பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil

பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil

நமது உடல் ஆரோக்கியதிற்குப் பல நன்மைகளை பனைமரம் கொடுக்கிறது, பனைக்கிழங்கு, பனைநொங்கு இந்த வரிசையில் முக்கியமான மருத்துவ பொருளாக பனங்கற்கண்டும் கிடைக்கின்றது.

இது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். பதினைந்திற்கும் மேற்பட்ட மருத்துவ நன்மைகள் பனங்கற்கண்டில் கிடைக்கிறது. இப்பதிவில்பனங்கற்கண்டின் மருத்துவ நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

பனங்கற்கண்டு நன்மைகள் Panakarkandu Uses in Tamil

சளி

பனைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பனங்கற்கண்டு குளிர்காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெறும் பங்காற்றுகிறது.
சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்கினால் சளி போன்ற தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

வாய் துர்நாற்றம்

அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் சாப்பிட்டவுடன் வாயைத் தண்ணீருடன் கொப்பளிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை ஏற்படுவது என்பது ஒரு சாதாரண விஷயம்.

உங்கள் வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்கச் சிறிது சீரகம், பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும்.

தொண்டைக்கட்டு

ஜலதோஷ பாதிப்பால் தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டைக் கட்டு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சரியாகப் பேச முடியாமலும் சாப்பிட முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றன.

இந்தபிரச்சனையைப்போக்க அரை தேக்கரண்டி மிளகு தூள், அரை தேக்கரண்டி நெய் மற்றும் அரை தேக்கரண்டி பனங்கற்கண்டைச் சேர்த்துச் சாப்பிட்டால் தொண்டை வலி மற்றும் தொண்டைக் கட்டு சீக்கிரம் குணமாகும்.

உடல் சத்து

தினந்தோறும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறுவது அவசியம் ஆகும்.

உங்களின் உடல் சோர்வு நீங்கவும் உடல் இழந்த சத்துகளை மீண்டும் பெறவும் அரை தேக்கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சத்துகளை நீங்கத் திரும்பப் பெறுவதுடன் உடல் மற்றும் மனதின் சுருசுருப்பை அதிகரிக்கிறது.

பனை சர்க்கரை நீரிழப்புக்கு சிகிச்சையளிக்கிறது மற்றும் உடலின் உயிரணுக்களுக்குள் உப்பு சத்தை சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது.

பனங்கற்கண்டு நன்மைகள் Panakarkandu Uses in Tamil

நியாபாக சக்தி

மூளையின் உயிரணுக்கள் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்களுக்கு நியாபாகத் திறன் அதிகம் இருக்கின்றது.

நியாபாகத் திறனை மேம்பட நினைப்பவர்கள் சிறிது பனங்கற்கண்டு, பாதம் பருப்பு மற்றும் சீரகம் இவற்றைச் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன்பு சாப்பிட்டு வந்தால், உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் கண் பார்வை திறன் மேம்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று உடல் நலத்தை பாதுகாப்பதில் உடலில் இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்கவேண்டியது அவசியம்.

உங்களின் நோய் எதிர்ப்புச் சக்தி வீரியமிக்கதாக இருக்க பனங்கற்கண்டுடன் சேர்த்து பாதம், மிளகு தூள் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

பனங்கற்கண்டு நன்மைகள் Panakarkandu Uses in Tamil

சிறுநீரக கல்

சுண்ணாம்பு அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

இந்த பிரச்சனையைத் தீர்க்க இரண்டு தேக்கரண்டி வெங்காயச் சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் சுலபத்தில் கரையும் மற்றும் சிறுநீரக மேம்படும் அதிகரிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பமாக இருக்க கூடிய பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் காலம் வரை ஒரு சில உடல் ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பனங்கற்கண்டுகளைக் கருவுற்ற பெண்கள் சாப்பிட்டு வந்தால் மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப்புண் முதலியவை குணமாகின்றன. இரத்த அழுத்தத்தையும் சீராகுகிறது.

பனங்கற்கண்டு நன்மைகள் Panakarkandu Uses in Tamil

உடல் சூடு

கோடைக்காலங்களில் வளரும் உடல் வெப்பத்தால் உடலில் கட்டிகள் தோன்றுவது, நீர்ச் சுருக்கு, உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு எனப் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த காலங்களில் பனங்கற்கண்டு அதிகம் சாப்பிடுவதாலும் பானங்களில் பனங்கற்கண்டுகளைக் கலந்து அருந்துவதாலும் உடல் வெப்பம் மற்றும் உஷ்ண வியாதிகள் அனைத்தையும் நீக்கமுடியும்.

நரம்பு பிரச்சனைகள்

பனங்கற்கண்டில் பச்சைக் காய்கறிகள் மற்றும் வாழைப்பழங்களை காட்டிலும் சாம்பல் சத்து அதிக அளவில் உள்ளது.

தசைச் சுருக்கம் மற்றும் வழக்கமான இதயத்துடிப்பு போன்ற நல்ல நரம்பு மண்டல செயல்பாட்டைப் பராமரிக்கச் சாம்பல் சத்து அவசியம்.

போதுமான சாம்பல் சத்தை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும்.

எலும்பு பிரச்சினைகள்

எலும்பு பிரச்சினைகள் அணைத்து வயதினருக்கும் மிகவும் பொதுவான பிரச்சினை. எலும்பு சிதைவு மற்றும் முழங்கால் வலி போன்ற பிரச்சினைகள் இந்த விஷயத்தில், பனங்கற்கண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பனை மிட்டாயில் சுண்ணாம்பு மற்றும் சாம்பல் சத்து நிறைந்துள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

பனங்கற்கண்டு நன்மைகள் Panakarkandu Uses in Tamil

இரத்த சோகை

இரத்த சோகை பிரச்சினைகள் உள்ளவர்களுக்குப் பனங்கற்கண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் பனங்கற்கண்டில் நிறைய இரும்புச்சத்து உள்ளது.

பனங்கற்கண்டு குறிப்பாகப் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடலில் ஆரோக்கியமான இரத்தம் வைத்திருக்க உதவுகிறது.

நீரழிவு நோய்

பனங்கற்கண்டு சர்க்கரை அளவு மிகவும் குறைவு.இது இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்காது.

இது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது குடும்பத்தின் இரத்த சொந்தங்களில் நீரிழிவு நோய்கொண்டவர்களுக்கு, வெள்ளை சர்க்கரைக்குப் பனங்கற்கண்டுஒரு நல்ல மாற்றாகும்.

பனங்கற்கண்டு அதிகமாக உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கும் மற்றும் நீரிழிவு நோயாளிகளைப் பாதிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகப் பனங்கற்கண்டு ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.

பனங்கற்கண்டு நன்மைகள் Panakarkandu Uses in Tamil

இதனையும் படிக்கலாமே

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning