கோதுமை பயன்கள் தமிழ் | Godhumai Benefits in Tamil

கோதுமை பயன்கள் தமிழ் | Godhumai Benefits in Tamil

கோதுமை மாவில் முழு சக்தியையும் பெறுவது எப்படி?

கோதுமையை அதன் சக்திகளை இழக்காமல் எப்படி அரைப்பது என்பது பற்றி பார்ப்போம். பொதுவாக எல்லோர் வீட்டிலும் கோதுமையைக் கொண்டு செய்யப்படும் உணவுகளான சப்பாத்தி, பூரி, இடியாப்பம், பணியாரம் என்று விதவிதமாக அடிக்கடி செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் கடையில் வாங்கும் கோதுமை மாவில் அரைக்கும் முறையில் அதில் உள்ள அனைத்து சத்துக்களும் இழந்து வெறும் சக்கையை தான் நாம் பயன்படுத்துகிறோம்.

இதனால் வேறு பல நோய்களுக்கும் காரணமாக கோதுமை மாவு அமையக்கூடும். பசையம் ஒவ்வாமை இருப்பவர்கள் மட்டும் கோதுமையை தவிர்க்கலாம் என்றும் மற்றவர்களுக்கு கோதுமை நன்மை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

கோதுமையில் உடலுக்கு நன்மை செய்யும் ஆன்டிஆக்ஸிடென்ட் ,வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

பொதுவாக கடைகளில் கோதுமை மாவுகளில் சத்து இருக்காது என்றும் அரிசியை விட, கோதுமையில் நார்ச்சத்து அதிகம் என்றும் ஆனால் கோதுமையை இயந்திரத்தில் மாவாக அரைக்கும் பொழுது, அதில் உள்ள நார்ச்சத்து நீக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் கூறப்படுகிறது.

whole wheat in tamil

எனவே நல்ல கோதுமைகளை நாமே வாங்கி முறைப்படி அரைக்கும் பொழுது அதில் உள்ள சத்து வீணாவதை தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கோதுமையில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்றால் அது நார்ச்சத்து தான் அதன் காரணமாக சப்பாத்தியை குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மளால் சாப்பிட முடியும் என்பதுதான்.

இப்பொழு, கோதுமையை எப்படி பதப்படுத்தி அரைக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

ஒரு ஐந்து கிலோ சம்பா கோதுமையை வாங்கி சுத்தம் செய்து பெரிய பாத்திரத்தில் போட்டு கோதுமை மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்ற வேண்டும்.

அது பனிரெண்டு மணி நேரம் ஊறிய பின் நீரை வடித்து விட வேண்டும். இதை செடிகளுக்கு ஊற்றி விடலாம். மேலும் இதனால் கோதுமையில் மிகுந்துள்ள ரசாயனமும் பெருமளவு வெளியேறிவிடும்.

நீரை வடித்த பின் பாத்திரத்தின் மீது கெட்டியான ஈரத்துணியைப் போட்டு மூடிவிட வேண்டும். இருபத்தி நான்கு மணி நேரம் அல்லது முப்பது மணி நேரம் கழித்துப் பார்த்தாள் கோதுமை முளை விட்டிருக்கும்.

whole wheat in tamil

முளைகட்டிய கோதுமையை விரித்த துணியில் பரப்பி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த கோதுமையை மாவு அரைக்கும் இயந்திரத்தில் கொடுத்து சூடு ஏறாமல் இரண்டுக்கு பதிலாக, மூன்று அல்லது நான்கு முறை போட்டு அரைக்கச் சொல்ல வேண்டும்.

சூடு ஏறாமல் அரைக்கும் பொழுது அதில் நுண் சத்துக்களும், நார்ச்சத்தும் சிதையாமல் கிடைக்கும். எனவே சிரமம் பார்க்காமல் இப்படி அரைத்து வைத்துக் கொண்டோமானால் குழந்தைகளுக்கு விதவிதமான சத்தான பலகாரங்களை செய்து கொடுக்கலாம்.

கோதுமை பயன்கள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning