அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் | Stomach Ulcer Treatment at Home in Tamil

அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும் | Stomach Ulcer Treatment at Home in Tamil

அல்சர் என்று சொல்லப்படுகிற குடல்புண் எவ்வாறு ஏற்படுகிறது? அவற்றை எவ்வாறு குணப்படுத்துவது? என்பது பற்றி இன்று பாப்போம். அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபாக்டர் பைலோரி (helicobacter pylori) என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது.

அல்சர் ஏற்பட காரணம்

முதல் காரணம் நேரம் கெட்ட நேரத்தில் சாப்பாடு. காலை உணவை தவிர்ப்பது, மதிய சாப்பாடை தள்ளிப்போடுவது. அடிக்கடி coffee, tea என குடித்து வயிற்றை நிரப்புவது.

சாதாரண தலை வலி, காய்ச்சல் என்றால் உடனே மாத்திரை போடுவது.

எப்பொழுதும் மன அழுத்தத்தோடு இருப்பது. சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ulcer treatment food to eat in tamil

அல்சர் நோய்க்கான அறிகுறிகள்

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, நோய் தீவிரமடையும் போது ரத்தம் கலந்த அல்லது கருப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் போன்றவை ஆகும்.

இதனால் பயப்படத் தேவையில்ல. சித்தாள் மருத்துவத்தில் தீர்வுகள் நிறைய உள்ளன. அவற்றை செய்து வந்தாலே எளிதில் குணப்படுத்தி விடலாம்.

அருகம்புல் ஜூஸ்

அருகம்புல் ஜூஸ் காலையில்,வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதன் மூலம் அல்சர் குணமடையும். இதைத் தவிர உடல் எடை குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப் புற்று குணமடைய, அருகம்புல் ஒரு சிறந்த மருந்து. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்வதில் சிறந்தது அருகம்புல் தான் சிறந்தது.

பீட்ரூட்

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

வாழைப்பழம்

இரண்டு, மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் அல்லது வாழைப்பழம்,அதிக அமிலத்தை சரிப்படுத்தும் தன்மை உடையது.

மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

திரிபலா சூரணம்

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு. சம அளவு எடுத்து பொடித்து அதில் அரை தேக்கரண்டி எடுத்து மோரில் கலந்து பருகினால் அல்சர் குணமடையும்.

திரிபலா சூரணம் ஒரு தேக்கரண்டி, நெய் ஒரு தேக்கரண்ட தேன் அரை தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.

திரிபலா சூரணம் குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

கொத்தமல்லி விதை

கொத்தமல்லி விதைகளை அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு ஆறு பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும்.

இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குடல்புண் உடனே குணமாகும்.

அல்சர் குணமாக என்ன செய்ய வேண்டும்

மேலும்

மாதுளம் பழச்சாறு அல்சர்க்கு மிகவும் நல்லது.

நெல்லிக்காய் சாறை, சர்க்கரையுடன் சேர்ந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

மணத்தக்காளிக் கீரையை பாசிப்பயிறு, நெய் சேர்த்து, சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, சம அளவு எடுத்து பொரித்து இரண்டு கிராம் எடுத்து உணவிற்கு பின் உண்ணலாம். இவ்வாறு செய்து வந்தாலும் அல்சர் உடனே குணமாகும்.

அல்சர் உள்ளவர்கள் செயாக்கூடாதவை

குடல்புண் இருக்கும் பொழுது எதையெல்லாம் சேர்க்கலாம் முட்டைகோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம் பழம், வாழைப்பழம், தயிர், மோர், இளநுங்கு, இவற்றை சாப்பிடலாம்.

கடைபிடிக்க வேண்டியது

காலை உணவை தவிர்க்கக்கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும். சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும்

இதனையும் படிக்கலாமே

 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning