பலா சுளை இலை அடை செய்வது எப்படி | Jackfruit Adai Recipe Tamil

பலா சுளைஇலை  அடை  செய்வது எப்படி | Jackfruit Adai Recipe Tamil

அடை என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வரக்கூடிய ஒன்று தானியங்கள், பல வகை பருப்புகள் ஆகியவற்றை சேர்ந்து செய்யக்கூடிய ஒன்றை தான்.

ஆனால் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் பலாசுளை இலை அடை என்று ஒருவகையான அடையினை செய்வார்கள்.

இந்த அடையாளது மிகவும் ருசியாக இருக்கும். ஒரு முறை இதை சாப்பிட்டால் திரும்பத் திரும்ப இதனை சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கே ஏற்படும். இந்த பலாசுளை இலை அடையினை எவ்வாறு செய்வது என்பதனைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

பலா சுளை இலை அடை செய்வது எப்படி

பலாசுளை இலை அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்

  • பலாச்சுளைகள் 12
  • வெல்லம் அரை கிலோ
  • ஒரு முழு தேங்காய்
  • பச்சரிசி ஒரு கப்
  • புழுங்கல் அரிசி ஒரு கப்
  • நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி
  • வாழை இலை தேவைக்கு ஏற்ப
  • உப்பு தேவைக்கேற்ப

பலா சுளை இலை அடை செய்வது எப்படி palasulai adai Seivathu eppadi

பலா சுளை இலை அடை செய்முறை

பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி இவை இரண்டையும் நன்றாக கழுவி இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை நன்றாக ஊற வைக்கவும்.

நன்றாக ஊறிய பின்னர் அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக மாவு போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லதினை நன்றாக நுணுக்கி. தூளாக்கி அரை டம,ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் தூளாக்கி வைத்துள்ள வெல்ல த்தினை அதில் போட்டு பாவு பதம் வரும் வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

பலாசுளையில் உள்ள கொட்டைகள் மற்றும் தேவையற்ற தோளினை நீக்கி சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.

palasulai adai Seivathu eppadi

சுத்தம் செய்யப்பட்ட இந்த பலாசுளைகளை பொடிப்பொடியாக நறுக்கி காய வைத்த வெல்ல பாகு கரைசலுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

தேங்காயை நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். துருவி வைத்த தேங்காய் துருவலை கொதிக்க வைத்த வெல்லப்பாகு மேல் தூவ வேண்டும்.

பின்னர் நன்றாக கிளறி வைத்துவிட்டு ,ஆறவிட வேண்டும். இதற்குப் பெயர் பூரணம் என்று சொல்வார்கள்.

அடையானது நமக்கு எந்த அளவில் வேண்டுமோ அதற்குத் தகுந்தார் போல் வாழை இலையினை துண்டு துண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெட்டி வைத்த வாழை இலையினை அனலில் காட்டி வாட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்து வைத்த அரிசி மாவை அடைபோன்று லேசாக இலையின் மீது தடவ வேண்டும்.

நாம் பலாச்சுளை பூரணத்தை ஆற வைத்து இருந்தோம் அல்லவா அதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரிசி மாவின் மீது வைக்க வேண்டும்.

பின்னர் இதனை மடித்து இட்லி போவினியில் வைத்து நன்றாக வேக வைக்க வேண்டும் .

ஒரு பத்து நிமிடம் வேக வைத்தாலே போதும் அவ்வளவுதான். அதற்குப் பிறகு சூடாக எடுத்து பரிமாறலாம். மிகவும் சுவையான பலாசுளை இலை அடையானது தயாராகிவிட்டது.

Jackfruit Adai Recipe Tamil

இதனையும் படிக்கலாமே

நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning