ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் | Healthy Snacks in Tamil

ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் | Healthy Snacks in Tamil

நொறுக்கு தீனி என்பது நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய நொறுக்குத் தீனிகளோ நோய்களை தரக்கூடியதாக உள்ளது. Noodles, chips, கண்ணை கவரும் கலர் கலர் ஆன பாக்கெட் உணவுகள் மற்றும் pizza, burger இவைகள் தான் இன்றைய நொறுக்கித் தீனிகள்.

இவைகள் ஒரு போதும் நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்காது. சொல்லப்போனால் இவைகளை என்றோ ஒரு நாள் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிடும்பொழுது முதலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கி நாளடைவில், ஆரோக்கியத்தையே உருக்குலைத்து விடும்.

உண்மையில் நொறுக்குத்தீனி என்பது அனைத்து சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில், உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஏழு snacks பற்றி பார்ப்போம்.

snacks items in tamil

நட்ஸ் (nuts) வகைகள்

அனைத்து வகையான நட்ஸ்களிலும் மீன்களில் உள்ளது போன்றே இதயத்தை பாதுகாக்கும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.

இவை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைப்பதால் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

மேலும் நல்ல கொழுப்பையும் அதிகரிக்கும். அதே போன்று இதில் உள்ள வைட்டமின் இ சருமத்தை பொலிவாக வைக்கக்கூடியது.

முக்கியமாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் தினமும் நட்ஸ் (nuts) சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் பி காம்ப்லெஸ் சத்துக்கள் மூளையில் ரத்தத்தை சீராக வைப்பதுடன், நரம்பு மண்டலத்தை பாதுகாத்து, ஞாபக மறதி வராமல் தடுக்கும்.

அதே போன்று இதனை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது உடலின் ஆற்றலானது அதிகரிக்கும். மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாக்கும். நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

உலர் திராட்சை

விலை மலிவாக எளிதில் கிடைக்க கூடிய இந்த உலர் திராட்சையை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை என்ற பிரச்சனைக்கு வழி இருக்காது.

முக்கியமாக ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது. அதே போன்று சிறுநீரக பாதையில் தொற்று ஏற்படாது.

உடல் வெப்பத்தை தணிக்கக்கூடியது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மாதவிடாய் பிரச்சனைகளை போக்கக்கூடியது.

அதே போன்று எலும்புகளின் வலிமை மற்றும் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் இதில் வளமாக இருப்பதால் இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு பலகீனம் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

மேலும், ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கக்கூடியது.

நொறுக்கு தீனி வகைகள்

பேரீச்சை

இதிலுள்ள செலினியம், தாமிரம் போன்ற சத்துக்கள் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது. எனவே, எலும்பு தேய்மானம், எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வரலாம்.

அதே போன்று இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான பிரச்சனைகளை தவிர்க்க முடியும். முக்கியமாக இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதோடு குடல் இரக்கத்தையும் சீர் செய்கிறது.

இதில் உள்ள அதிக அளவு இரும்பு சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றக்கூடியது. இதயத்துடிப்பை சீராக்கக்கூடியது.

முக்கியமாக இதனை தினமும் மூன்று சாப்பிட்டு வரும்பொழுது உடல் வலிமையும், சக்தியும் அதிகரிக்கும். சருமத்தையும் பொலிவாக வைத்துக் கொள்ளும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, கொய்யா, நெல்லிக்காய் போன்ற, சிட்ரஸ் (citrus) பழங்களில், வைட்டமின் சி அதிகம் உள்ளது.

இந்த வைட்டமின் சி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதனால் நம்மைத் தாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது.

இந்த பழங்கள் அனைத்தும் உண்மையில் எளிதில் கிடைக்கக்கூடிய அருமையான பொக்கிஷங்கள்.

எனவே ஸ்னாக்ஸ்(snacks) என்று சொல்லிக் கொண்டு கண்ணில் கண்டதையெல்லாம் சாப்பிடாமல் இது போன்ற ஆரோக்கிய நொறுக்கு தீனிகள் கவனம் செலுத்துங்கள்.

சிவப்பு அவல்

சிவப்பு அவலானது சிவப்பு அரிசியிலிருந்து பெறப்படுகிறது. இதில் உள்ள அந்தோசயனின் என்ன நிரம்பிதான் இந்த அரிசிக்கு இந்த நிறத்தை அளிக்கிறது.

நமது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட ஆக்சிஜன் எச்சிகளை செவப்பு அவள் கொண்டுள்ளது.

இந்த செவப்பு அவளில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். எனவே, அவளை சாலட் போன்று செய்து சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் சீ யானது, அவலில் இருக்கும் இரும்பு சத்தை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

snacks recipe for kid in tamil

காய்கறி சாலட்(Salad)

காய்கறி சால என்பது வேக வைக்காமல் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள் சிறிய துண்டுகளாக கட் செய்து, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு உப்பு கலந்து சாப்பிடலாம்.

இப்படி காய்கறி சால ட் செய்து சாப்பிடுவதன் மூலம் இதன் சத்துக்கள் அழியாமல் முழுமையாக கிடைப்பதோடு அவற்றில் உள்ள பெட்ரோ கெமிக்கல் புற்றுநோய் செல்கள் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

எள்ளு மிட்டாய்

பால் சாப்பிட பிடிக்காதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்துவிடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. காரணம் இதில் உள்ள தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.

முக்கியமாக எள்ளில் இரும்பு சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளதால் எள்ளுருண்டையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இளநரையை தடுக்க முடியும்.

தலைமுடி உதிர்வதும் குறையும். அதே போன்று ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு எள்ளுருண்டை சாப்பிட்டு வந்தால் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் குறையும். உடல் சக்தியும் அதிகரிக்கும்.

முக்கியமாக மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து உடல், மனம் அமைதி அடையும். படபடப்பு தன்மை மறையும்.

பெண்கள் தினமும் எள் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.

மேலும்

உண்மையில் இது போன்ற ஆரோக்கிய நொறுக்கு தீனிகள் சாப்பிட்டு வந்தால் நமது உடல் என்றுமே ஆரோக்கியமாக இருக்கும்.

அடிக்கடி மருத்துவரிடம் செல்ல அவசியமே இருக்காது. முக்கியமாக, கண்ணைக் கவரும் கடைகளில் விற்கும் தீனிகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள அதிக கொழுப்பால் கொலஸ்ட்ராலும், ட்ரைகிளிசரைடும் அதிகரித்து பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் உடல் பருமன் ஏற்படலாம்.

இதனால் வருங்காலத்தில் பல நோய்களுக்கு அடிப்படையாக அமைந்துவிடும். எனவே, முடிந்தவரை இங்கே பார்த்த எளிதான எந்த தீங்கும் தராத ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். நோய் பற்றிய எந்தவித பயமும் தேவையே இருக்காது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

6 Comments

  1. Pingback: situs togel online
  2. Pingback: advertising scam
  3. Pingback: Geissele Products

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning