எலுமிச்சை சாறு பயன்கள் | Lemon Juice Benefits in Tamil

எலுமிச்சை சாறு பயன்கள் | Lemon Juice Benefits in Tamil

தெய்வீகக் கனி, பித்தத்தை முறிப் பதால் பித்த முறி மாதர், ராஜகனி என்று பல சிறப்புப் பெயர்கள் இந்த எலுமிச்சைக்கு உண்டு. இதன் கணக்கில் அடங்காத நன்மைகள்தான் இதன் சிறப்பிற்கு காரணம்.

எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் 

சிட்ரஸ் பழமான இந்த எலுமிச்சையில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வைட்டமின் சி மட்டுமில்லாமல், நார்ச்சத்து, கால்சியம், பாண்டோதெனிக் அமிலம், ஃபோலிக், மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், இப்படி நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

எலுமிச்சை பழத்தின் தீமைகள்

எலுமிச்சை சாறு பயன்கள் | Lemon Juice Benefits in Tamil

இதில் கலோரிகள்  குறைவாக உள்ளதால் யார் வேண்டுமானாலும் பயம்  இல்லாமல் சாப்பிடலாம். முக்கியமாக, இந்த எலுமிச்சை சர்க்கரை நோயாளிகளுக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

உண்மையில் இது நன்மைகள் ஒவ்வொன்றும் வியப்பை  தருவதாக உள்ளது. அந்த வகையில் தினமும் ஒரு 200 மில்லி  வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மூடி, எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நமக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடக்கிறது அப்படி என்ன நன்மைகள்? பார்ப்போம்.

நோய்  எதிர்ப்பு சக்தி

எலுமிச்சையில் அதிகம் உள்ள வைட்டமின் சி நமது உடலுக்கு நோய்  எதிர்ப்பு சக்தியை கொடுக்க கூடியது. ஒருவருக்கும் ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சி அளவில் பாதியை ஒரு எலுமிச்சை கொடுத்து விடும்.

எனவே அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும். இதனால் சளி, சுவாச கோளாறுகள் மற்றும் நுரையீரல் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

எலுமிச்சை பழத்தின் தீமைகள்

சீரான குடல் இயக்கம் 

இந்த எலுமிச்சை செரிமானத்திற்கு உதவும். பித்தநீரை சுரக்க உதவுகிறது. முக்கியமாக இதில் உள்ள கனிம சத்துகள் மற்றும் வைட்டமின்கள் செரிமான பாதையில் உள்ள  நச்சுகளை  எளிதில் வெளியேற்றும்.

எனவே தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் குடல் இயக்கம் சீராக இருக்கும்.

வலிமையான எலும்புகள்

நமது எலும்புகள் வலிமையாக இருக்க நமது உணவில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் இருக்க வேண்டியது அவசியம்.

எலுமிச்சையில் இந்த அத்தனை சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. எனவே அடிக்கடி எலுமிச்சை பழசாறு அருந்தி வந்தால் எலும்புகள் வலிமை பெற்று எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்க முடியும்.

சர்க்கரை நோயாளி

இதில் உள்ள விட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சர்க்கரை தடுக்க நினைப்பவர்களுக்கும் மிகச் சிறந்தது என்கிறது அமெரிக்க நீரிழிவு சங்கம்.

எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை பதினோரு மணியளவில் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்த சர்க்கரையும் சீராகும். உடனடி ஆற்றல் கடித்து உடலுக்கு புத்துணர்வும் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு தீமைகள்

 உடல் எடையை குறைய

இதில் உள்ள பெக்டின் என்ன கரையக்கூடிய சத்து   உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே இதை தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையத் தொடங்கும்.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

கல்லீரல் ஆரோக்கியம் 

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது கல்லீரலில்  தேவையில்லாத நச்சுகள் சேர்ந்து பிற்காலத்தில் நோய்களை ஏற்படுத்தும்.

இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க அடிக்கடி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் கல்லீரலில் தங்கி இருக்கும் அத்தனை நச்சுக்களும் நீங்கி கல்லீரல் தூய்மையாகி கல்லீரல் ஆரோக்கியமாக இயங்கும்.

குறிப்பாக மது, புகை பழக்கம் உள்ளவர்கள் அவசியம் பின்பற்ற வேண்டும்.

மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

சிறுநீரக கல் 

இந்த எலுமிச்சை சாறு, சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும் தடுக்கக்கூடியது. காரணம் எலுமிச்சையில் உள்ள சிட்ரேட் பெரிய கற்களைக் கூட உடைத்து சிறுநீர் வழியாக எளிதாக உதவுகிறது.

 Lemon Juice Benefits in Tamil

புற்றுநோய் 

பழங்காலம் முதலே புற்றுநோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழமான இந்த எலுமிச்சையை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதில் உள்ள  வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளதால் இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல் உருவாகாமல் தடுத்து புற்று ஏற்படாமல் தடுக்கிறது.

சிறுநீராக ஆரோக்கியம் 

மேலும் சிறுநீரின் அளவை அதிகரித்து உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது.

எலுமிச்சை சாறு பயன்கள்  Lemon Juice Benefits in Tamil

மேலும் 

அதுமட்டுமல்ல இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்  உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி நம்மை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைச்சிருக்க உதவும்.

அதே போன்று, உடற்பயிற்சிக்கு முன், எலுமிச்சை சாறு அருந்தினால், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் களைப்பு நீங்கும்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், எலுமிச்சை சாறு அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும்.

மேலும் இது, பித்தத்தைப் போக்கும், மலச்சிக்கலைப் போக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தி நிறுத்தும், காலரா கிருமிகளை ஒழிக்கும், பல் சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்தும். மஞ்சள் காமாலையும் குணப்படுத்த உதவுகிறது.

முக்கியமாக, யானைக்கால் வியாதியையும் குணப்படுத்த உதவுகிறது.

எனவே இவ்வளவு நன்மைகள் கொண்ட, எங்கும் எளிதாக கிடைக்கக்கூடிய, இந்த எலுமிச்சையை, நீங்களும் பயன்படுத்த தொடங்குங்கள். நிறைய நன்மைகளை பெற்று, ஆரோக்கியமாக வாழுங்கள்.

இதனையும் படிக்கலாமே 

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning