ரோஜா பூ பயன்கள் | Rose Flower Information in Tamil

ரோஜா பூ பயன்கள் | Rose Flower Information in Tamil

ரோஜா பூக்களானது எங்கும் எளிதில் கிடைக்கும் ஒரு மலராகும். இது சிறியதாக இருந்தாலும் இதன் மருத்துவ பலன்கள் மிக அதிகமானது.

பயன்படுத்தும் மூன்று முறைகள்

ஒன்று

நாட்டு ரோஜா பூக்களின் இதழ்களை தனியாக எடுத்து, அதனை நீரில் கழுவி விட்டு காலை வெறும் வயிற்றில், அப்படியே மெதுவாக உமிழ்நீருடன் நன்கு மென்று சாப்பிட்டு வரலாம்.

ரோஜா பூ

இரண்டு

நாட்டு ரோஜா பூக்களின் இதழ்களை தனியாக எடுத்து சுத்தம் செய்து நிழலிலேயே காயும் வரை நன்கு உலர்த்தி, பிறகு வெயிலில் காய வைத்து பொடியாக அரைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, அதை ஒரு tடம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்.

மூன்று

ரோஜா குல்கந்து என்ற முறையில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதில் ரோஜாப்பூ இதழ்கள், கற்கண்டு, தேன், உலர் திராட்சை, கசகசா ஆகிய கூட்டுப் பொருட்களுடன் சேர்ந்து கலந்திருக்கும். இதனை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரலாம். குழந்தைகளாக இருந்தால், அரை தேக்கரண்டி அளவு கொடுத்து வரலாம்.

இந்த மூன்று முறைகளில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்.

ரோஜா குல்கந்து பயன்கள்

ரோஜா பூ மருத்துவகுணம்

இரத்த சுத்தி

இந்த ரோஜாப்பூ இதழ்களை, நாம் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும்பொழுது ரத்தமானது சுத்திகரிக்கப்படும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறத் தொடங்கும்.

உடற்சூடு

உடற்சூடு குறைந்து வரும். உடல் சூட்டினால் உருவாகும் நோய்களும் குணமடையும்.

புண்கள்

வாய்ப்புண், வயிற்றுப்புண், இரைப்பை புண்கள், குடற் புண்கள் ஆறி வரும். முக்கியமாக இதய நாளங்களில் உள்ள குற்றங்களைப் போக்கி, இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். இதய நோய்கள் வரும் அபாயத்தை தடுக்கும்.கல்லீரல், மண்ணீரல், வீக்கம் வலுவடையச் செய்யும்.

சிறுநீரக பிரட்சனை

சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீரகத் தொற்று போன்ற தொந்தரவுகளை குணமாக்கும்.

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரைச் சத்து உள்ளவர்கள், நாட்டு ரோஜாப் பூக்களின் பொடியை சிறுகுறிஞ்சான் சூரணம், நாவற்கொட்டை சூரணம் ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது, சர்க்கரை நோய் குணமடையும்.

rose flower in tamil

இளமை தோற்றம்

ரோஜா மலரை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது சரும செல்களை சீர் செய்து தோல் அரிப்பு, வறண்ட சருமம், முகப்பரு போன்ற பிரச்சனை குணமாக்கி வயசு முதிர்வுத் தோற்றத்தைத் தடுத்து, இளமைத் தோற்றத்தை அளிக்கிறது.

பெண்கள் ஆரோக்கியம்

ரோஜாப்பூ மலரைக் கொண்டு, தயாரிக்கப்படும் பன்னீர் என்று அழைக்கப்படும் rose water ஆனது, பல அழகு சாதனப் பொருட்களிலும் வாசனை திரவியங்களிலும் முக அழகிற்கும், தோல் பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தப் படுகிறது.

பெண்களின் மாதவிடாய் காலத்தில் வரும், கடுமையான வலி, அதிக உதிரப்போக்கு போன்றவற்றை குணப்படுத்தும்.

பெண்களின் கருப்பையை வலுவாக்கும் தன்மை கொண்டது.

பசியின்மை, செரிமான பிரச்சனைகளை நீக்கி, மலச்சிக்கலை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

paneer rose benefits in tamil

இரத்தசோகை

அதிக அளவில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகி ரத்தசோகை நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது.

மேலும்

அடிக்கடி பசி ஏற்படுதல், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், தீராத தாகம் வயிற்றில் அதிக அளவு அமிலம் உற்பத்தியாதல் போன்றவற்றை சீராக்கும் தன்மை கொண்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவருக்கும் ஏற்ற ஒரு அற்புதமான இயற்கை மருந்து, இந்த ரோஜாப்பூ மலராகும். எளிதில் கிடைக்கும் இந்த ரோஜா மலரை, அனைவரும் பயன்படுத்தும் பொழுது, பல நோய்களுக்கு தீர்வாக அமையும்.

gulkand benefits in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வளைத்ததின்  Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning