சுரைக்காய் உலகளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏன் தெரியுமா?

சுரைக்காய் உலகளவில் விரும்பி சாப்பிடுகிறார்கள் ஏன் தெரியுமா?

சுரைக்காய் நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்த கூடிய ஒன்று.

இந்த சுரைக்காய்க்கு தாயகம் எனக் கூறப்படுவது ஆப்பிரிக்க கண்டம் தான்.

முதன்முதலில் ஆதிமனிதர்கள் பயிர் செய்த காய்கறிகளில் இதுவும் ஒன்று.

சுரைக்காய் அனைத்து நாடுகளிலும் பயிர் செய்யப்படக்கூடிய ஒன்றாக உள்ளது.

உலகில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சுரைக்காயில் உள்ள நன்மைகள் என்ன என்பதனை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

சுரைக்காயில் உள்ள சத்துக்கள்

சுரைக்காய் உள்ள் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்களின் அளவு விகிதங்கள்
சுண்ணாம்புச்சத்து
பாஸ்பரஸ்
இரும்புச்சத்து
வைட்டமின் பி
ஈரப்பதம் 96.10%
புரதமம் 0.20%
கொழுப்பு 0.10%
தாது உப்பு 0.50%
நார்ச்சத்து 0.60%
கார்போஹைட்ரேட்டும் 2.50%

சுரைக்காய் நன்மைகள்

கல்லீரல்

மனித உடலின் ஒரு முக்கிய உறுப்பு கல்லீரல் ஆகும். நாம் உண்ணும் கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை முறித்து உடல் நலமுடன் இருக்க கல்லீரல் உதவுகிறது.

வாரத்தில் இருமுறையாவது சுரைக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரலில் படிந்து இருக்கக்கூடிய நச்சுக்கள் நீங்கும்.

மூலம்

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் மற்றும் குடல் புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒருவேளை சுரக்காய் சாப்பிடவேண்டும்.

ஏனென்றால் சுரைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

சுரைக்காயை சாப்பிட்டு வரும்பொழுது வயிற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றை குணமாக்கும்.

சுரைக்காய் மூல நோய் உள்ளவர்களுக்கு ஒரு அருமருந்து.

ரத்த அழுத்தம்

இன்றைய காலகட்டத்தில் ரத்த அழுத்தம் என்பது சாதாரண ஒரு நோயாக மாறிவிட்டது.

அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு விதை நீக்கிய நெல்லிக்காய் சிறிதளவு சுரைக்காய் இவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் சாறு பிழிந்து வாரத்தில் இருமுறையாவது வெறும்வயிற்றில் அருந்தி வருவதன் மூலம் ரத்த அழுத்தமானது கட்டுப்பாட்டிற்குள் வரும்.

தூக்கமின்மை

தூக்கமின்மை பிரச்சனையால் பலர் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் சுரக்காய் சாற்றுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் தலைமுடிகளில் நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

இது தலைப்பகுதியில் நன்கு ஊறி தூக்கத்தை எளிதில் வரவழைக்கும்.

மேலும் தூக்கமின்மை நீங்க சுரைக்காய் இலைகளையும் சமைத்து சாப்பிடலாம்.

கண்களின் ஆரோக்கியம்

கண் நமது உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.

தற்காலங்களில் தொலைக்காட்சியை பார்ப்பதாலும், கணினியில் பணிபுரிவதாலும் , தொலைபேசி எண்ணை பெருமளவில் பயன்படுத்துவதாலும் கண்களில் எரிச்சல், வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

இதனை சரிசெய்ய சுரைக்காயினை நன்கு சுட்டு சாம்பலாக்கி கொள்ளவும்.

அதனுடன் தேனினை நன்கு கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக கண் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

அதீத தண்ணீர் தாகம்

அதிக அளவில் வறுத்த உணவுகளையும் கொழுப்பு சத்துக்கள் உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் தண்ணீர் தாகம் அதிக அளவில் ஏற்படும்.

மேலும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் வயிற்றுப்போக்கு மேற்பட்டவர்களுக்கும் அதிகளவில் தண்ணீர் தாகம் ஏற்படும்.

இவர்களுக்கு நாக்கு வறட்சி ஏற்படும் பொழுது தண்ணீர் தாகம் அதிக அளவில் இருக்கிறது.

இவர்கள் அதிக தண்ணீர் தாகம் எடுக்கும் சமயங்களில் பச்சையாக சுரைக்காயை சூப் செய்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அருந்தினால் நாக்கு வறட்சி நீங்கி தண்ணீர் தாகம் குறையும்.

மிக முக்கியமாக சுரைக்காய் ரசத்துடன் உப்பு சேர்க்காமல் அருந்தக்கூடாது.

பித்தத்தைக் குறைக்க

பெரும்பாலானோருக்கு மன அழுத்தத்தினாலும், புதியவை உணவினை சாப்பிடுவதாலும் உடலை இயக்குகின்ற வாதம் மற்றும் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைகிறது.

இதனால் எளிதில் நோய்கள் தாக்கம் ஏற்படுகிறது.

பித்தத்தைக் குறைப்பதற்கு சுரைக்காய் ஒரு இயற்கையான அருமருந்து ஆகும்.

பித்தத்தின் அளவு சமநிலைப்பட மதிய உணவுடன் சுரைக்காய் சேர்த்து சாப்பிட வேண்டும்.

சிறுநீரகம்

சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் அடிக்கடி சாப்பிடவேண்டும். எனவே சுரைக்காய் சிறந்த சிறுநீர்ப் பெருக்கியாக உள்ளது.

சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் சுரைக்காய் ரசத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துவதன் மூலம் சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் ஏற்படாது.

உடல் சூடு குறைய

கோடைகாலம் வந்து விட்டாலே உடல்சூடு அதிகமாகிறது. அதோடு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

சுரைக்காயை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் சூடு குறையும்.

வெப்ப நோய்கள் நமது உடலில் நோய் தாக்காமல் பாதுகாக்கிறது.
மேலும் பளபளப்பான தோற்றத்தை நமது தோலிற்கு கொடுக்கிறது.

இதனையும் படிக்கலாமே

கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu

தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

English Overview

Here we have Sorakkai Uses in Tamil. Is also called nattu sorakkai or sorakkai or sorakkai medicinal uses or sorakkai medicinal uses in tamil or sorakkai benefits tamil or sorakkai juice for weight loss in tamil or sorakkai juice or sorakkai juice benefits or sorakkai juice for weight loss or சுரைக்காய் or சுரைக்காய் பயன்கள் or சுரைக்காய் நன்மைகள் or சுரைக்காய் மருத்துவநலன்கள் or சுரைக்காய் மருத்துவகுணம் or Sorakkai maruthuvam in Tamil or Sorakkai payangal in Tamil or Sorakkai uses in Tamil.

Videio link Click here

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning