கடுக்காய் பயன்கள் | Kadukkai Uses
கடுக்காய் பயன்கள் | Kadukkai Uses கடுக்காய் உண்டால் நெடுக்காய் வாழலாம். கடுக்காய், எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது.
பெற்றெடுத்தா தாயை விட கடுக்காய் சிறந்தது என்று கூறுவார்கள்.
திரிவளாக்களில் ஒன்று கடுக்காய். சித்த மருத்துவத்தில், பல நோய்களை குணப்படுத்தும் துளி மருந்தாக கடுக்காய் மிக முக்கியமாக சேர்க்கப்படுகிறது.
கடுக்காவில் பல விதமான வகைகள் உள்ளது.
பற்களை வலுப்படுத்தும்
கடுக்காய் பற்களை வலுப்படுத்தும். கடுக்காய், உப்பு, கிராம்பு சேர்த்து பொடியாக்கி பல் துலக்கி வர பல் வலிமை வரும்.
கடுக்காய் பொடியை, அரை தேக்கரண்டி அளவு எடுத்து நீரில் கலந்து உன்று வர உடல் வலிமை வரும். வாய் துர்நாற்றம் நீங்கும். பற்கள் மென்மையாக மாறும்.
மல பிரச்சனை
மல பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இரவும் உணவு அருந்திய பிறகு அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து குடித்தால் மலம் நன்றாக வெளியேறும்.
புண்கள் விறைவில் ஆறும்
அடிபட்ட ரத்தம் வந்த காயங்களின் மீது கடுக்காய் பொடியை தூவுவதன் மூலமாக புண்கள் விறைவில் ஆறும்.
கடுக்காய் பொடியுடன் சிறிதளவு மலையரம்பு சாற்றை கலந்து ஆறாத புண்களின் மீது தடவ புண்கள் விரைவில் குணமாகும்.
உடல் சூடு தணியும்
பதினைந்து கிராம் கடுக்காய் பொடி மற்றும் அதனுடன் நான்கு கிராம் கிராம்பு பொடி சேர்த்து வெந்நீரில் கலக்கி வடிகட்டி வைத்து கொள்ளவும் . அதனுடன் நெய் சேர்த்து காலையில் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சூடு தணியும்.
பல விதமான நோய் குணமாகும்
உடலில் உள்ள பல விதமான நோய்களை குணமாக்கும் சக்தி கடுக்காவிற்கு உள்ளது.
ஒரு நாள் விட்டு, ஒரு நாள் கடுக்காய் பொடி உண்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். உடல் வலிமை வரும், நரம்புகள் வளம் பெரும்.
கடுக்காவை அடிக்கடி உண்டு வந்தால் மனநலம் நன்றாக இருக்கும். நீரிழிவு நோய் கட்டுப்படும். இரத்தத்தை சுத்தம் செய்யும் சக்தி கடுக்காவிற்கு உள்ளது.
பசியின்மையை குணமாக்கும்.
ஒரு பங்கு கடுக்காய் மற்றும் அரை பந்து சிலாகத்து பஸ்பம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து காலை , மாலை உண்டு வர இழைத்த உடல் தேரும். நரம்புகள் முறுக்கேறும்.
இரதம் சுத்தமாகும். இரைப்பை பலப்படும்.
இதனை பத்து நாட்களுக்கு, ஒருமுறை சாப்பிடலாம். கடுக்காய் பொடியுடன் திரட்சையிணை சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக தலைசுற்றல் மற்றும் பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மற்றும் வாய் கசப்பு ஆகியவை குணமாகும்.
கடுக்காய் துளசி விதை, ஜாதிக்காய், சுக்கு இவை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து இரவும் படுக்கும் முன்பு ஒரு சிட்டிகை அளவு பால் கற்கண்டு கலந்து சாப்பிட நாற்பத்தி எட்டு நாட்களில் ஆண் மலடு நீங்கும்.
ஈரல் நோய், குஷ்டம், வயிற்று வலி, இறப்பு , தொண்டை நோய், காமாலை போன்ற நோய்களை குணப்படுத்தும் சக்தி கடுக்காய்க்கு உண்டு.
கடுக்காய் காயகல்ப மூலிகைகளில் ஒன்றாகும். தினமும் அளவோடு பயன்படுத்தி வந்தால் நோய் நொடி இல்லாம நீண்ட நாட்கள் வாழலாம்.
மூக்கில் இருந்து இரத்தம் வந்தால் சிறிதளவு கடுக்காய் பொடியை மூக்கால் நுகர்ந்தால் ரத்தம் வடிதல் நிற்கும். கடுக்காய் தினமும் உண்டு வர உடல் வளம் பெரும். வாயு கோளாறு நீங்கும்.
பத்து கிராம் கடுக்காய் எடுத்து அதே அளவு சுக்கு திப்பிலி சேர்த்து பொடிகலை மாலை அரை தேக்கரண்டி அளவு எடுத்து இருபத்தொரு நாட்கள் ஊண்டு வர, வாத வலி, பித்த நோய்கள் குணமாகும்.
திப்பிலி பயன்கள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் Click