ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்| How to Improve Memory Power in Tamil

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் | How to Improve Memory Power in Tamil

நம்முடைய கல்வி முறையை எடுத்துக் கொண்டால் மனப்பாடம் செய்து, தேர்வு எழுதும் முறைதான் இப்பொழுதும் உள்ளது. சில மாணவர்கள் எப்பொழுது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருப்பார்கள் ஆனால் தேர்வில் மதிப்பெண்கள் பெரிதாக வராது

இதற்கு முக்கிய காரணம் மூளை செயல்பாடு சரியாக இல்லாமல் இருப்பதுதான். சில மாணவர்கள், கொஞ்ச நேரம் படித்தாலே போதும் மனதில் பதிந்துவிடும். இவர்கள் படிக்கும் முறை மட்டும் இல்லாமல் இவர்களுக்கு, ஞாபக சக்தி அதிகமாக இருப்பதும் ஒரு காரணம்.

இந்த ஞாபக மறதி என்பது பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தானா? என்றால் கண்டிப்பாக இல்லை. மறதி என்பது எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

இன்னும் சொல்லப் போனால் வயது ஆக, ஆக இதன் தீவிரம் அதிகமாகிறது. இதற்கு முக்கிய காரணம் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.

அதே போன்று உடலில் உள்ள மற்ற உறுப்புகளை விட அதிக அளவு ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்வது, மூளைதான்.

எனவே மூளைக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்காத பொழுது, அதன் செயல்பாடும் குறைகிறது. இதனால் மூளை சரியாக எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த ஞாபக மறதியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் மூளையில் உள்ள பெரும்பாலான செல்கள் அழிந்து ஒரு நிரந்தரமான ஞாபக மறதி நிலை ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

இதற்கு என்னதான் வழி என்றால் ஞாபக மறதி அதிகம் உள்ளவர்கள் நினைவாற்றல் திறனை அதிகரிக்க கண்டிப்பாக இங்கே பார்க்கப் போகும் உணவுகளை உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.இதனால் நிச்சயம் உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க முடியும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

முட்டை

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால் நினைவுத் திறனை அதிகரிக்க முடியும்.

காரணம் மூளையின் ஞாபக சக்தி அதிகரிக்கும் சக்திகளில் முக்கியமானது கோலைன் சத்து இந்த சத்து முட்டையில் உள்ளது.

அதுமட்டுமல்ல இதில் உள்ள ஃபோலேட், வைட்டமின் பி பன்னிரண்டு போன்ற சத்துக்களும் மூளைக்கு போஷாக்கை அளிக்கக்கூடியவை.

எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு ஞாபக சக்தியும் கூடும். அதிலும் நாட்டுக்கோழி முட்டை என்றால் நல்லது.

நட்ஸ் வகைகள்

வால்நட் பார்ப்பதற்கு மூளை போன்றே இருக்கும் இந்த வால்நட் நமது மூளை செயல்பாட்டிற்கு உதவக்கூடியது. அதே போன்று பாதாம் பருப்பு என்றால் தினமும், ஒரு பத்து பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி சாப்பிட்டு வந்தால் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.

இந்த walnut, பாதாம் பருப்புகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட், வைட்டமின் ஈ. மற்றும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவைகள் மூளை நினைவாற்றலை அதிகரிக்க உதவக்கூடியவை.

எனவே இவைகள் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு அல்சைமர் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது.

How to Improve Memory Power in Tamil

கீரைகள்

இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் ஃபோலேட்கள் உள்ள வளமான ஆதாரங்களில் ஒன்றாக, கீரைகள் இருப்பதால் நமது நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது.

எனவே தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வரலாம். அதிலும் முக்கியமானது வல்லாரைக் கீரை. இந்த வல்லாரைக் கீரையை பொரியலாகவோ, கூட்டாகவோ, துவையல் போன்றோ சேர்த்து வரலாம்.

அதேபோன்று இந்த வல்லாரைக் கீரையை உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் அரை தேக்கரண்டி அளவுக்கு பாலில் கலந்து குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மேலும் பசலைக் கீரையும் நினைவுத் திறனை அதிகரிக்க உதவும்.

தயிர்

நினைவாற்றல் அதிகரிக்க உதவுவதோடு மட்டுமில்லாமல் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே அடிக்கடி உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஞாபக சக்தி அதிகரிக்க வழிமுறைகள்

வெண்டைக்காய்

வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலும் மூளை செயல்திறன் அதிகரிக்கும். பிஞ்சு, வெண்டைக்காய் என்றால் பச்சையாகக் கூட சாப்பிடலாம்.

மீன்

மீன்களை எடுத்துக்கொண்டால் அயோடின், செலினியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்ட நல்ல ஆதாரமாகும்.

முக்கியமாக மூளையின் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. எனவே வாரம் இரண்டு முறை மீன் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

இதில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள், இதயத்திற்கு மட்டுமின்றி மூளை செல்களையும், புத்துணர்வுடன் செயல்பட வைக்கும்.

நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். அதே சமயம் மீன்களை வறுத்து பொரித்து சாப்பிடாமல் குழம்பு வைத்து சாப்பிட நல்லது.

உண்மையில் கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் சாப்பிடு தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக சால்மன், சூறை, கானான் கெளுத்தி, பொத்தல், நெத்திலி மற்றும் மத்தி மீன்கள் சிறந்தது.

memory power increase food in tamil

மஞ்சள்

வயதான காலத்தில் ஏற்படக்கூடிய அல்சைமர் நோயால் அவதிப்படும் நோயாளிகளின் ஞாபக மறதியை மஞ்சள் குறைப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

எனவே பாலில் தினமும் சிறிது மஞ்சள் தூளும், மிளகுத்தூளும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிப்பது மட்டுமில்லாமல் பல உடல்நல பிரச்சனைகளும் குணமாகும்.

முக்கியமாக இதில் உள்ள cur cumin என்ற வேதிப்பொருள் மனச்சோர்வையும் போக்கக்கூடியது. அதே சமயம் கலப்படமில்லாத மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

பூசணி விதை

பூசணி விதையில் இருக்கக்கூடிய துத்தநாகம் மற்றும் தாமிர சத்துக்கள் உடலில் உள்ள நரம்புகள் மூளைக்கு தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக உள்ளது.

மேலும் இதிலுள்ள மெக்னீசியம் சிந்திக்கும் திறனையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஆளி விதை

அதே போன்று மூளை ஆரோக்கியத்திற்கு ஆளி விதையும் சிறந்தவை. இந்த விதைகளில் உள்ள, துத்தநாகம் மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன.இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

தேன்

தேனை எடுத்துக் கொண்டால் இதில் அளவற்ற நன்மைகள் இருப்பதோடு நினைவுத் திறனையும் அதிகரிக்க உதவுகிறது.

எனவே தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எடை குறைவதோடு சக்தியும் அதிகரிக்கும்.

niyabaga sakthi peruga patti vaithiyam

தண்ணீர்

மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர்தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானாலும் மூளையின் செயல்பாடும் குறைந்து மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.

எனவே தேவையான தண்ணீர் குடிப்பதால் மூளையில் வறட்சி ஏற்படாமல் மூளை செல்கள் சுறுசுறுப்பாக செயல்படும்.

மேலும்

அடிக்கடி கருப்பு திராட்சை, மாதுளை, பேரீச்சை, சிவப்பு கொய்யா, செவ்வாழை போன்ற, அந்தோசயனின் நிறைந்த பழங்களை சேர்த்து வந்தால் மூளையின் ஆற்றல் அதிகரித்து நினைவாற்றல் சக்தியும் கூடும்.

தினமும் ஐந்து துளசி இலைகளை சாப்பிட்டு வரலாம். அதே போன்று, புதினா கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம். தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம். இவைகள் எல்லாமே மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதால் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதே போன்று உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நம் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும்.

அந்த வகையில் நமக்கு நினைவுத்திறன் அதிகமாக இருந்தால்தான் படிப்பிலும் சரி, எந்த ஒரு வேலை செய்வதாக இருந்தாலும் சரி சரிவர செய்ய முடியும்.

சொல்லப்போனால் இந்த உணவுகள் அனைத்துமே மூளையை ஆரோக்கியமாக வைப்பதோடு மட்டுமில்லாமல் உடலையும் ஆரோக்கியமாக வைக்கக்கூடியவை.

எனவே இந்த உணவுகளை கட்டாயம் உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதனையும் படிக்கலாமே

ஓரிதழ் தாமரை பயன்கள் | Orithal Thamarai Side Effects

பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil

புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits

பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning