வாழைப்பூ பயன்கள் | Valaipoo Health Benefits in Tamil

வாழைப்பூ பயன்கள் | Valaipoo Health Benefits in Tamil

நாம் அன்றாடம் சாப்பிடக்கூடிய உணவுகளில் பல வகை உணவுகள் உள்ளது.
நமது நாவிற்கு சுவை தரக்கூடிய பலவகை பூ, காய்கறிகள் , பலவகைககள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.

அவ்வாறு சுவை நிறைந்த பூ வகைகளில் ஒன்றான வாழைப்பூவின் நண்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ரத்தசோகை

இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையானது அதிக அளவில் இருக்கும் பட்சத்தில்தான் ரத்தசோகை குறைபாடு ஏற்படாது.

ஆனால் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் இரத்த சோகை ஏற்படுகிறது.

இந்தக் குறைபாடானது பருவ வயதினர், குழந்தைகள் ஆகியவர்களிடம் அதிக அளவில் உள்ளது.

ரத்த சோகை பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒருமுறையேனும் வாழைப்பூ சமையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.

வாய் மற்றும் பற்கள்

ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி சமையலில் சேர்த்து வரும்போது வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

ஈறுகளில் வீக்கம், சொத்தைப் பற்கள், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகின்றது.

ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க வாரத்தில் ஒரு முறையேனும் வாழைப்பூ சாப்பிட்டு வரவேண்டும்.

வாழைப்பூ பயன்கள் Valaipoo Health Benefits in Tamil

மூலம்

மலச்சிக்கல் காரணமாக மூலம் ஏற்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கு மூலம், பவுத்திரம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

வாழைப் பூவானது மூலம் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகின்றது.

வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. மேலும் மூலத்தினால் உண்டான புண்கள் குணமடைய வழிவகுக்கின்றது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு ஆனது உடலுக்கு சேராத உணவுகளை சாப்பிடுவதாலும், அழுகிய கெட்டுப்போன உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது.

இந்த வயிற்றுப் போக்கின் காரணமாக உடலின் ஒரு சில அத்தியாவசியமான சத்துக்கள் இழப்பு ஏற்படுகின்றது.

வயிற்றுப்போக்கு நின்ற பின்னர் வாழைப்பூ சாப்பிட்டு வருவதன் மூலமாக நாம் இழந்த சத்துகளை நம் உடலுக்கு மீண்டும் கொடுக்கும்.

வாழைப்பூ பயன்கள் Valaipoo Health Benefits in Tamil

கண்கள்

மனித உடலில் ஒரு இன்றியமையாத உறுப்பாக இருப்பது கண்கள்தான்.

நம்முடைய கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம்முடைய கடமையாகும்.

வாழைப்பூவில் வைட்டமின் ஏ சத்தானது அதிக அளவில் காணப்படுகின்றது.

இந்த வைட்டமின் ஏ சத்தானது கருவிழியின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.

மேலும் கண்களில் புரை ஏற்படுவதை தடுக்கின்றது.

சுறுசுறுப்பு

நாம் சுறுசுறுப்பாக இருக்கும் பட்சத்தில் தான் நாம் செய்யக்கூடிய வேலைகளை வெறுப்பின்றி விரைவில் செய்து முடிக்க இயலும்.

பொட்டாசியம் சத்தானது வாழைப்பூவில் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே வாழைப்பூவினை வாரத்தில் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலமாக நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.

மேலும் இது மூளையினை விழிப்புணர்வுடன் இருப்பதற்கு உதவுகிறது.

வாழைப்பூ பயன்கள் Valaipoo Health Benefits in Tamil

அல்சர்

இன்றைய காலகட்டத்தில் அல்சர் என்பது சாதாரண ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது.

அல்சர் என்பது உடலில் உள்ள ஒருவகை புண்ணாகும். அல்சர் இருப்பவர்கள் மிக முக்கியமான காரணமாக இருப்பது அதிக அளவில் காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், மேலும் காலை உணவினை தவிர்ப்பதாலும் உருவாகின்றது.

வாழைப்பூ அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் புண்கள் விரைவில் ஆறும்.

மேலும் ஜீரண அமிலத்தின் செயல்பாடுகளை வாழைப்பூ ஆனது சீரமைக்கும்.

ஆரோக்கியமான இதயம்

நமது இதயமானது ஆரோக்கியமாக இருப்பதற்கு பொட்டாசியம் சத்தானது தேவைப்படுகின்றது.

வாழைப்பூவில் பொட்டாசியம் சத்தானது அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றது. வாழைப்பூ அடிக்கடி சாப்பிடும் பொழுது ரத்த அழுத்தம் சீரான நிலையில் இருக்கும்.

வாழைப்பூ பயன்கள் Valaipoo Health Benefits in Tamil

உடல் எடை

வாழைப்பூவில் கொழுப்பு சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது உடல் எடையை சீராக அதிகரிக்க பெரிதளவில் பயன்படுகின்றது.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப காலத்தில் வாந்தி, தலைசுற்றல், உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்ய வாழைப்பூ இது ஒரு சிறந்த உணவாக விளங்குகின்றது.

வாழைப்பூ பயன்கள் Valaipoo Health Benefits in Tamil

உடல் சூடு

அதிகளவில் உடல்சூடு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவுடன் சிறிது அளவு பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் சூடானது குறையும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கண்டிப்பாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: steenslagfolie
  2. Pingback: situs togel online
  3. Pingback: XG CASINO

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning