சௌசௌ பயன்கள் | Chow Chow Vegetable in Tamil
நாம் உண்ணும் உணவில் சில காய்கறிகளை எப்பொழுதாவது மட்டும் தான் பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்றுதான் சௌசௌ.
இதன் மருத்துவ நன்மைகளை நீங்கள் அறிந்து வைத்திருந்தால் வாரம் மூன்று நாட்கள் கட்டாயம் உங்கள் சமையலில் சௌசௌ இருக்கும்.
நூறு கிராம் சௌசௌவில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
- வைட்டமின் ஏ
- வைட்டமின் பி 1
- வைட்டமின் சி
- வைட்டமின் கே
- கார்போஹைடிரேட் 17.8%
- ஸ்டார்ச் 10.5%
- புரதச்சத்து 5.4%
- சுண்ணாம்பு சத்து 6.7%
- பாஸ்பரஸ் 4.8%
- மாங்கனீஸ் 9%
- காப்பர் 6%
- ஜிங்க் 5%
- பொட்டாசியம் 3%
- மெக்னீசியம் 4%
- நார்ச்சத்து 9.4%
- இரும்புச்சத்து 2.5%
இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் உள்ள சௌசௌ நீங்கள் வாரம் எத்தன முறை சாப்பிடுவீர்கள்? எந்தெந்த நோய்களை இந்த சௌசௌ குணப்படுத்துகிறது என்பதை இனி பார்க்கலாம்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட சௌசௌ உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.
உணவு கட்டுப்பாடு
குறிப்பாக உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் சமயத்தில் சௌசௌ எடுத்துக் கொள்வதால் அது மிகவும் உதவியாக இருக்கும்.
உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் நேரத்தில் ஒரு கூடுதல் ஊட்டச்சத்தை உடலுக்கு வழங்கும் காய் இந்த சௌசௌ. இது ஹைப்பர் டென்சன் ஐ குறைக்கின்றது.
ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் இதனை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் நேரத்தில் தினமும் காலை உணவிற்கு முன்பு இந்த காயை எடுத்துக் கொள்வதால உங்களுடைய உடல் சீராக இருக்க உதவுகின்றது.
சௌசௌ காயில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் உடலில் உள்ள கொழுப்பை திறமையான முறையில் எரிக்க உதவுகின்றது. வேகவைத்த சௌசௌ கஞ்சியை உங்கள் உணவில் சேர்த்து அரிசியை தவிர்க்கலாம்.
உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுது பொரித்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. பொரித்த உணவால் கொழுப்பு அதிகரிக்கும். எடை குறைப்பிற்கு சௌசௌ சேர்த்துக் கொள்வதுடன் பயிற்சிகளும் மேற்கொள்வதால் எளிதில் பலன் கிடைக்கும்.
உடலில் கொழுப்பு அளவு குறைவதுடன் சௌசௌ உட்கொள்வதால் உடலின் கொலஸ்ட்ரால் அளவும் குறைகின்றது.
மதிய உணவு மற்றும் இரவு உணவின் பொழுது சௌசௌ உட்கொள்வதால் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவும் குறைகின்றது.
உடல் நலத்திற்கு பெரிதும் நன்மைகளை செய்யும் ஒரு காய் இந்த சௌ சௌ. இதில் இருக்கும் வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதுடன் உங்கள் ஆரோக்கியமான உணவு பட்டியலுடன் இந்த சௌசௌவை இணைத்துக் கொள்வதால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றது.
புற்றுநோய்
சௌசௌவில் உள்ள உயர் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்பால் இது புற்றுநோயை தடுக்க முள் சீத்தாப்பழ இலைகளை போல இவையும் பெரிதும் உதவுகின்றது.
குறிப்பாக பெருகுடல் புற்றுநோயை இந்த காய் பெரிதும் தடுக்கின்றது. உணவு கட்டுப்பாட்டின் போது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் சீராக மற்றும் மென்மையாக வைத்துக்கொள்வது அவசியம்.
இதற்காக வேகவைத்த சௌசௌ உட் கொள்வது ஒரு ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும்.
உணவு கட்டுப்பாட்டில் இந்த காயை பயன்படுத்த முக்கிய காரணம் இதில் உள்ள குறைந்த கலோரி நூறு கிராம் சௌசௌவில் பதினாறு கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
அதிலும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு முற்றிலும் இல்லை. இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து, செரிமானத்தை சீராக்குகின்றது.
உணவு கட்டுப்பாட்டிற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் இந்த காயை நீங்கள் பயன்படுத்தி பலன் அடையலாம்.
சௌசோவில் காணப்படும் மாங்கனீஸ், கொழுப்பு மற்றும் புரதத்தினை உடைத்து உடலுக்கு தேவையான ஆற்றலினை வழங்குகின்றது.
எனவே, சௌ சௌ வை காலை உணவில் சேர்த்து நமது உடலுக்கு தேவையான ஆற்றலினை உடனடியாக பெறலாம்.
பெண்கள் ஆரோக்கியம்
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது ரத்தத்தில் ஃபோலேட்களின் அளவானது குறைவாக இருக்கும்.
ஃபோலேட் பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் பிறப்பு குறைபாடுகள் இதய குறைபாடுகள் நரம்பு குறைபாடுகள் ஆகியவை ஏற்படும்.
குழந்தையானது பிறக்கும்போது எடை குறைவாக இருக்கும். எனவே ஃபோலேட்கள் அதிகம் உள்ள சௌ சௌ உணவில் சேர்த்துக் கொள்வது நலமாகும்.
வைட்டமின் இ ஃபோலேட்கள், வைட்டமின் சி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் சௌ சௌவில் காணப்படுகின்றன.
துத்தநாகம் சருமத்தில் எண்ணெய் சுரப்பினை கட்டுப்படுத்துகின்றது. இதனால் பரு ஏற்படுவது, தடுக்கப்படுகின்றது.
வைட்டமின் சி சருமம் மூப்படைவதை தள்ளி போடுகின்றது. ஃபோலேட்கள் சருமத்தின் உறுதிப்பாட்டினை அதிகரிக்கின்றது.
எனவே ஆரோக்கியம் பெறுவதற்கு சௌசௌவினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மலசிக்கல்
Diet எண்ணும் உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் பலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு குடல் இயக்கத்தில் பாதிப்பு உண்டாகும் நிலை ஏற்படுகின்றபன.
ஆனால் சௌசௌ எடுத்துக் கொள்வதால் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்தின் காரணமாக உங்கள் செரிமான மண்டலம் மென்மையாக அதன் செயலை மேற்கொள்கின்றது.
உங்கள் செரிமான மண்டலம் சீராக இயங்குவதற்கு இந்த காய் மிகவும் அவசியம்.
இரத்த சோகை
இரும்பு சத்து குறைபாட்டினால் இரத்த சோகை நோய் உண்டாகின்றது. இதில் உள்ள வைட்டமின் பி 2 மற்றும் இரும்புச் சத்து ரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவுகின்றது.
மேலும் இந்த காயில் உள்ள ஃபோலேட்கள் ரத்த சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடைய உதவுகின்றது.
இதிலுள்ள வைட்டமின் கே ஆனது காயம் உண்டாகும் போது ரத்த உறைதலை உண்டாக்கி ரத்த சிவப்பணுக்களை சேமிக்கின்றது.
மேலும், இதில் காணப்படும் வைட்டமின் சி, செம்பு சத்து, துத்தநாகச் சத்து ஆகியவை இரும்புச் சத்தினை உடல் உட்கிரகிக்க உதவுகின்றன.
எனவே, சௌசௌவானது இரத்தசோகைக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.
தைராய்டு
தைராய்டு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சௌசௌவை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
இதில் காணப்படும் காப்பர் தைராய்டு நோயால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் காணப்படுவதால் எலும்பு வலுப்பெறுகின்றன.
இடுப்பு பகுதி கொழுப்புகள்
வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும், அதிகப்படியான கொழுப்புகளை கரைக்க சௌ சௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
சிலருக்கு வயிறு மற்றும் இடுப்பில் அதிகமாக கொழுப்புகள் சேர்ந்து நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த பாதிப்புகளை சரி செய்து அதிகப்படியாக வயிற்றில் உள்ள கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றுவதற்கு சௌசௌச சூப் உதவி செய்யும்.
எப்படி சாப்பிட வேண்டும்?
இதனை சமைத்த பிறகு மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இதனை சமைப்பதற்கு முன்பாக தோலை நீக்கி விட வேண்டும். அதன் பிறகு கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
சௌசௌவை இரண்டு பாதியாக நறுக்கி ஒன்றோடு மற்றொன்றை தேய்ப்பதால் அதன் கொட்டை விலகி அந்த கொட்டையை முழுவதும் நீக்கிய பிறகு மறுமுறை கழுவி விட்டு பிறகு சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
அதை வேக வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு சீரகம் மிளகு தாளித்து கஞ்சி போல செய்தும் குடிக்கலாம்.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil(Opens in a new browser tab)
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil(Opens in a new browser tab)
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil(Opens in a new browser tab)
- விளாம்பழம் மருத்துவ குணங்கள் | Vilampazham Fruit Benefits(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
10 Comments
Comments are closed.