பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

பொதுவாக பயன்படுத்தும் காய்கறிகளில், மிகவும் விலை மலிவானதும் அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தரவல்ல ஒரு காய் வகையாக பீன்ஸ் இருக்கின்றது. இந்த பீன்ஸ் அடிக்கடி சாப்பிடுவதால், நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

நமக்கு வயது கூடிக்கொண்டு செல்லும் பொழுது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே வரும். பீன்ஸ் காய்கள் சாப்பிடுவதால் அதில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து அதில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகின்றது.

வெளியே இருந்து உடலுக்குள் வரும் நோய்களை உண்டாக்கும், ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாதவாறு காக்கின்றது.

நார்சத்து

உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு, நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால் அதை உண்ணும்போது செரிமான உறுப்புகள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகின்றது.

நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும்.

ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சமநிலை சீர்கெடுவதால் சாப்பிடு உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகின்றது.

இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

உடல் பருமன்

இன்று பலருக்கும் உள்ள பிரச்சனை உடல் பருமன். உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனையாகும்.

உணவுக் கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கொண்ட கொழுப்பைக் கரைக்கக் கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையைக் குறைக்கும்.

உடல் எடையை குறைக்கும் முயற்சியில், நல்ல பலனைக் கொடுக்கும்.

இதயம்

இதய நோய்கள் மற்றும் இதய பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றது.

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

ஊட்டச்சத்து

நாம் அனைவருக்கும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து வேண்டும். பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.

இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகின்றது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையையும் கொடுக்கின்றது.

எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பீன்ஸ் காய்களை அதிகம் சாப்பிட வேண்டும் அப்பொழுது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நமது உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

இரத்தசோகை

ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால், ரத்த சோகை ஏற்படுகின்றது.

ரத்த சோகை இருப்பவர்கள், பீன்ஸ் காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடல் மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புகின்றது.

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

இரத்த சுத்தி

ரத்தம் சுத்தமாக இருப்பது மிக அவசியம். தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது, அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசுகள் நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுக்கள் அனைத்தும் நமது ரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பீன்ஸ் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.

கருவுற்ற பெண்கள்

கருவுற்றிருக்கும் பெண்கள், குழந்தை பிறக்கின்ற காலம் வரை சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள், அதிகம் உணவில் பீன்ஸ் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகின்றது.

கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பில் ஏற்படும் எத்தகைய உடல்நலக் குறைபாடுகளையும் போக்கும் திறன் கொண்டுள்ள காயாக பீன்ஸ் இருக்கின்றது.

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

எலும்பு உறுதி

எலும்பு உறுதிக்கு பீன்ஸ் உதவுகின்றது. நமது உடலில் எலும்புகள் பலமாக இருக்க வேண்டியது அவசியம்.

அனைவருக்கும் வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதித்தன்மை குறைந்து கொண்டே வரும்.

பீன்ஸ் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்கிறது.மேலும் கால்சியம் சத்து சிறிதளவு கொண்டுள்ளது.

நீரிழிவு நோய்

பீன்சில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள இன்சுலின் அளவே சீராக பராமரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க நினைத்தால் பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் நல்லது.

பீன்ஸ் பயன்கள் | Beans Benefits Tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning