மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil

மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil

பொதுவாக கலோரிகள் அதிகமாகாமல் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கக் கூடியது பழங்கள். அதில், மிகவும் முக்கியமான ஒன்று இந்த மாதுளை.

மாதுளை பழம் இயற்கையிலேயே இனிப்பு சுவையும் அதிக ஆன்டிஆக்ஸிடென்ட், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும், ஃபிளாவனாய்டுகள் இவற்றைக் கொண்டுள்ளது.
மாது முத்துகளின் சிவப்பு நிறத்திற்கு அதில் இருக்கும் பாலிபினால்கள் தான் காரணமாகும். இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆக இருப்பதனால் மாதுளை பழத்தில்தான் இந்த ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது.

நிறைய பேர் இதை உறித்து சாப்பிட சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு இதை சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள்.

உண்மையில் மாதுளை சாப்பிடுவதன் மூலம் பல நோய்களை வராமல் தவிர்க்கலாம். இதில் காணப்படும் மருத்துவ குணங்கள், நம் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள உதவுகிறது.

மாதுளை நன்மைகள் தீமைகள்

ஹீமோகுளோபின்

உடலில் இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள முக்கியமான புரதமே ஹீமோகுளோபின். இதுதான் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும், திசுக்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.

இது சீரான அளவில் இருக்கும்வரை உடல் ஆரோக்கியமானது குறை இல்லாமல் இருக்கும். இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் பொழுதுதான் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த, ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக், இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் இரும்பு சத்து மற்றும் இரும்பு சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் சி இரண்டுமே இதில் உள்ளதால் இது ஹீமோகுளோபின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கும்.

இரத்த சுத்தி

பொதுவாக நாம் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று, இவற்றின் மூலமாக ரத்தத்தில் நச்சுக்கள் சேர்கின்றன.

இதனாலும் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த நச்சுக்களை போக்கி ரத்தத்தை தூய்மை ஆகா மாற்றும் வல்லமையும் இதற்கு உண்டு.

எனவே மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ரத்தமும் சுத்தமாகும்.

எனவே மாதுளை ஜூஸ் இல் தேன் கலந்து காலை சாப்பிடும் முன்பு தினமும் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நல்ல மாற்றம் தெரியும்.

pomegranate benefits in tamil

இதயம் ஆரோக்கியம்

இதயம் ஆரோக்கியமாக வேலை செய்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த மாதுளையை இதய நோய்களை தடுக்கும் நண்பன் என்றே சொல்லலாம்.

இது நமது இதயம் மற்றும் அதை சுற்றியுள்ள ரத்தக்குழாய்களை பாதுகாக்கிறது. முக்கியமாக இதய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது.

மேலும் இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பொதுவாக ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தாலே இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஞாபக சக்தி

அடிக்கடி மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலும், கற்கும் திறனும் அதிகரிக்கும். எனவே குழந்தைகளுக்கு மாதுளம் பழங்களை சாப்பிட கொடுப்பது நல்லது.

அதே போன்று வயதான அவர்களுக்கு வரக்கூடிய முதுமறதி என்று சொல்லக்கூடிய தீவிர மறதி நோய் வராமலும் தடுக்கும்.

பொதுவாக அடிக்கடி மாதுளை சாப்பிட்டு வரும் பொழுது மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படும். மேலும் மூளைக்கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த ஆன்டிஆக்ஸிடென்ட் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

மேலும், இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ, நமது, நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகிறது. எனவே அடிக்கடி மாதுளை சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் அவ்வளவு சீக்கிரம் நம்மை அண்டாது.

pomegranate uses in tamil

ஃபோலிக் சத்து

பொதுவாக கருவில் வளரும் குழந்தைகளுக்கு ஃபோலிக் சத்து இன்றியமையாதது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு வளர்ச்சிக்கும் மிகவும் உகந்தது.

இந்த சத்தானது கருவில் உள்ள குழந்தைக்கு போதிய அளவு கிடைத்தால் மட்டுமே குழந்தையின் மூளை சம்பந்தப்பட்ட செல்கள் சிறப்பாக வளரும்.

எனவே,கர்ப்பிணி பெண்கள் மாதுளையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. முக்கியமாக கருச்சிதைவு அபாயமும் இதனால் பெரிய அளவில் தவிர்க்கப்படுகிறது.

மேலும் ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

கல்லீரல் ஆரோக்கியம்

மாதுளைப்பழம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க மற்றும் ஒவ்வாமையை குறைக்க உதவுகிறது.

கல்லீரலில் ஏற்படும் கொழுப்பு பிரச்சனை குணப்படுத்த உதவுகிறது.

எனவே தொடர்ந்து மாதுளம் பழத்தை, சாப்பிட்டு வந்தால் கல்லீரலை வலுவூட்டி சீராக செயல்பட வைக்கும்.

வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்

மாதுளையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் செரிமானம் சிறப்பான வகையில் ஏற்படுகிறது. எனவே மாதுளையை சாப்பிட்டு வரும் பொழுது மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கும்.

முக்கியமாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த மாதுளை சாப்பிடுவதன் மூலம் அந்த சமயத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.

அது மட்டுமல்ல எந்த ஒரு மனிதனும் ஆரோக்கியமாக இருக்க முதலில் அவனது வயிறு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் ஏற்படும் அல்சர் கோளாறுகள், குடற்புழுக்கள் போன்ற அனைத்திற்கும் மாதுளம் பழம் சிறந்த தீர்வைத் தரும்.

புற்றுநோய்

மாதுளம் பழம் ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தற்போதைய ஆராய்ச்சிகள் கூறுகிறது.

எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வரும்பொழுது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைபடுகிறது.

அதே போன்று மாதுளை காணப்படும் ஊட்டச்சத்துக்கள் ஆண்ட்ரோஜன் ஹார்மோனை ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்ஆக மாற்றுகிறது. இதனால்மார்பக புற்றுநோயின் அபாயத்தை தவிர்க்கிறது.

மூட்டு வலி

முன்பெல்லாம் ஐம்பது வயதுக்கு மேல் வந்த மூட்டு வலி இப்பொழுது இருபது வயதிலேயே வந்துவிடுகிறது.

அந்த வகையில் மூட்டு வீக்கத்தை கட்டுப்படுத்துவதுடன் மூட்டு வலி ஏற்படாமலும் பாதுகாக்கிறது.

அத்துடன் மாதுளையில் அதிகமாக இருக்கும் ஆக்ஸிஜன் ஏற்ற தடுப்பான்களால் வீக்கத்தை எதிர்க்கும் வலிமையான பண்பை கொண்டுள்ளது.

முக்கியமாக, பெண்களுக்கு மாதவிடாய் காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து மூட்டு வலி மற்றும் எலும்பு வலி அதிகரிக்கும்.

இது போன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழம் ஜூஸ் குடிக்கலாம். இது உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டும்.

எலும்புகளும் வலுப்பெறும். பொதுவாக மாதுளையை ஜூஸ் செய்து சாப்பிடு பொழுது வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் அதற்கு பதிலாக தேன் சேர்த்து அருந்துவது அல்லது.

mathulai benefits in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

4 Comments

  1. Pingback: PANAMA888
  2. Pingback: spin238
  3. Pingback: fortnite hacks

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning