காட்டுயானம் அரிசி பயன்கள் | Kattuyanam Rice Benefits in Tamil

காட்டுயானம் அரிசி பயன்கள்  | Kattuyanam Rice Benefits in Tamil

நமது பாரம்பரிய அரிசிகளில் இந்த காட்டுயானம் அரிசியும்   ஒன்று.  இந்த காட்டுயானம் அரிசியின் நிறமானது வெள்ளை நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் சற்று தடித்து காணப்படும்.

பெயர் காரணம் 

இந்த அரிசியானது ஏழு மாதங்களில் வளரக்கூடியது. மேலும் இது ஏழு முதல் எட்டு அடி வரை வளரக்கூடிய நெல்வகையாகும்.

அதாவது ஒரு யானையினை மறைக்கக் கூடிய அளவிற்கு உயர்ந்து வளர்வதன் காரணமாக இப்பெயர் பெற்றது என்ற கருத்து உண்டு.

மேலும் இந்த காட்டு ஞானம் அரிசி ஆனது சாப்பிட்டு வரும் பொழுது உடலுக்கு யானை பாலம் கிடைக்கும் என்ற கூற்றினாலும் இப்பெயர் பெற்றது என்கின்றனர்.

மலச்சிக்கல்

இதில் நார்சத்து  ஆனது அதிக அளவில் அடங்கியுள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்து, கரையாத  நார்ச்சத்து என இரண்டும் கொண்டுள்ளது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காட்டுயானம் அரிசி ஆனது சிறந்த மருந்தாக உள்ளது.

இவர்கள் தொடர்ச்சியாக இந்த அரசியைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல ஒரு பலன் கிடைக்கும்.

Kattuyanam Rice Benefits in Tamil

புற்றுநோய்

இந்த காட்டுயானம்  அரிசி  உடலில் உள்ள புற்றுநோய் செல்களினை அழித்து போராடக்கூடிய ஆற்றல் கொண்டது.

மேலும் புற்றுநோயினை குணப்படுத்தக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. எனவே புற்றுநோய் வராமல் முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்கு உங்களுடைய உணவு முறையில் சற்று மாறுபடுத்தி காட்டுயானம் அரிசியையும் பயன்படுத்தி வாருங்கள்.

இதய ஆரோக்கியம்

இந்த காட்டுயானம்  அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆனது அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது.

இது இதய நோய்களை குணப்படுத்துவதற்கு ஒரு அற்புதமான மருந்து. எனவே இதயம் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த அரிசியினை சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

kattuyanam rice health benefits

சர்க்கரை நோய்

இந்த காட்டுயானம் அரசியை  சாப்பிட்டு வருவதன் மூலமாக சர்க்கரை நோயானது நம்மை எப்பொழுதுமே நெருங்காது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த அரிசியை சமைத்து சாப்பிடுவதன் மூலமாக, நல்ல ஒரு பலனானது கிடைக்கும். மேலும் சர்க்கரை நோயானது குணமாவது மட்டுமில்லாமல், சர்க்கரையின் அளவானது சமநிலையில் இருக்கும்.

ஊட்டச்சத்து நிறைந்தது

இந்த காட்டுயானம் அரிசியில் இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனிசு அடங்கியுள்ளது. மேலும் இதில் இருக்கக்கூடிய அமினோ  அமிலமானது செரிமானத்திற்கு உதவுகின்றது. மேலும் இதில் உள்ள ஆந்தோசையினின் விரைவில் சருமம் முதுமை அடைவதை தடுக்கிறது.

இந்த அரிசியினை கொண்டு பாயாசம், கஞ்சி, புட்டு, இடியாப்பம், தோசை, இட்லி, அடை, பணியாரம் இது போன்ற வகைகளில் சமைத்து உண்ணலாம்.

இது சுவையாக இருப்பது மட்டுமில்லாமல் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தருவதாகவும் உள்ளது.

kattuyanam rice in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

 

Related Posts

4 Comments

  1. Pingback: noonoo.org
  2. Pingback: iTune gift card

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning