மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil

மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil

கவலைப்படாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. மனிதர்களாய் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதாவது ஒரு கவலை இருந்து கொண்டுதான் இருக்கும்.

பொதுவாக வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கவலை, அளவுக்கு மீறிய வேலைப்பளு காரணமாக உண்டாகக்கூடிய கவலை, உடல்நலக்குறைவு காரணமாக உண்டாகக்கூடிய கவலை, சில மனிதர்களை குறித்த அதிருப்தியினால் உண்டாகக்கூடிய கவலை, எதிர்காலத்தைக் குறித்த கவலை, என ஏதாவது ஒரு கவலையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் சிலருடைய வாழ்க்கையில் மட்டும் கவலையே தொடர் வாழ்க்கையாக மாறிவிடுகிறது. இப்படி தினமும் அதிக அளவில் கவலைப்படும்போது மனம் சார்ந்த நோய்கள் மட்டுமில்லாமல் உடல் சார்ந்த நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.

stress symptoms in tamil

கவலைப்படுவதனால் உண்டாகக்கூடிய நோய்கள் என்ன?

இருதய நோய்

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடிய உறுப்பு இருதயம். தொடர்ச்சியாக அதிக அளவில் கவலைப்படும்போது உடலில் கார்டிசோல்ன்னு சொல்லக்கூடிய, stress கார்பனை உற்பத்தி செய்து சீரற்ற இதயத்துடிப்பை உண்டாக்கும்.

இதன் விளைவாக இருதயம் பலவீனம் அடைந்து அதிக இரத்த அழுத்தம் இதய வாழ்வு சுருக்கம், இதய அடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

அது மட்டும் இல்லாமல் அதிர்ச்சியான சம்பவங்களை கேள்விப்படும்போது அது மாரடைப்புக்கும் வழி வகுக்கும்,

எனவே இதய நோயாளிகள் மனக்கவலை குறித்து அதிக கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

stress in tamil

தோல் சார்ந்த பிரச்சனை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல நம்ம அதிகமாக கவலைப்படும்போது அது சருமம் சார்ந்த பிரச்சனைகளையும் எளிதில் உண்டாக்கும்.

கவலைப்படும்போது உடலில் உண்டாகக்கூடிய ஹார்மோன்கள் மாற்றம் காரணமாக, தோல்களில் ரத்த ஓட்டம் குறைந்து முகச்சுருக்கம், கண் கருவளையம் போன்ற பிரச்சனைகளை வந்து உருவாக்கும்.

அது மட்டும் இல்லாமல் சருமங்களில் எண்ணெய் சுரப்பை அதிகரித்து முகப்பருக்களையும் வந்து உண்டாக்கும்.

எனவே முகப்பருக்கள் ஏற்படுவதுக்கும் கூட மனக்கவலை காரணமாக இருக்கிறது.

mana alutham tips tamil

செரிமான கோளாறு

பொதுவாக மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்தான் செரிமானம் சார்ந்த பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், தொடர் ஏப்பம், போன்ற பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் .

தூக்கமின்மை

அதிக மனக்கவலை தூக்கமின்மை பிரச்சனைய எளிதில் உண்டாக்கும். பகலில் மனதில் ஏற்படக்கூடிய, பல விதமான சிந்தனைகள் இரவில் நினைவு அலைகளாக தூண்டப்படுகிறது.

இதன் காரணமாக பலரும் தூக்கமின்மை பிரச்சனையினால் அவதிப்பவார்கள்.

தலைவலி உண்டாக்கும்

குறிப்பாக அதிக வேலைப்பளுக் காரணமாக கவலைப்படுறவங்களுக்கு தலை வலி சார்ந்த, பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

நாளடைவில், கவலை, மூளையில் உள்ள நரம்புகளை பாதித்து அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்களையும் வந்து, உண்டாக்கும்.

அது மட்டும் இல்லாமல் அதிக கவலை தலையில் நீர் சேர்த்து ஒற்றைத் தலை வலி போன்றவை ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது மனக்கவலை.

How to Reduce Stress in Tamil

உடல் எடையை அதிகரிக்கும்

சிலர் ,சிலருக்கு தொடைப்பகுதியிலும் அடிவயிற்று பகுதியிலும் சதை அதிக அளவில் இருக்கும் இதற்கு மனக்கவலையும் கூட ஒரு முக்கியமான காரணமா வந்து சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக, மனக்கவலை ஏற்படு பவர்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகரித்து இது போன்ற குறுகிய காலத்தில் அதிக உடல் எடையினை உண்டாக்கிவிடும்.

மன நோய்

தொடர்ச்சியாக அதிக அளவில் கவலைப்படுபவர்களுக்கு உடலில் உணர்வு சார்ந்த மாற்றங்களை உண்டாக்கும்.

உதாரணமாக, சிறிய பிரச்சனைகளுக்கும் கூட அதிக பயம், பதட்டம், எரிச்சல், அதிக கோபம், எப்போதும் அதிக சோர்வு, தனிமை, தாழ்வு மனப்பான்மை என இது போன்ற உணர்வு சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

நாளடைவில் stress என்னும் அடுத்த நிலைன்னு சொல்லக்கூடிய, depression, anxiety போன்ற மன நோய்கள் உண்டாவதற்கும், ஆரம்பமாக இருக்கிறது இந்த மனக்கவலை.

ஆகவே கூடுமான வரைக்கும், கவலையை தவிர்த்து மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

மனதை, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாவும் வைத்துக் கொள்றது மூலமாக மட்டும்தான், இது போன்ற நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக்க படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning