திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?
உணவு கிடைக்காத சமயங்களில் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்ட காலங்களில் பழங்களை உணவாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
சாதாரணமாகவே பழங்கள் என்றாலே அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது.
அதிலும் திராட்சைப்பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று.
திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.
திராட்சை நன்மைகள்
வைட்டமின் திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள்
- வைட்டமின் சி
- வைட்டமின் கே
- கால்சியம்
- ரிபோபிளவின்
- மெக்னீசியம்
- சர்க்கரை
- மாவுச்சத்து
- ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடலில் உள்ள எலும்புகளுக்கும் பற்களுக்கும் நல்ல உறுதித்தன்மையை தருகிறது.
மேலும் அடிபட்டு ரத்தக் காயங்கள் ஏற்படும் பொழுது ரத்தம் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும்.
அச்சமயங்களில் திராட்சை ரத்தம் வேகமாக குறைய உதவுகிறது.
மலச்சிக்கல்
இதில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.ஒரு சிலருக்கு காலைக்கடன்களை கழிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது.திராட்சை நீர்சத்து அதிகம் நிறைந்தது.
எனவே இது உடலில் ஏற்படக்கூடிய நீர் வறட்சியை போக்கும்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினசரி சிறிதளவு திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர வேண்டும்.
கொலஸ்ட்ரால்
நாம் தினசரி சாப்பிடுகின்ற உணவு வகைகளில் மற்றும் சமையலுக்கு பயன் படுத்துகின்ற எண்ணெய்களில் கொழுப்பு சத்து அதிக அளவில் உள்ளது.
திராட்சை பழத்தை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு அதிக அளவில் சேராமல் பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தம்
பொட்டாசியம் சத்து இதில் அதிக அளவில் உள்ளது. எனவே இந்த பொட்டாசியம் உடலில் ஓடுகின்ற ரத்த அழுத்தத்தினை சீராக்குகிறது.
மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
கண்
வயது முதிர்ந்து விட்டால் கண் பார்வை சிறிது சிறிதாக மங்கத் தொடங்கும்.
எனவே அவர்கள் சத்து நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியமாகும்.
திராட்சைப்பழம் கண்களின் கரு விழிகளில் உள்ள செல்கள் வளர்ச்சியை அதிகரிக்கிறது. எனவே கண் பார்வை தெளிவாகும்.
மேலும் இது கண் அழுத்தம் சம்பந்தமான நோய்கள் கண்களில் புரை ஏற்படுவது போன்றவற்றை போக்குகிறது.
மன அழுத்தம்
நமது உடல் சோர்வடையும் போதும், சூழ்நிலை காரணமாக பதற்றமடையும்போதும் உடல் நலத்தை பாதிக்கக்கூடிய ஒரு சில ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகின்றது.
அச்சமயங்களில் மன அழுத்தம் ஏற்படுகின்றது. திராட்சைப்பழம் இந்த கெட்ட ரசாயனத்தை கட்டுப்படுத்துகிறது.
எனவே இது உடல் மற்றும் மனதிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி
தொற்று நோயினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
நுண் கிருமிகள் வைரஸ் பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் திறன் திராட்சைப் பழத்துக்கு உள்ளது.
எனவே தினம்தோறும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சத்தான உணவு
திராட்சைபழத்தினை அப்படியே சாப்பிடுவதாலும் மற்றும் இதனை நன்கு காயவைத்து உலர்திராட்சையாக சாப்பிடுவதாலும் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
சிறுநீரகம்
நமது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் உதவுகிறது.
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால்தான் உடல் நலத்துடன் இருக்க முடியும்.
தினமும் சிறிதளவு திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்.
எனவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் எளிதில் வராது.சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமழும் தடுக்கும்.
ஒற்றை தலைவலி
சாதாரணமாகவே தலைவலி அனைவரையும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும்.
அதிலும் ஒற்றைத் தலைவலி என்பது மிகவும் கொடுமையான ஒன்று, தாங்க முடியாத அளவிற்கு வலி இருக்கும்.
தலைவலி பிரச்சினை ஏற்படும் பொழுது திராட்சைப் பழத்தை நன்கு மென்று சாப்பிட்டு வரும்பொழுது இதில் இருந்து நிவாரணம் அடையலாம்.
தலைமுடி
இதிலுள்ள லிவோலியிக் அமிலம் முடியின் வேர் பகுதியில் இருந்து தலைமுடியை வலுப்பெறச் செய்கின்றது இதன் காரணமாக முடி உதிர்வது குறைகிறது.
புற்றுநோய்
திராட்சை பழம் புற்றுநோயை எதிர்த்து செயல்படக்கூடிய திறன் கொண்டது.
மார்பக புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் கருப்பு திராட்சைக்கு உள்ளது.
இதில் அதிக அளவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக போராடி உடலை பாதுகாக்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்க்கு திராட்சை மிகவும் நல்லது.
தினசரி காலையில் ஒரு கைப்பிடி அளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
இதையும் படிக்கலாமே
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
English overview
Here we have Grapes Benefits in Tamil. Is also called grapes in tamil or Grapes benefits tamil o rGrapes uses tamil or thirachai payangal tamil or thiratchai benefits tamil or types of grapes in tamil or dry grapes benefits in tamil or black grapes benefits in tamil or black grapes seeds benefits in tamil or grape seed benefits in tamil or green grapes benefits during pregnancy in tamil or grapes health benefits in tamil or black grape juice benefits in tamil or thirachai or karuppu thirachai or black grapes uses in tamil or types of grapes in tamil.
1 Comment
Comments are closed.