பாதாமில் உள்ள சத்துக்கள்
ஆரோக்கியத்துக்கு உலர்ந்த கொட்டைகள் (DRY NUTS ) என்று நம் அனைவருக்கும் தெரிந்ததொன்று. ஆனால், உலர்ந்த கொட்டைகளிலேயே சிறந்தது என்னவென்பது பதமாகும்.
ஏனென்றால், பாதாமில் உள்ள சத்துக்கள் ஏராளமனைவை. பாதாமில் பருப்பில் உள்ள, மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
பாதாமில் உள்ள சத்துக்கள்
பாதாமில் உள்ள கால்சியம் வைட்டமின் இ , பாஸ்பரஸ் , இரும்புச் சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற சத்துக்கள் உள்ளன.
பாதம் பருப்பு மூளைக்கு நல்லது
பாதம் பருப்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பாதாமில் உள்ள சத்துக்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க செய்பவை.
வளரும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் தண்ணீரில் ஊறவைத்த நான்கு பாதாமை கொடுத்துவர, அறிவாற்றல் அதிகரிக்கும் மற்றும் அல்சிமர் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
பாதம் பருப்பு இருதயத்திற்கு நல்லது
பாதாமை தினமும் சாப்பிடுவதன் மூலம் இதய நோய் வருவதை தடுக்கலாம். ஏன் எனில் இதில் உள்ள புரதம், பொட்டாசியம், மஞ்சள் கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான சத்துக்கள் ஆகும்.
பாதாமில் உள்ள விட்டமின் இ மற்றும் மக்னீசியம் சத்துக்கள் மாரடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கின்றன.
பாதம் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்துகிறது
பாதாமில் உள்ள flavonoids மற்றும் விட்டமின் இ ஒன்று சேர்ந்து தமனிகளின் சுவரில் ஏற்படும் சேதத்தை தடுக்க சக்தி வாய்ந்த கவசத்தை உருவாக்குகின்றன.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. இதனை தினமும் பாதாமை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைச்சு நல்ல கொலஸ்ட்ரால் HDL எனப்படும் அளவை சீராக வைக்க உதவுகிறது.
பாதம் மலச்சிக்கலை போக்குகிறது
பாதாமில் உள்ள நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. சில நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை போல் பாதாமும் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் பாதாமை சாப்பிட்டுவிட்டு குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் கட்டுபடுத்தலாம்.
நான்கு அல்லது ஐந்து பாதாம்களில் உள்ள நார்ச்சத்தின் அளவு, உங்கள் செரிமானம் மற்றும் உடல் இயக்கத்தை வழக்கமான முறையில் வைத்திருக்கிற போதுமானது.
பாதம் புற்றுநோயினை தடுக்கிறது
பாதாமில் உள்ள நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நாம் பாதாம் சாப்பிடும்போது நம் பெருகுடலில் உணவு செல்வதை சீராக்கி தேவையற்ற கழிவுகள் சேர்வதை தடுக்கிறது.
இதன் மூலம் பெருங்குடலில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கலாம் பாதாம் சாப்பிடுவது உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் சத்துக்களை வழங்கி தேவையற்ற கலோரிகள் கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.
பாதம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
பாதாமில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பாதாமில் உள்ள சோடியம் குறைந்த அளவில் இருப்பதால், ரத்த அழுத்ததில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை, சரி செய்ய உதவுகிறது. உதவுகிறது.
பாதாம் தோல் பராமரிப்பிற்கு உதவுகிறது. பாதாம் தோளில் உள்ள வறட்சி, முகப்பரு கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்து இளமையான தோற்றத்தை கொடுக்கிறது.
பாதம் உடல் எடையை குறைக்க உதவுகிறது
பாதாமில் நார்சத்து அதிகம் இருப்பதால் அது உடலின் கலோரிகளின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும், பாதம் சாப்பிடுவதால், அதில் உள்ள புரோட்டின் சத்துக்கள், வயிற்றை நிறைத்து, பசி ஏற்படுவதை தடுக்கிறது.
நீரிழிவு நோயை தடுக்கிறது. மருத்துவ ஆய்வின் பாடி பாதம் சாப்பிட்டால் உணவிற்கு பின்னர் இரத்தத்தில் அதிகரிக்கின்ற சர்க்கரையின் அளவை குறைத்து சீராக வைக்க உதவுகிறது.
நாம் உண்ணும் உணவில் இருந்து குலுக்கோசை உறிஞ்சுதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை கட்டுப்படுத்த பாதம் உதவுகிறது..
எனவே நம் அன்றாட வாழ்வில் , பாதம் சாப்பிட்டுவந்தால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
பாதாம் பற்றிய காணொளியினை காண கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
பாதாம் பறஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம்
சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள்
இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
12 Comments
Comments are closed.