பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil

 பூச்சி கடி குணமாக  வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil

பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil நாம் வாழும் இயற்கை சூழலில் எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் ஒரு சில உயிரினங்கள் மனிதர்களை சார்ந்து வாழ்கின்றது. ஒரு சில உயிரினங்கள் மனிதனின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்தாலும், மனிதர்களை சார்ந்து இருப்பதில்லை. ஒரு சில உயிரினங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளன.

அந்த வகையில் தேள், பூரான், தேனி, ஒரு சில வண்டுகள், பூச்சிகள் விஷத்தன்மை உடையதாக உள்ளது. பொதுவாக இவை தானாக வந்து மனிதர்களை தாக்குவதில்லை. மனிதர்கள் இந்த உயிரினங்களை சீண்டும் பொழுது அல்லது அவற்றின் பாதுகாப்பினை குறைக்கும் வகையில் ஏதேனும் செய்யும் பொழுது தான் தாக்குகின்றன.

ஒரு சிலவற்றின் விஷமானது குறைவாக இருக்கும். ஆனால் ஒரு சிலவற்றின் விஷமானது மனிதனை கொல்லும் அளவிற்கு உள்ளது. இது போன்ற பூச்சிகளின் விஷக்கடியானது கொடுமையான வழியினையும், உடலில் ஒரு சில பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. பூச்சி கடித்தவுடன் விஷத்தினை உடனடியாக முறிப்பதற்கு ஒரு சில அவசரகால முறைகளைப் பற்றி பார்ப்போம்.

poochi kadi for babies in tamil

Tips 1

தேள், நட்டு வாய்க்காலில் இது போன்றவை தீண்டினால் கொப்பரை தேங்காய்  நன்றாக மென்று தின்று வருவதன் மூலமாக உடலில் இருந்த விஷமானது முறியும்.

Tips 2

பூச்சு கடித்தால் கடிபட்ட இடத்தில் கரிசலாங்கண்ணி இலை நன்றாக சாறு பிழிந்து, அந்த சாற்றுடன் பெருங்காயத்தினை சேர்த்து பற்று போட்டு வருவதன் மூலம் விஷம் முறியும்.

Tips 3

எட்டுக்கால்  பூச்சிகள் கடித்தால் குப்பைமேனி இலையினை எடுத்து நன்றாக சாறுப்பில் இருத்து கடிபட்ட இடத்தில் தடவி வருவதன் மூலமாக விஷம் நீங்கும். மேலும் கடுகடுப்பான வழியும் குறையும்.

poochi kadi home remedies in tamil

Tips 4

(பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil)தேனீக்கள் கொட்டியவுடன் அவ்விடத்தினை தேய்க்க கூடாது, ஏனென்றால் அதன் கொடுக்கு இருக்கும். தேனி கொட்டிய இடத்தில் வெங்காயத்தினை இரண்டாக வெட்டி ஒரு துண்டினை எடுத்து சூடு பறக்க தேய்ப்பதன் மூலமாக நிவாரணம் கிடைக்கும்.

Tips5

ஒரு சில வகையான வண்டுகள் தீண்டிவிட்டால், பப்பாளி இலையை நன்றாக அரைத்து சாறு பிழிந்து தீண்டப்பட்ட இடத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக தடவி வருவதன் மூலமாக நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சம் பழ விதையினையும், நாயுருவி செடியின் வேரினையும் இரண்டையும் சம அளவில் எடுத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

வெறி நாய் கடித்த இடத்தில் ஒரு எலுமிச்சை பழம் அளவிற்கு காலை, மாலை என இரண்டு வேலைகளும் ஒரு உருண்டை என்ற விகிதத்தில் பத்து நாட்கள் சாப்பிட்டு வருவதன் மூலம் வெறியநாயக்கடி விஷம் முறியும்.

poochi kadi home remedies

Tips 6

தேள் கடிபட்ட இடங்களில் உப்பையும், எலுமிச்சம் பழ விதையினையும் நன்றாக அரைத்து குடித்தோம் என்றால் விஷம் நீங்கும். மேலும் தேள் கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றுடன் உப்பினை கலந்து தடவினாலும் நிவாரணம் கிடைக்கும். பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil

Tips 7

ஒரு சில விஷக்கடியினால் கடிபட்ட இடங்களில் அரிப்பு, எரிச்சல் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சித்த மருத்துவத்தில் அரிப்பு எரிச்சலுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்துகளில் தேன் முக்கியமான ஒன்று.
கடிபட்ட இடத்தில் தேனை நன்றாக தேய்க்க வேண்டும்.

அவ்வாறு தேய்ப்பதன் மூலமாக எரிச்சல் மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கின்றது. இதற்கு காரணம் தேனில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் தன்மை தான். இது மென்மேலும் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

poochi kadi images

Tips 8

பூச்சிக்கடி பட்ட இடத்தில் ஏற்படும் அரிப்பால் நாம் அந்த இடத்தினை சொரிந்து சொரிந்து புண் பெரிதளவில் ஏற்படுகின்றது. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து ஒரு பஞ்சில் தடவி அடிபட்ட இடத்தில் தடவுவதன் மூலமாக நல்ல நிவாரணம் கிடைக்கும். பூச்சி கடிப்பட்ட இடத்தில் ஏற்படக்கூடிய அரிப்பு நீங்கும்.

Tips 9

பூச்சிக்கடி ஏற்பட்ட இடங்களில் பேக்கிங் சோடா வினை கொண்டு சரி செய்யலாம். பேக்கிங் சோடா உடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று குழைத்து வைத்துக் கொள்ளவும். பூச்சி கடிப்பட்ட இடங்களில் தேய்த்து வருவதன் மூலமாக நல்ல ஒரு நிவாரணமானது நமக்கு கிடைக்கும்.

Tips 10

நாம் தினசரி உணவில் பயன்படுத்தக்கூடிய பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. பூச்சி கடித்தால் அந்த இடங்களில் பூண்டினை நன்றாக நசுக்கி தேய்க்க வேண்டும். அவ்வாறு தைப்பதன் மூலமாக நல்ல ஒரு நிவாரணம் ஆனது கிடைக்கும்.

poochi kadi marundhu in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

2 Comments

  1. Pingback: sex gay

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning