கை கால் மூட்டு வலி நீங்க | Mootu Vali Maruthuvam in Tamil

கை கால் மூட்டு வலி நீங்க | Mootu Vali Maruthuvam in Tamil

இன்றைய அவசர உலகில் நோய்களுக்கு பஞ்சமில்லை. அதே சமயத்தில் முன்பு வயதான காலத்தில் வந்த நோயெல்லாம் இப்பொழுது இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. அதில் ஒன்றுதான் மூட்டுவலி.

அதிலு, குளிர்காலத்தில் மூட்டு வலியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகை மூட்டு வலி ஏற்பட காரணம் என்ன? குளிர்காலத்தில் இது ஏன் அதிகமாக உள்ளது? மூட்டு வலியை உடனே போக்கும் எளிதான வீட்டு வைத்தியங்கள், இளம் வயதில் மூட்டு வலி வர காரணம் என்ன? முக்கியமாக மூட்டுவலியை போக்கும் உணவுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

mootu vali treatment in tamil

மூட்டு வலி ஏற்பட காரணம்

பெரியவர்களுக்கு ஏற்பட காரணம்

மூட்டு வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு. பொதுவாக முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு, வழுவழுப்பாக இருக்கும். கொலாஜன் எண்ணும் பொருள் இந்த வழுவழுப்பு தன்மை பாதுகாத்து குருத்தெலும்பை உறுதியாக வைத்துக் கொள்ளும்

ஆனால், வயதாகும் பொழுது உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைவதால் இந்த கொலாஜன உற்பத்தியும் குறைகிறது. அப்பொழுது மூட்டில் உள்ள குருத்தெலும்பு தசைகள் தேய்ந்து நடக்கும் பொழுது மூட்டுகள் வழுவழுப்பின்மையால் உரசும் பொழுது வலியை உண்டாக்கும்.
இது பெரியவர்களுக்கு வரும் மூட்டு வலிக்கான காரணமாகும்.

இளம் வயதினருக்கு ஏற்பட காரணம்

இளையவர்களை பொறுத்தவரையில், உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பது, போதிய பயிற்சி இல்லாமை, ஹார்மோன் கோளாறுகள் அதிகப்படியான உடல் பருமன், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, பலவீனமான எலும்புகள், கால்சியம் குறைபாடு, சத்தான உணவின்மை. இவையே முக்கிய காரணமாக அமைகிறது.

அதுமட்டுமல்ல நாம் உண்ணும் அதிக மசாலா உணவுகள், துரித உணவுகள், தசைகளின் வறட்சியை அதிகப்படுத்துகிறது. இதனால், மூட்டுகளை பாதுகாக்கும் தசைநார்கள் வலுவிழந்து இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து வீக்கம் அடைந்து, வலியை ஏற்படுத்துகிறது.

பெண்களுக்கு அதிகம் ஏற்பட காரணம்

அதே போன்று, இந்த மூட்டு வலி, ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

மூட்டுகளின், கிழ்வு தன்மைக்கு உதவும்,குருத்தெலும்பு உருவாக்கத்திற்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உதவும். இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்தால் மூட்டு பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு.

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக இதன் சிறப்பு ஒவ்வொரு மாதமும் குறையும். மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மிகக் குறைவாகவே சுரக்கும்.

எனவே மூட்டு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வானிலை மாற்றத்தால் மூட்டு வலி

வானிலை மாற்றங்களால் கூட சிலருக்கு மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. அதிலும் குளிர்காலத்தில் வெப்பநிலை குறையும் பொழுது நிறைய பேர் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்.

காரணம் குளிர்காலத்தில் காற்றில் உள்ள அழுத்தம் குறைய ஆரம்பித்துவிடுகிறது. இதனால் மூட்டுகளில் அமைந்துள்ள வாயு மற்றும் திரவ மூலக்கூறுகளை விரிவடைய செய்கிறது.

இந்த மூலக்கூறுகள் விரிவடையும் பொழுது நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இதனால் தீராத மூட்டு வலி உண்டாகிறது.

காயமடைந்த பகுதிகளில் உள்ள கிழிந்த திசுக்களும் விரிவடைந்து அதிகப்படுத்துகிறது. அதே போன்று குளிர்காலத்தில் நாள் முழுவதும் சோம்பேறித்தனம் பட்டு எந்த ஒரு வேலையையும் செய்யாமல் சிலர் முடங்கியே இருப்பார்கள்.

இது நல்லதல்ல இப்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அசையாமல் இருப்பது, உடலிற்கு விரைப்பை ஏற்படுத்துகிறது. இதனால், மூட்டுகள் கடினமாகிறது.

குளிர்காலத்தில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றம் மூட்டுகளை சுற்றியுள்ள நரம்புப் பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த வீக்கங்கள் அப்படியே மூட்டு வலியை உண்டாக்கி விடுகிறது.

muttu vali marunthu in tamil

வைட்டமின் டி குறைபாட்டால் மூட்டு வலி

வைட்டமின் டி அளவு குறைவதாலும் மூட்டு வலி ஏற்படுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் மேலும் சூரியனிடம் இருந்து நமக்கு போதுமான வைட்டமின் டி கிடைக்காது.

வைட்டமின் டிதான் எலும்பு மற்றும் மூட்டுகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. மேலும் வைட்டமின் டி தான் உணவில் உள்ள கால்சியம் சத்தை உறிஞ்சி ஆரோக்கியமான எலும்பின் வளர்ச்சிக்கும் உதவி செய்கிறது.

எனவே மூட்டுகளுக்கு கொஞ்சமாவது சூரிய ஒளி கிடைக்க வேண்டும். ஆனால் குளிர் காலத்தில் அவ்வாறு கிடைக்காமல் போவதால் மூட்டுகள் பலவீனம் அடைந்து வழி உண்டாகிறது.

மேலும் குளிர்காலத்தில் நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் மூட்டு பகுதிகளில் ரத்த ஓட்டம் குறைந்து விரைப்பை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும்.

கை கால் மூட்டு வலி  குணமாக

தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று பார்த்தால் கிழங்கு வகைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதே போன்று மூட்டு வலியைப் போக்கும் முக்கியமான தீர்வும் யோகாசனம் தான். ஆசனங்கள் மூட்டு இணைப்புகளை உறுதிப்படுத்துகிறது.

உடற்பயிற்சி

பொதுவாக, யோகாசனங்கள் செய்பவரின் மூட்டு இணைப்புகள் அசாதாரணமான சூழ்நிலையிலும்இயல்பாக செயல்படுவதால் மூட்டு தசைகள் விறைப்படைவது குறைகிறது.

மேலும் மூட்டு இணைப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் தேவையற்ற நச்சுப் பொருட்கள் நீங்கி வலி மற்றும் விறைப்புத்தன்மை குறைய உதவுகிறது. சொல்லப்போனால் எந்த காரணத்தினாலும் ஏற்பட்ட மூட்டு நோயாக இருந்தாலும் யோகப் பயிற்சிகள் மூலம் முழுமையான தீர்வைப் பெற முடியும்.

மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால், மூட்டு தசைகள் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையையும் சீராக பராமரிக்கலாம்.

கீரைகள்

முக்கியமாக ஆரோக்கியமான உணவுகள். பழங்கள் உலர் பழங்கள் இயற்கை உணவுகள்இந்த நோய்க்கு அருமருந்தாக திகழ்கிறது. அந்த வகையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்று பார்த்தால் தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது, நல்ல பலனைக் கொடுக்கும்.

கீரைகளில் எலும்பை பலப்படுத்தும் கால்சியம், தாதுக்கள்,வைட்டமின் கே, ஃபோலிக், வைட்டமின் சி நிறைந்துள்ளன. அதிலும், முருங்க கீரையையும், முடக்கத்தான் கீரையையும், வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள்ல இருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

mootu vali maruthuvam in tamil

பீன்ஸ்

பீன்சில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது எலும்புகளை உறுதியாக்கும்.

மத்தி மீன்

மத்தி மீன்கள் விட்டமின் டி நிறைந்தது. இது எலும்புகளுக்கு தேவையான மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சப்படும் அளவை அதிகப்படுத்துகிறது.

நட்ஸ்

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகைகளில், கால்சியம்,பொட்டாசியம் மற்றும் புரதம் நிறைந்துள்ளன. எனவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஏதாவது ஒரு நட்ஸ் சாப்பிடுவது நல்லது.

சிட்ரஸ் பழம்

ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை வைட்டமின் சி நிறைந்த பொதுவாக கால்சியம் நிறைந்த உணவை சாப்பிட்ட பின்னர் இந்த பழங்களை சாப்பிட்டால் கால்சியம் உறிஞ்சப்படுவது அதிகரிக்கும்.

மேலும் தினமும் காலையில் மோர் குடிப்பதால், கபம் மற்றும் வாதத்தை குறைக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோ, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தையும் குறைக்கிறது.

கருப்பு எள்

ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்க வேண்டும்.இதனால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்து மூட்டு வலியும் குறையும்.

பனிக்கட்டி ஒத்தனம்

வலி ஏற்படும் இடத்தில் ஒரு பத்து நிமிடங்கள் பனிக்கட்டி ஒத்தனம் கொடுக்கலாம். முதலில் ஆரம்பிக்கும் பொழுது ஒரு நாளைக்கு ஒரு முறை என படிப்படியாக ஒரு நாளைக்கு நான்கு முறையாவது பனிக்கட்டி ஒத்தனம் வைக்கும் பொழுது மூட்டு வலி சில நாட்களிலேயே குறைந்துவிடும்.

சுக்கு

கொதிக்கும் தண்ணீரில் சிறிது சுக்கை தட்டி போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது சுடு தண்ணீரில் இஞ்சியை தட்டி போட்டு ஆறிய பின்,குடிக்கலாம்.

இப்படி செய்தாலே மூட்டு வலியில் இருந்து, முழுமையாக விடுபடலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning