முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?

நம்மில் நிறைய பேர் முட்டைகோசை அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் இதன் அபார நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்ல என்றுதான் சொல்ல வேண்டும்.

உண்மையில் முட்டைகோசின் அளவுக்கு அதிகமான நன்மைகள் தெரிந்தால் முட்டைகோஸ் பிடிக்காது என்பவர்கள் கூட சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

முட்டைகோஸ் பயன்கள்

Cabbage benefits in Tamil முட்டைகோஸ் பயன்கள்

முட்டைக்கோசில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே வளமாக உள்ளதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது, நம் எலும்புகளுக்கு வலுவை தருகிறது.

இதில் இருக்கும் சத்துக்கள் நம் தசைகளையும், நரம்புகளையும் வழுவாக்கி நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை போக்கும்.

தொற்று நோய்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கின்றது.

அதே போன்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் நீர்சத்தையும், உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்டவர்களுக்கு, முட்டைகோஸ் ஒரு சிறந்த உணவாக உள்ளது.

எனவே நீரிழிவு நோயாளிகள் முட்டைக்கோசை வாரத்தின் மூன்று முறையாவது சேர்த்து வருவது அவசியம்.

முட்டைகோஸ் ஏராளமான ஆன்டிஆக்ஸிடண்டுகள் நிறைந்துள்ளன.

ஒரு கப் நிறைய முட்டைக்கோஸ் சாப்பிட்டாலே உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவைப்படுகிற வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கிடைத்துவிடும்.

இது நம் உடல் உறுப்புகள் சீராக செயல்படுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.

அடுத்ததாக முட்டைக்கோசில் உள்ள குளுடைமின் எனப்படும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

முக்கியமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள பல நச்சுக் கழிவுகள் நமது உடல் உறுப்புகளை சேர்ந்து கொள்கின்றன.

Cabbage benefits in Tamil முட்டைகோஸ் பயன்கள்

வாரத்திற்கு ஒரு முறையாவது முட்டைகோஸ் உணவில் சேர்த்து நாம் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அறவே நீங்கும்.

அதுமட்டுமல்ல முட்டைக்கோசில் லாப்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நோய் தொற்றுகளை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இன்று இளம் வயதினருக்கு உள்ள ஒரு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம்.

இவர்கள் முட்டைக்கோசை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.

மேலும் ரத்தம் உறைந்து போவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது.

அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோசை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமாகும்.

ஏனென்றால், இதில் அல்சரரை குணப்படுத்தும் பூளுட்டோமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

அதே போன்று, கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் அமிலம் அவசியமான ஒன்றாகும்.

முட்டைகோசில் அதிக அளவில் நிறைந்துள்ளது.

கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கும், தாய்ப்பால் அதிகமாக சுரக்கவும் முட்டைக்கோசை தொடர்ந்து சேர்த்துக் கொள்வது அவசியம்.

இதில் உள்ள விட்டமின் ஏ சத்து கண் பார்வை கோளாறுகளை போக்கும்.

கண் பார்வை நரம்புகளை சீராக இயங்க செய்யும்.

மேலும் முட்டைக்கோசில் பீட்டகரோட்டின் அதிக அளவில் இருப்பதால் அது கண் புரையை தடுக்கிறது.

முட்டைகோஸ்ல் புற்றுநோயை எதிர்த்து போராடும் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

முட்டைக்கோஸ்ல் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் பி 1,வைட்டமின் பி 2,வைட்டமின் பி 3 மற்றும் விட்டமின் D ஆகியவை அதிகம் உள்ளதால், குடல் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

Cabbage benefits in Tamil முட்டைகோஸ் பயன்கள்

முட்டைகோஸ் இல் உள்ள வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் கொண்டது.

முட்டைகோஸ் இல் இருக்கக்கூடிய வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

முக்கியமாக வயதான காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனை வராம தவிர்க்க வேண்டும் என்றால், வாரம் ஒரு முறை முட்டைகோஸ் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.

உடல் சூட்டை தணிக்கும். தலைமுடி உதிர்வதை தடுக்கும். முடியின் வேர்களுக்கு பலம் கொடுக்கும்.

இது சரும வறட்சியைப் போக்கி சருமத்திற்கு பொலிவையும் தரக்கூடியது.

முட்டைகோஸ் பச்சையாக அப்படியே சாப்பிடும் பொழுது அதில் இருக்க கூடிய சத்துக்கள் அனைத்தும் நமது உடலிற்கு கிடைக்கிறது.

மிக முக்கியமாக, அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிட்டால், அதில் உள்ளஅனைத்தும் வெளியேறி விடும்.

முட்டைக்கோசை நறுக்கும் முன்பு நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு அறுக்க வேண்டும்.

ஏனென்றால் நறுக்கி விட்டு கழுவினால் அதன் சத்துகளை தண்ணீரில் இழக்க நேரிடும்.

இதை பருப்பு சேர்த்து, பொரியல், கூட்டு அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடலாம்.

இதனையும் படிக்கலாமே

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil

கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu

பலாப்பழம் சாப்பிட்டால் கிடைக்க கூடிய நன்மைகள்

English Overview:

Here we have  .Its also called a

Related Posts

2 Comments

  1. Pingback: 777slot

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning