உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு | இன்று யாரைப் பார்த்தாலும் எனக்கு pressure இருக்கு நீரிழிவு நோய் இருக்கு. இந்த மாத்திரைகள் எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கேன். என்று புலம்பி கட்டியிருப்பீர்கள்.

அதிலும் இளையவர்களும் இந்த பட்டியலில் இருப்பதுதான் கொடுமை. ரத்த அழுத்தம் என்பது ரத்தக் குழாய்களிலும், இதயத்திலும் ரத்த ஓட்டத்தால் ஏற்படும் அளித்த குறிப்பதாகும்.

இந்த இரத்த அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து நீடித்தால் பல ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே உணவு விஷயத்தில் இவர்கள் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். முக்கியமாக உணவில் காய்கள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த உணவுகள் ரத்த அழுத்தத்தின் சோடியத்தின் விளைவை குறைக்க உதவும் என்பதால் ரத்த அழுத்தம் சீராகும்.

அந்த வகையில், ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் 10 உணவுகள் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

உயர் ரத்த அழுத்தம் குறைய 10 வீட்டு மருத்துவம்

பீட்ரூட்

இந்த பீட்ரூட்ல் பொட்டாசியம் சத்து அதிக அளவில் உள்ளது. இந்த பொட்டாசியம் சத்தானது, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

நூறு கிராம் பீட்ரூட் சாற்றில் நாற்பது மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. அதே போன்று இதில் இருக்கும் நைட்ரேட் சத்து ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைவதாக, மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.

பாதாம்

இந்த பாதாம் இரத்தக் குழாய்களை விரிவடைய செய்கிறது. இந்த பாதாம் பருப்பை தொடர்ந்து சாப்பிடு பொழுது ரத்த ஓட்டத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் வெளியாகி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

மேலும், இதிலுள்ள மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். நூறு கிராம் பாதாம் பருப்பில் இருநூத்தி அறுபது மில்லி கிராம் மக்னீசியம் உள்ளது.

அதே போன்று சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு இந்த பாதாம் தாவர புரதங்களின் சிறந்த மூலமாகும். முக்கியமாக இதில் அதிக நார்ச்சத்தும் உள்ளது.

 பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம், தமனிகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து இதய நோய்கள் வரும் அபாயத்தை குறைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக, இதில் உள்ள பொட்டாசியம் உடல்ல இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்ற உதவுகிறது.

எனவே, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு, நன்மை தரக்கூடியது இந்த பேரீச்சம் பழம்.

நூறு கிராம் பேரீச்சம் பழத்தில் 696 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

பேரீச்சம் பழத்தின் நன்மைகள் | Dates Benefits in Tamil

வாழை பழம்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவில் வாழைப்பழங்களை சேர்ப்பது அவசியம். காரணம் இதில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து சோடியத்தின் எதிர்மறை தாக்கத்தை குறைக்கிறது. முக்கியமாக ரத்த நாளங்களை விரிவடைய செய்கிறது.

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

செவ்வாழை பழத்தின் நன்மைகள் Red Banana Benefits in Tamil

ஆரஞ்சு

இந்த ஆரஞ்சில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. நூறு கிராம் ஆரஞ்சு சாற்றில் 200 மில்லிகிராம் பொட்டாசியம் சத்து உள்ளது.

பெரும்பாலான இதய பிரச்சனைகளுக்கு காரணமான ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்த ஆரஞ்சு கட்டுப்படுத்தும். அதே சமயம் இந்த ஆரஞ்சை வெள்ளை சர்க்கரை சேர்த்து ஜூஸ் செய்து சாப்பிடுவதை விட உரித்து சுளைகளாக சாப்பிடுவதே நல்லது.

ஆரஞ்சு பழத்தின் தீமைகள்

ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்சத்து அதிகம் உள்ளதால் அடிக்கடி ஆப்பிள் சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். இதனால் ரத்தக் குழாயில் அடைப்புகள் எதுவும் இல்லாமல் ரத்த ஓட்டம் சீராகும்.

இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும். நூறு கிராம் ஆப்பிலில் 2.4கிராம் நார்ச்சத்து உள்ளது.

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்

சிவப்பு முட்டைக்கோஸ்

சிவப்பு முட்டைக்கோஸ் ரத்த அழுத்தத்தை குறைக்கும் அந்தோசயனின்களின் சிறந்த ஆதாரமாகும். இந்த முட்டைகோஸை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

மேலும் இந்த முட்டைகோஸில் இதயத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான பொட்டாசியம் சத்து உள்ளது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவில் இந்த சிகப்பு முட்டைகோஸ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ப்ரோக்கோலி

இதில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பொட்டாசியம் மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள், நிறைந்துள்ளதால் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ப்ரோக்கோலியை சாப்பிட்டு வருவது மிக நல்லது.

அதாவது 100 கிராம் ப்ரோக்கோலியில், 40 மில்லி கிராம் கால்சியம், மற்றும் 293 மில்லிகிராம் பொட்டாசியம், மற்றும் 21 மில்லிகிராம் மெக்னீசியம்உள்ளது.

ப்ரோக்கோலி நன்மைகள்

கொய்யாப்பழம்

இது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. முக்கியமாக ரத்தம் கடினமாவதைத் தடுத்து ரத்தத்தின் திரவத்தன்மையை பாதுகாக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறையும்.

அதே போன்று நார்சத்து இல்லாத உணவுகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அந்த வகையில் இதில் மிகுதியான நார்ச்சத்தை இயற்கையாகவே கொண்டுள்ளதால் ரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

கொய்யா பழம் பயன்கள்

சால்மன் மீன்கள்

இது ரத்தத்தில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ரத்தத்தில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.

மேலும் செலீனியம் உள்ளடக்கிய இந்த கொழுப்பு அமிலங்கள் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

மேலு, சால்மன் மீன் சாப்பிடுவது உங்கள் இதய தசை ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எனவே, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இங்கே பார்த்த இந்த பத்து உணவுகளையும் உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் ரத்த சீராகி இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு இரத்த அழுத்த பாதிப்பின் பக்க விளைவுகள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning