முளைக்கீரை பயன்கள் | Mulai Keerai Benefits in Tamil

முளைக்கீரை பயன்கள் | Mulai Keerai Benefits in Tamil

தாவரத்தின் நிறமானது பச்சை நிறம். இந்த நிறம் தான் தாவரத்தினை உணவாக கொண்டுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை தருகிறன்றது என்பது அறிவியலாளர்களின் கருத்து.

நாம் சாப்பிட கூடிய பல்வேறு வகையான கீரைகளில் இந்த பச்சை நிறத்தினால் கிடைக்க கூடிய சத்துக்கள் ஏராளம். அந்தவகையில் இங்கு முளைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்ன என்பதனை பற்றி தெரிந்து கொள்வோம்.

முளைக்கீரையில் கால்சியம், காரச்சத்து, சுண்ணாம்புச்சத்து, vitamin A, vitamin B, vitamin C, புரதம், நார்ச்சத்து அடங்கியுள்ளது.

மேலும் எண்பது சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. கீரையை தண்டுடன் சமைத்து சாப்பிடு பொழுது முழு பலன்களையும் பெற முடியும்.

விதைத்த பதினைந்து நாள் முதல் இருபதாவது நாட்களில் பயன்படுத்தலாம். வேரிலும் சத்துக்கள் அடங்கியுள்ளது.
முற்றிய கீரையாக இருந்தால் வேரை மட்டும் எடுத்துவிட்டு தண்டுடன் சமைக்கலாம்.

வயிற்று, கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடியது. அல்சர் வராமல் தடுக்கிறது. உடலை வலிமையாக்குகிறது.

mulai keerai in tamil

மூளை வளர்ச்சி

இந்த முளைக்கீரையில் இரும்புச் சத்தானது, அதிகம் அடங்கியுள்ளது. ஆக, அது மட்டும் இல்லாமல், தாமிர சத்துக்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதுவே, நமது உடலில் ஓடக்கூடிய, ரத்தத்தின் சுத்தம் செய்வது மட்டுமில்லாமல்,மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே வளரும் பருவத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு, கொடுத்து வருவது, மிகவும் நல்லது.

காய்ச்சல் & ஜுரம்

பருவநிலை மாற்றம் மற்றும் வைரஸ் கிருமி, தொற்றின் காரணமாக, ஜுரம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்ற இந்த பிரச்சனைகளை சரி செய்ய, இந்த முளைக்கீரையுடன் சீரகத்தினை சேர்த்து, நெய்யில் நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன், வரமிளகாய் சேர்த்து, நன்றாக வேக வைக்கவும்.

வேக வைக்கப்பட்ட தண்ணீரினை வடிகட்டி அந்த சாற்றினை, சாதத்தில் கலந்து, சாப்பிட்டு வருவதன் மூலம் அனைத்து வகையான பிரட்சனைகளும் குனமாகும்.

mulai keerai health benefits

பசியின்மை

மூன்று வேளையும், உணவினை, சரியாக சாப்பிட்டால்தான், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு சிலருக்கு, பசியின்மை பிரச்சனை இருக்கும்.

இந்த பிரச்சனை உடையவர்கள், இந்த முளைக்கீரை உடன் சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மற்றும், மஞ்சள் ஆகியவற்றினை, தண்ணீருடன் சேர்த்து, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.கொதிக்க வைக்க பட்ட நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமாக பசியின்மை பிரட்சனை தீரும்.

ருசியின்மை

காய்ச்சல் மற்றும் சளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சாப்பிடக் கூடிய உணவுகளில் உள்ள ருசியானது, சுத்தமாக தெரியாது.

இந்த பிரச்சனை உடையவர்கள் இந்த முளைக்கீரை உடன், சீரகம், மிளகு, மஞ்சள், புளிச்ச கீரை ஆகியவற்றினை நன்றாக சேர்த்து வேகவைத்து, அந்த தண்ணீரினை குடித்து வருவதன் மூலமாக, ருசியின்மை பிரச்சனை குணமாகும்.

ஊட்டச்சத்து

நமது உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைத்தாலே போதும் நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த முளைக்கீரையில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளது.

எனவே முளைக்கீரை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூமாக உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைத்து எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம்.

குழந்தைகள் உயரமாக வளருவதற்கும் அடிக்கடி சமைத்து கொடுக்கலாம்.

mulai keerai benefits in tamil

முகப்பொலிவு

அனைவரும் தங்களது முகம் அழகாக இருப்பதையே விரும்புவாராகள். அதிலும் பெண்கள் அதிக அளவில் தங்களது முகத்தினை அழகாக வைத்து கொள்ள விருப்புவார்கள்.

முளைக் கீரை சாற்றுடன் முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியற்றை சேர்த்து நன்றாக அரைத்து அடிக்கடி முகத்தில் தேய்த்து வருவதன் மூலமாக முகப்பரு, தேமல் இது போன்ற பிரச்சனைகள் குணமாகி முகம் பொலிவுடன் தோற்றமளிக்கும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வளைத்ததின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning