மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits

மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits

மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits மஞ்சள் நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை பிரதிபலிக்கும்.

இன்று மஞ்சளின் மகிமையைத்தான் பார்க்க இருக்கின்றோம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. மஞ்சளின் மகத்துவம் பிரமிக்க தக்கும் வகையில் அமைந்திருக்கும்.

எனவே, இந்த பன்னாட்டு நிறுவனங்களின் சதியால் இன்று நமது நாட்டில் மஞ்சளின் புழக்கம் தவிர்க்கப்பட்டு வருகிறது. இது நமக்கு மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.

இது இந்தியர்களின் சொத்து என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். மஞ்சள் பூசுவது அழகுக்காகவும் பண்பாட்டுக்காகவும் மட்டும் இல்லை.

நம் மருத்துவ கலாச்சாரமும் கூட. அந்த காலகட்டத்தில், கடவுளின் சிலைகளுக்கு மஞ்சள் காப்பு போடுவார்கள். பூஜைகளில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். மஞ்சளை அரைத்து, வாசல் கதவுகளில் பூசுவார்கள்.

அம்மை நோய்க்கு கூட மஞ்சளை கரைத்து குளிப்பாட்டுவார்கள். இதனால் நோய் பரவாமல் தடுக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும். தொற்றுநோய் கிருமிகளை நம் வீட்டிற்குள் நுழையாமலும் காக்கும்.

இன்று மஞ்சளை தவிர்ப்பதன் விளைவாகத்தான் அலர்ஜி, அரிப்பு மற்றும் தேமல், மங்கு, கரும்புள்ளி என ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர் நமது இளம் பெண்கள்.

பெண்களுக்கு மார்பு, அக்குள், இடுப்பு மற்றும் தொடை, இடுக்கு பகுதிகளில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே இதற்காக போட்டுக்கொள்ளும் ரசாயனம் கலந்த ஆங்கில வேதிப்பொருட்கள் சருமத்தை பாதிக்கின்றன. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பதன் மூலம், நோய் தொற்றை அண்டவே விடாமல் செய்யலாம்.

மஞ்சளில் இரண்டு வகைகள் உண்டு

1.சமையலுக்காக பயன்படுத்துவது 2.இரண்டு முகத்துக்கு பூசுவது

சமையலுக்காக பயன்படுத்துவது

அடுத்ததாக குறிப்பிடப்படும் சமையல் மஞ்சள். வேரோடு இருக்கும் விரலி மஞ்சள் தான் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சாம்பார், கூட்டு மற்றும் பொரியல் என சமையலில் சித்திகை மஞ்சள் தூளை சேர்த்தவுடன், சட்டென நிறத்தை கொடுக்கும்.

முகத்துக்கு பூசுவது

வேரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கஸ்தூரி மஞ்சள் வாசனையாக இருக்கும். முகம் மற்றும் உடலில் பூசி குளிக்க ஏற்றது. சருமத்தில் தேய்த்தாலும் மஞ்சள் நெறம் அதிகம் படியாது.

முகத்திற்கு பூசும் கஸ்தூரி மஞ்சள் வியர்வை சுரப்பிகளை தூண்டுகிறது. இதன் மூலமாக அழுக்கை வெளியேற்றுகிறது.

இதில் உள்ள வாசனையால் நல்ல பாக்டீரியாக்கள் பாதுகாக்கப்பட்டு, virus மற்றும் bacteria தொற்று வரவிடாமல் செய்யும். மஞ்சள் வாசனைக்கு கொசு கூட கிட்டத்தில் நெருங்காது.

புற்றுநோயினை தடுக்கும்

இந்த மஞ்சளில் அல்கானாயிடுஆக்டிவ் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை தடுக்கக்கூடிய சக்தி படைத்தது.

ஆம், மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலமாக, மலக்குடல் மற்றும் கருப்பை சம்மந்தம் ஆனா புற்றுநோய்கள் எதுவும் வரவிடாமல் தடுக்கின்றது.

காயத்திற்கு மருந்து

மஞ்சளின் மகிமையை உணர்ந்தவர்கள் அதனைத் தவிர்க்க மாட்டார்கள். மஞ்சள், வேணல் கட்டிகள், பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள் சந்தனத்தை அரைத்து பற்று போடலாம்.

பாதத்தில் ஏற்படும் வெடிப்புகளுக்கு விளக்கெண்ணையுடன் மஞ்சள் சேர்த்து பூசினால விரைவில் சரியாகும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து லேசாக சூடுபடுத்தி அடிபட்ட இடத்தில் தடவினால் வீக்கமும் வலியும் குறையும்.

சரும நிறத்தினை அதிகரிக்க

கோரைக்கிழங்கு பூலான் கிழங்கு, கத்தூரி மஞ்சள். இவற்றை அரைத்து, பச்சை பயறு மாவு கலந்து, தினமும் உடலில் பூசி குளித்து வர, சருமத்தில் நெறம் கூடும்.

கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் சம்பந்தமான நோய்கள் நீங்குகிறது. மஞ்சளை கூட அளவோடு பயன்படுத்துவது நல்லது.

வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைமஞ்சள் அரைத்து, பூசி குளிப்பதை, வழக்கமாக கொள்ள வேண்டும்.

பாக்கெட்இல் விற்கப்படும் மஞ்சள் பொடியில் நாம் சமயலிற்கு பயன்படுத்துகின்ற மஞ்சள் கலந்திருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே பசும் மஞ்சள் கிழங்கினை வாங்கி அதனை நாமே அரைத்து குளிப்பது மிகவும் நல்லது.


பெண்கள்

குழந்தையினை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு வயிற்றில் அடிக்கடி சிறிய வழிகள் ஏற்படும். அதுமட்டுமின்றி கருப்பையில் நச்சுக்கள் தேங்கி பல விதமான உடல் உபாதைகளை உண்டாக்கும்.

ஆகவே குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்கள் உணவில் மஞ்சள் தூளினை சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலியானது நீங்கும். மேலும் கருப்பையில் தேங்கி இருக்க கூடிய நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் நலத்தினை பாதுகாக்கும்.

English Blog

நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Contuct Us

இதனையும் படிக்கலாமே

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning