சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் | Cycling Benefits in Tamil
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் | Cycling Benefits Tin Tamil
சில வருடங்களுக்கு முன்பு வரை சைக்கிள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம்.
எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிலில்தான் செல்வார்கள். வயதானவர்கள் கூட நெடுந்தூரம் சைக்கிள் ஐ மிதித்துக்கொண்டு சென்று வருவார்கள்.
சைக்கிளில் செல்வதால் செலவில்லாதது என்பது ஒருபுறம் இருக்க மிகச்சிறந்த உடற்பயிற்சியாகவும் இருந்தது. ஆனால் இன்றோ அப்படி இல்லை. எங்கு சென்றாலும் ஒன்று பைக் அல்லது கார்.
இது தான் இன்றைய நிலை. இன்னும் சொல்லப் போனால் கிராமங்களிலும் கூட சைக்கிளின் பயன்பாடு குறைந்துவிட்டது.
இப்படி உடலுக்கு அசைவு என்பது அறவே இல்லாமல் போனதால் இன்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உண்மையில் வெளிநாடுகளில் வாழும் மக்கள் தங்கள் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சைக்கிலில் செல்வதைத்தான் விரும்புகிறார்கள்.
அங்கு சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாக, தளமும் அமைத்து சைக்கிலில் செல்வதை அந்த நாடுகளும் ஊக்குவிக்கிறது.
தினமும் சைக்கிள் மிதிப்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடக்கிறது. உண்மையில் இந்த நன்மைகள் எல்லாம் உங்களுக்கும் தெரிந்தால் பைக்க ஓரம் கட்டிவிட்டு மீண்டும் சைக்கிலில் செல்ல தொடங்கி விடுவீர்கள்.
நுரையீரலும் பலம்
பொதுவா சைக்கிள் ஓட்டும் பொழுது நுரையீரல் இயக்கம் அதிகரிப்பதோடு சுவாசிக்கும் திறனும் மேம்படும். இதனால் குறுகிய நேரத்தில், அதிக அளவு ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்வதோடு உடலின் அனைத்து பாகங்களில் உள்ள கழிவுகள் வியர்வையாக வெளியேரும்.
இதய ஆரோக்கியம்
முக்கியமாக அதிகாலையில் சைக்கிள் ஓட்டும் பொழுது ஒரு நாளைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பது மட்டும் இல்லாமல் நுரையீரலும் பலப்படும்.
அடுத்து தினமும் சைக்கிள் ஓட்டும் பொழுது, இதயத்தை சுற்றிலும் இருக்கக்கூடிய, இதய தசைகள் பலப்படும். மேலும் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என்பதால் இதயத்தின் ஆயுள் காலத்தை நீடிக்கும்.
இதனால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மண அழுத்தம்
மன அழுத்தத்தை அதிகப்படுத்தக்கூடிய, கார்டிசோல் ஹார்மோன்ஐயும் கட்டுப்படுத்தும். இதனால் நாள் முழுவதும், மனம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
உண்மையில் தினமும் சைக்கிள் மிதிப்பது மன அழுத்தம் போன்ற மனம் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த உடற்பயிற்சி ஆகும்.
அதே போன்று தினமும் ஒரு அரை மணி நேரம் சைக்கிள் மிதிப்பதால் எலும்புகளை பலப்படுத்தி உறுதிப்படுத்துகிறது.
மூட்டு வலி
மூட்டு வலி என்பது மூட்டு எலும்புகளுக்கு இடையே இருக்கக்கூடிய மசகு எண்ணெய் பகுதி வறண்டு இருப்பதுதான் காரணம்.
ஆனால் சைக்கிள் மிதிக்கும் பொழுது மூட்டு எலும்புகள் பலப்படும். அதுமட்டுமல்லாமல் மூட்டுகளுக்கு இடையே இருக்கக்கூடிய இணைப்பு திசுக்கள் சீராக இருப்பதற்கும் உதவி செய்யும். இதன் மூலமாக மூட்டு வலி வருவது தடுக்கப்படும்.
குறிப்பாக உட்கார்ந்த இடத்திலேயே அதிகம் நேரம் வேலை செய்பவர்களுக்கும் மற்றும் வயதானவர்களுக்கும் ஏற்படக்கூடிய கீல்வாதம், மூட்டு தேய்மானம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கக்கூடியது.
தசைகள் வலிமை
முதுகுப் பகுதியும், வயிற்றுப் பகுதியும் பலப்படுகிறது. சைக்கிளின் பெடல்களை நன்றாக அழுத்தும் பொழுது வயிற்றுத் தசைகள் வலுவாகிறது.
மேலும், சைக்கிள் ஓட்டும் பொழுது கால் தசை, தொடைப் பகுதி தசைகள், தோள்பட்டை என அனைத்து பகுதியில் உள்ள தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும்.
உடல் எடை குறைக்க
உடல் எடையை குறைக்கவும் தினமும் சைக்கிள் பயிற்சி செய்து வருவது நல்லது. தினமும் சைக்கிள் மிதிக்கும் பொழுது கை, கால், தொடைப் பகுதி இடுப்புப் பகுதி என உடலின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்படும்.
இதனால் கணிசமான அளவு உடல் எடையைக் குறைக்க முடியும்.
உண்மையில், சிறு வயசு முதல் சைக்கிள் பயிற்சி வந்தால் உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கலாம். நாம் சாப்பிட்ட உணவுகளில் உள்ள அதிகப்படியான கலோரிகளில் இருக்கும் திறன் சைக்கிள் ஓட்டுவதால் கிடக்கிறது.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்வது உடற்பயிற்சியோடு தினமும் ஒரு அரை மணி நேரம் சைக்கிள் மிதிக்க வேண்டும் என்பதும் தான்.
இதனால் தினமும், ஆயிரம் கலோரிகள் வரை எரிக்கபடும். இதனால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் சைக்கிள் மிதித்தால் நாளடைவில் இன்சுலின் சுரப்பியை மேம்படுத்தும்.
சுறுசுறுப்பு
இயற்கையான சூழ்நிலையி , சைக்கிள் ஓட்டும் பொழுது, மூளைக்கு தேவையான ஆக்சிஜன் சீராக கிடைப்பதோடு மூளையில் ரத்த ஓட்டமானதும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக நாள் முழுவதும் நல்ல சுறுசுறுப்பாகவும், திறமையாகவும் செயல்பட முடியும். இதனால், மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகமாவதுடன், சிறு மூளையின் வேலைத்திறனும் அதிகமாகிறது.
புற்றுநோய்
தினமும் சைக்கிள் ஓட்டும் பொழுது உடலின் அனைத்து பகுதியில் இருக்கக்கூடிய கழிவுகளும் வெளியேற்றப்படும். முக்கியமாக உடலில் தேவையில்லாத கழிவுகள் அதிகமாக இருப்பதும் ஆரோக்கியமான செல்களை பாதிக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்கள் அதிகமாக இருப்பதும்தான் புற்றுநோய்கள் வர காரணம்.
அந்த வகையில் தினமும் சைக்கிள் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள அனைத்து கழிவு வெளியேற்றப்படுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
முக்கிய குறிப்பு
ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கக்கூடியது. மேலும் நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கும் உதவி செய்யக்கூடியது, இந்த சைக்கிள் பயிற்சி.
உடற்பயிற்சி செய்பவர்களுக்கு குறிப்பாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். அதே போன்று நீட்டி மடக்கும் பயிற்சிகள் என்பது மூட்டுகள், அதை சுற்றியுள்ள தசை நார்களை வலுவாக்கும்.
ஆனால் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அனைத்து பயிற்சிகளையும் செய்த பலனை பெற்றுவிடலாம்.
எனவே, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு அரை மணி நேரம் சைக்கிள் பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியம் நிச்சயம் அதிகரிக்கும்.
முக்கியமாக போக்குவரத்து நெரிசல் குறைவான இயற்கை சூழல் கொண்ட இடத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.
முன் பாதத்தால் மிதித்துதான் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது கால் தசைகள் கூடுதல் பலம் பெறும்.
அசையாத சைக்கிலில் தனி அறையில் ஓட்டுதலை விட ஓடும் சைக்கிளில் திறந்தவெளியில் ஓட்டுதலே சிறந்தது.
எனவே தினமும் ஒரு அரை மணி நேரம் சைக்கிள் பயிற்சி செய்தால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம் ஆயுள் காலத்தை அதிகரிக்கும் என்பது முற்றிலும் உண்மை.
எனவே, நீங்களும் இனி பைக், காரில் செல்வதை விட்டுவிட்டு சைக்கிலில் செல்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள் நோய்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ்வீர்கள்.
இதனையும் படிக்கலாமே
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.