வெண்டைக்காய் பயன்கள் | vendakkai benefits in tamil

வெண்டைக்காய் பயன்கள் | vendakkai benefits in tamil

வெண்டைக்காய் பயன்கள் vendakkai benefits in tamil4

வெண்டைக்காய் நமது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் வெண்டைக்காய் வலவளப்பு தன்மை கொண்ட காய்கறி என்ற காரணத்தினால் பலருக்கும் இது பிடிக்காது.

உண்மையை சொன்னால், அதன் வளவளப்பு தன்மையில்தான், அத்தனை சத்துக்களும் அடங்கி இருக்கிறது.

வெண்டைக்காயை நீரை ஊற வைக்கும் போது, அதன் தன்மையை பிரித்தெடுக்க முடியும்.

நான்கைந்து வெண்டைக்காயை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, எட்டு மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் உள்ள வளவளப்பு தன்மை முழுவதும், ஊறவைத்த நீரில் கலந்து இருக்கும்.

இதுதான் வெண்டைக்காய் குடிநீர். இந்த வெண்டைக்காய் ஊரிய நீரை குடித்துவர, பல நோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் முதல் மலட்டுத்தன்மை வரை அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக விளங்கக்கூடியது இந்த வெண்டைக்காய் குடிநீர்.

இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்து வர என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? என்பதனை பற்றி பார்ப்போம்.

வெண்டைக்காய் பயன்கள் vendakkai benefits in tamil

ரத்த சோகை

வெண்டைக்காய் ஊறிய நீரில்வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம்மற்றும் ஏராளமான விட்டமின்கள், அடங்கியிருக்கிறது.

இது ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி செய்றதுக்கு உதவி செய்கிறது. இதன் மூலமாக ரத்த அளவு அதிகரிக்கும். ரத்த சோகை குணமாகும். அனிமியா பிரச்சனைனால அவதிப்படுபவர்கள்
இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்து வர மிகவும் நல்லது.

சர்க்கரை நோய்

வெண்டைக்காயில் இயற்கையாகவே இன்சுலின் அடங்கி இருக்கிறது.
அதிலும் ஊறிய நீரை, சர்க்கரை நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

நாளடைவில், சர்க்கரை நோய் முழுமையாக குணமாகும்.

வெண்டைக்காய் பயன்கள் vendakkai benefits in tamil

கொலஸ்ட்ரால்

வெண்டைக்காயை, கரையக்கூடிய நார்ச்சத்து, அதிக அளவில் இருக்கிறது. குறைவான கலோரியைக் கொண்ட காய் என்பதினால் கொலஸ்ட்ரால் பிரச்சனை காரணமாக அவதிப்படுறவங்க, இதை தாராளமா சாப்பிட்டு வரலாம்.

அதிலும் வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்துவர, இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பின் அளவை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.

அது மட்டும் இல்லாமல், இரத்த குழாயில் படியக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.

இதன் மூலமாக இருதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.

மலச்சிக்கல்

வெண்டைக்காய் குடிநீரில் இருக்கக்கூடிய வளவளப்பு தன்மை கொண்ட பொருள், பெருங்குடலின் உட்பகுதியில் படிந்து, பெருங்குடல் சிறப்பாக செயல்பட உதவி செய்யும்.

அதோடு செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலம் எளிதில் வெளியேற்ற உதவி செய்கிறது.

எனவே அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுறவங்க, இந்த வெண்டைக்காய் உரிய நீரை குடித்துவர மிகவும் நல்லது.

மலக்குடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், மலக்குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

எலும்புகளின் வலிமை

மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் வெண்ட நீரை குடித்து வர எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.

எலும்புகள் வலிமை அடையும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

Osteoporosis போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும்.

வெண்டைக்காய் பயன்கள் vendakkai benefits in tamil

நோய் எதிர்ப்பு சக்தி

வெண்டைக்காய் ஊறிய நீரில், ஆன்டிஆக்ஸிடென்ட் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது.

இது நம் உடலில் இருக்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வழிவடையச் செய்கிறது.

இதன் மூலமாக சளி, இருமல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு ஏற்றது

வெண்டைக்காய் ஊறிய நீரில், அதிகப்படியான போலிக் ஆசிட் அடங்கி உள்ளது.

இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான சத்து.

அது மட்டும் இல்லாமல், கருவில் இருக்கக்கூடிய குழந்தைகளின் எலும்பு மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது இந்த போலிக் ஆசிட்.

எனவே கர்ப்பிணி பெண்கள் இந்த நீரை குடித்துவர, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

வெண்டைக்காய் பயன்கள் vendakkai benefits in tamil

பாலியல் பிரச்சனைகள்

வெண்டைக்காய் ஊறிய நீரை, ஆண்கள் குடித்துவர, ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அது ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பாலியல் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கக் கூடியது.

இவை மட்டுமில்லாமல் வெண்டைக்காய் உரிய நீரை குடித்துவர பல நோய்கள் குணமாகிறது.

ஆஸ்துமா, மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வை குறைபாடு, அதிக உடல் எடை, சரும பிரச்சனைகள் என பல்வேறு நோய்களும்சர்வலோக நிவாரணியாக விளங்குகிறது.இந்த வெண்டைக்காய்.

ஆகவே அனைவரும் அவசியம், அவ்வப்போது, இந்த வெண்டைக்காய் சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

வெண்டைக்காய் பயன்கள் vendakkai benefits in tamil

இதனையும் படிக்கலாமே

சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா

 

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning