ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் | Orange Fruit Benefits in Tamil

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் | Orange Fruit Benefits in Tamil

நாம் செல்லும் இடங்களில் எல்லாம் தள்ளுவண்டிகளில் கமலா ஆரஞ்சை விற்பனை செய்வதை பார்த்திருப்போம்.

எல்லோருக்குமே இதை பார்த்த உடனேயே, சாப்பிட வேண்டும் போல் இருக்கும். விலை மலிவானது.

இது உரிப்பதற்கு எளிதானது மட்டுமல்ல மிகவும் ருசியானதும் கூட. அதை விட மற்ற ஆரஞ்சு பழங்களை விட மருத்துவ நன்மைகளை அதிகம் கொண்டது.

சிறுசு பழமான இதில் புரோட்டீன் அதிக நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, ஃபோலிக்ஸ், தயாமின், பொட்டாசியம், இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம் என்று பெரிய சத்துக்கள் பட்டாளமே உள்ளது.

கமலா ஆரஞ்சு பழத்தின் நன்மைகள்

பொதுவாக நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களுக்கு, எது சாப்பிட கொடுத்தாலும் அவர்கள் வாய்க்கு அதன் ருசி தெரியாமல் சாப்பிடவே பிடிக்காது.

இப்படி தொடர்ந்து சாப்பிட முடியாமல் போவதால் உடல் பலகீனம் அடையும். இந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது இந்த ஆரஞ்சு பழங்களைத்தான்.

இதில் அனைத்து சத்துக்களும் உள்ளதால் நோயாளிகளின் வாய்க்கு நல்ல ருசியையும் நல்ல தெம்பையும் கொடுக்கும்.

வைட்டமின் சி

முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுப்பதால் விரைவிலேயே குணமடைவார்கள்.

நூறு கிராம் ஆரஞ்சு பழத்தில் கிட்டத்தட்ட,53 மி கி வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமின் சி சத்து நமக்கு பல நன்மைகளை அள்ளிக் குடிக்கிறது.

உண்மையில் ஒருவரின் உடல் வைட்டமின் சி குறைபாடு இருந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்படையும்.

தோல் வறண்டு போகும். பற்கள், ஈறுகள் பாதிக்கும். கொலாஜன் உற்பத்தி ஆகாது. இதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும்.

அதே போன்று தீவிரமான வைட்டமின் சி குறைபாட்டினால் ஸ்கர்வி என்ற நோய் உண்டாகும். எனவே, வைட்டமின் சி உள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நல்லது.

அந்த வகையில் விட்டமின் சி அதிகம் உள்ள விலை மலிவான இந்த ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது மிக நல்லது.

ஆரஞ்சு பழத்தின் தீமைகள்

வாய்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். அதே போன்று இந்த ஆரஞ்சு சாறு ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பல், இவற்றையும் போக்கக் கூடியது.

கிருமிகளையும் கட்டுப்படுத்தக்கூடியது. எனவே வைட்டமின் சி, அதிகம் உள்ள இந்த கமலா ஆரஞ்சை அடிக்கடி சாப்பிட்டு வரும்பொழுது ஈறுகளில் வீக்கம் மற்றும், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுவதையும தடுக்கும்.

அதே போன்று இதன் தோலை உலர்த்தி, ஓமம், சுக்கு சேர்த்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினமும் இதில் பல் தேய்த்து வந்தால் பற்கள், பளிச்சென்று மாறும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி, நமது உடலில் குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையும் குறைந்து அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை உண்டாகும்.

வைட்டமின் சி அதிகமுள்ள இந்த ஆரஞ்சை சாப்பிட்டால் உடலில் வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்வதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதனால் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராடும் ஆற்றலை அதிகரிக்க முடியும். வைட்டமின் சியை உடல் தானாகவே தயாரிக்க முடியாது.

இதை உணவுகள் மூலமே பெற முடியும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த கமலா ஆரஞ்சை அடிக்கடி சாப்பிட்டு வருவது அவசியம்.

orange benefits in tamil

ஹீமோகுளோபின் உற்பத்தி

ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய வைட்டமின் சி மிக முக்கியம்.

அதாவது நாம் சாப்பிடு உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்ச வைட்டமின் சி முக்கியம்.

அந்த வகையில் இதில் விட்டமின் சி மிக அதிக அளவில் உள்ளது மட்டுமில்லாமல் இரும்பு சத்தும் இதில் உள்ளதால் ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வரும் பொழுது நிச்சயம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை நீங்கும்.

சிறுநீரக கல்

வைட்டமின் சி சத்துகள் கொண்டஇந்த ஆரஞ்சு பலம் அதிகம் சாப்பிடு பொழுது சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவு வெகுவாக குறைந்து பின்னாளில் சிறுநீரக கற்கள் உருவாவது மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கீல்வாதம்

ரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் உருவாகுவதனால் அவை மூட்டு பகுதிகளில் படிந்து விடுவதால் கீல்வாதம் பிரச்சனை ஏற்படுகிறது. அ ப்படி ஆனால் வைட்டமின் சி சத்துக்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் யூரிக் அமிலங்கள் குறைந்து கீல்வாதம் நோய் பாதிப்பு நீங்கி மூட்டுகளில் வலி குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே மலிவாக எங்கும் எளிதாக கிடைக்கும் இந்த ஆரஞ்சு பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிட்டு வருவது நல்லது.

Orange Fruit Benefits in Tamil

இரத்த அழுத்தம்

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வைட்டமின் சி இந்த ஆரஞ்சை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும்.

மேலும் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

மேலும் இது ரத்த நாளங்களை விரிவடைய செய்வதால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

முக்கியமாக, ஆரஞ்சு பழத்தில் உள்ள ஹிருடின் என்ற வேதிப்பொருள் இதயத்தில் அடைப்புகளை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே, அடிக்கடி இந்த கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வருவதன் மூலம் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

நார்சத்து

இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையை குறைக்க உதவுகிறது. எனவே ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வருவது நல்லது.

மலச்சிக்கல் என்பது அனைவரும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அந்த வகையில் இதில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும்.

அதே போன்று இந்த நார் சத்து உடல் எடையை குறைக்கவும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

அதாவது இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நீண்ட நேரம் நிரப்பி வைத்திருந்து அடிக்கடி பசி ஏற்படுவதையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதையும் தடுக்கும்.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தங்களது டயட்டில் இந்த கமலா ஆரஞ்சு சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆண்கள் ஆரோக்கியம்

ஆரோக்கியமான விந்தணுக்கள் உருவாக ஆண்கள் தினமும் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வரலாம் . காரணம், இதிலுள்ள ஃபோலேட் என்ற சத்தானது விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சருமம்

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறிவிடும்.

இதனால் இளமையான மற்றும் ஆரோக்கியமான சருமத்தினைப் பெற முடியும். முக்கியமாக வைட்டமின் சியானது சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உதவுகிறது.

மேலும் இது சருமம் தளர்ச்சி அடைதல் மற்றும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

கண்கள்

இந்த ஆரஞ்சில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களாகும்.

அது மட்டுமல்ல கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருப்பதற்கு மற்றும் இதர கண் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க தினமும் வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும்

முக்கியமாக கமலா ஆரஞ்சு உள்ள பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, மற்றும்,வைட்டமின் இ , இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சிக்கும், இதய ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

எனவே கமலா ஆரஞ்சை பார்த்தால் தயங்காமல் உடனே வாங்கி சாப்பிடுங்கள். ஒட்டுமொத்த உடலும், ஆரோக்கியமாக இருக்கும்.

இதனையும் படிக்கலாமே

அந்த அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

Related Posts

2 Comments

  1. Pingback: Dan Helmer

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning