மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் | Magnesium Rich Foods in Tamil

மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள் | Magnesium Rich Foods in Tamil

உடலின் செயல்பாட்டிற்கு மெக்னீசியம் எண்ணும் சத்து எவ்வளவு முக்கியம்? என்பதையும் மெக்னீசியம்நிறைந்த உணவுகளைப் பற்றியும் பார்க்கலாம்.

நன்மைகளை அளிக்கும் மெக்னீசியம் பல இயற்கை உணவுகளில் நிறைந்து காணப்படுகிறது.

மெக்னீசியம் நிறைந்த உணவுகள்

வாழைப்பழம், ஆப்பிள், அத்திப்பழம், வெண்டைக்காய், பசலைக் கீரை, முருங்கைக் கீரை, நிலக்கடலை, எள், பாதாம், முந்திரி, பட்டாணி, முட்டை, தானியங்கள், சிவப்பரிசி, தேங்காய்ப்பால், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் அதன் விதை.

மேற்கூறிய இந்த உணவுகளை சீராக உட்கொள்வதன் மூலம், மெக்னீசியம் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.

மெக்னீசியம் குறைவால் ஏற்படும் பிரச்சனைகள்

உடலின் ஆரோக்கியத்திற்கு அனைத்து வித சத்துக்களும் குறிப்பிட்ட அளவில் தேவைப்படுகின்றன. இவற்றில் குறைபாடு ஏற்படும் பொழுது பல வித பாதிப்புகளை உடல் வெளிப்படுத்துகிறது.

அந்த வகையில் உடலில் மெக்னீசியம் சத்து குறையும் பொழுது ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மனஅழுத்தம், சோர்வு, கோபம் போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.

மெக்னீசியம் குறைபாட்டை உடலில் குறையாமல் பார்த்து கொண்டால் மன அழுத்தத்தை குறைத்து இதய செயல் பாட்டை மேம்படுத்த முடியும்.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மெக்னீசியம் உள்ள உணவுகளை உணவில்
எடுத்துக் கொள்வது முக்கியம்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் மெக்னீசியமும் ஒன்று.

தூக்கமின்மை

மெக்னீசியம் உடலில் குறையும் பொழுது, மூளையின் செயல்திறனை பாதிக்கிறது. இதனால், நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனைய ஏற்படுத்துகிறது.

ஆகவே மெக்னீசியதினை உடலில் சீராக வைத்து கொண்டால் தூக்கமின்மை பிரச்சனை வராது.

தசை மற்றும் நரம்பு

பல உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைகிறது. மெக்னீசியம் உடலில் தசை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தினை பாதுகாப்பதில் முக்கியபங்கு வகிக்கிறது.

மெக்னீசியம் குறைபாடு ஏற்படும் பொழுது, மூட்டு வலி, தசைவலி, நரம்பு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆகையால், நரம்புகளின் வலிமைக்கு, மெக்னீசியம்மிக முக்கியம்.

இரத்த சர்க்கரை

மெக்னீசியம் உடலில் இரத்த சர்க்கரை அளவினை குறைக்க உதவுகிறது. இன்சுலின் சுரப்பு சீராக இருப்பதற்கும் தேவைப்படுகிறது.

சருமம்

சருமத்தில் கொலாஜின் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மெக்னீசியம் உதவுகிறது.

மேலும்

உடலில் மரபணு செயல்பாட்டில் மெக்னீசியம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உடல் எளிதாக உறிஞ்சிக்கொள்ளும் சத்துக்களில் மெக்னீசியமும் ஒன்று.

மெக்னீசியம் குறைபாட்டால் பாதிக்கப்படும் பொழுது, உடலால் ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க முடியாமல் போகிறது.

இதனால் குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை உருவாக்குகிறது. மெக்னீசியம் வயிற்றில் உள்ள அதிக அமிலசுரப்பை சீராக்கி சமநிலை படுத்தி சீராக்குகிறது. இதனால் வயிற்று புண்கள் வருவதை தடுக்கிறது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

4 Comments

  1. Pingback: iTunes gift card
  2. Pingback: 86kub

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning