறை

சிறிது சுடு தண்ணீரில் நான்கு ஐந்து குங்குமப்பூவை போட்டால் அந்த பூ மெதுவாக கரைந்து அந்த தண்ணிர் தங்க நிறத்தில் மாறிவிடும்.

அதுவும் அதுல இருந்து நல்ல நறுமணம் வீசும். சொல்லப்போனால் இருபத்தி நாலு மணி நேரத்துக்கும், பூவிலிருந்து நிறம் வந்துகிட்டே இருக்கும்.

எனவே அது கண்டிப்பாக சுத்தமான தரமான குங்குமப்பூ என்று தெரிந்து கொள்ளலாம்.

இதுவே தரமற்ற பூவாக இருந்தால் தண்ணீரில் போடும்போதே அது சிவப்பு நிறத்தில மாறிடும்.

அது நறுமணமும் வீசாது. குறிப்பாக சிறிது நேரத்திலேயே அந்த பூவில் இருந்து வர நிறமும் நின்று விடும். ஆகவே அது கண்டிப்பாக தரமற்ற குங்குமப்பூ என்று தெரிந்து கொள்ளலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

Related Posts

3 Comments

  1. Pingback: sex women

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning