வெந்தய கீரை பயன்கள் | Vendhaya Keerai Benefits
நாம் அனைவருமே பெரும்பாலும் வெந்தயத்தினை மட்டுமே பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் வெந்தய கீரை பற்றி அதிகம் யாருக்கும் தெரிவதில்லை. அடங்கியுள்ளன. வெந்தய கீரையில் உள்ள மருத்துவகுணங்கள் என்ன எப்படி பயன்படுத்துவது என்று பாப்போம்.
இரத்த அழுத்தம்
வெந்தயம் உயர் ரத்த அழுத்தம், சீத கழிச்சல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யக்கூடியதாக இருக்கிறது.
இரும்பு சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகை வராம தடுக்கிறது.
வயிற்று புண்
வயிற்று புண் உள்ளவர்கள் அரைமில்லி அளவு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து குடித்து வந்தால் விரைவில் ஆகலாம்.
கண் பார்வை
கண் பார்வை கோளாறு இருப்பவர்கள் வெந்தயத்தை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால், கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
வெந்தயக்கீரையில் உள்ள உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் முதிர்ச்சியை தடுக்கிறது.
பித்தம்
வெந்தயக் கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
கல்லீரல் வீக்கம்
வெந்தயக் கீரையை அரைத்து அதனுடன் வெல்லம் சேர்த்து லேகியம் செய்து நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும் இவ்வாறு சாப்பிடுவதால் கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள் ஆகும்.
பெண்கள் ஆரோக்கியம்
கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், உணவில் வெந்தயக் கீரையை அதிகம் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
வெந்தயக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த கீரை நல்ல மருந்தாக இருக்கிறது.
வெந்தயக்கீரையை சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை சேரும் விகிதம் குறைகிறது.
கீரையில் உள்ள அமினோ ஆசிட் உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டி சரக்கரையின் அளவினை கட்டுப்பாட்டுடன் வைத்து கொள்ளா உதவுகிறது.
இருமல்
உலர்ந்த திராட்சை பழம் பத்து, சீரகம் அரை தேக்கரண்டி எடுத்து இதோடு வெந்தயக்கீரையை சேர்த்து கஷாயம் குடித்தால் இருமல் குணமாகும்.
வாயு கோளாறு
வாயு கோளாறுகளுக்கு, சிறிது ஓமம் எடுத்து, வெந்தயக்கீரையுடன் சாப்பிட்டால், வாயுக் கோளாறுகள் அனைத்தும், குணமாகிவிடும்.
வயிற்று உபாதை
வெந்தயக்கீரையுடன், சிறிதளவு சீரகம் சேர்த்து கஷாயமாக்கி, காலை, மாலை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
மேலும் வெந்தயக்கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
இதனையும் படிக்கலாமே
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
- கேரட் நன்மைகள் தீமைகள் | Carrot Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
6 Comments
Comments are closed.