இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் | Iron Rich Foods in Tamil

இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகள் | Iron Rich Foods in Tamil

நம் ஒவ்வொருவருக்கும் இரும்புச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும். உடலில் சோர்வு அதிகம் இருந்தால், அதற்கு முதன்மையான காரணம் இரும்புச்சத்து குறைபாடு ஆகும்.

இதன் குறைபாட்டினால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பல விதமான நோய்கள் வரக்கூடும். இரும்புச் சத்து குறைபாட்டால் இதயத்திற்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காததால் வேகமாக துடித்து, அதனால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு பதற்றம் ஏற்படுகிறது. எனவே, இரும்புச்சத்து மிகுந்து காணப்படும், மலிவான விலையில் கிடைக்கும் உணவுகளை பற்றி பாப்போம்.

கீரைகள்

பொதுவாகவே கீரைகளில் இரும்புச் சத்தானது அதிகம் இருக்கும். அதிலும் பசலைக் கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடென்கள் அதிகமாக நிறைந்துள்ளன.

கிட்டத்தட்ட இதே அளவுக்கு முருங்கைக் கீரையிலும் இரும்புச் சத்து இருக்கின்றது. முருங்கைக் கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட நாள் வாழலாம்.

தினம் சாப்பிடாவிட்டாலும் வாரம் ஒருமுறை முருங்கைக்கீரை சாப்பிடுவது, இரும்பு சத்து குறைபாட்டை நீக்கும். அடுத்ததாக முளைக்கீரையில், இரும்புச் சத்து இருபத்தி இரண்டு புள்ளி ஒன்பது மில்லி கிராம், கால்சியம் முந்நூற்று தொண்ணூற்று ஏழு மில்லி கிராம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் A, B, C ஆகியவை இருக்கின்றன. ரத்த சோகையைப் போக்கும் திறன் உள்ளது.

எனவே, தினம் ஒரு கீரை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் மருத்துவமனை பக்கமே போகும் வேலை இருக்காது.

iron content food in tamil

பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. நூறு கிராம் பேரீச்சம் பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்பு சத்தில் ஐம்பது சதவிகிதம் நிறைந்துள்ளது.

அதாவது, நூறு கிராம் பேரீச்சம் பழத்தில் இரண்டு கிராம் அளவுக்கு இரும்புச்சத்து இருக்கின்றது. மேலும், இதில் கால்சியம், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.

உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் ஆரோக்கியத்தை தருகின்றது. ரத்த உற்பத்திக்கு வழிவகுக்கின்றது. ரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகின்றது.

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் மூன்று பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

இதிலுள்ள மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் எலும்பை வலுவாக்கும். பேரீச்சையை உணவுடனும் சேர்த்துக் கொள்ளலாம்.

எலும்பின் வளர்ச்சிக்கு உதவும். மேலும், எலும்புப்புரை போன்ற எலும்பு நோயிலிருந்து நம்மை காக்கின்றது.

குறிப்பாக பெண்கள் பேரீச்சையை உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் எலும்புருக்கி நோயை குணப்படுத்தும்.

வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் வலியை குறைக்க உதவுகின்றது. கண் பார்வை குறைபாடுகளையும் நீக்குகின்றது.

உலர் திராட்சை

உலர் திராட்சையை சாப்பிடுபவர்கள் அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவதே சிறந்தது. இது பலருக்கும் தெரியாது. ஐந்து, ஆறு உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன்பு நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நீருடன், உலர் திராட்சையை சாப்பிட்டால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மேலும் நீரில் ஊற வைத்து உலர் திராட்சையை சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி குறையும். சருமம் ஆரோக்கியம் பெறும்.

ரத்த சோகை மற்றும் சிறுநீரகக் கல் பிரச்சனை இருப்பவர்கள்,உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிடுவது, மிகவும் நல்லது.

மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆண்மை குறைபாடுகள் நீங்கும். பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் ரத்தக் கசிவு பிரச்சனைகள் ஏற்படுவதும் தடுக்கப்படும்.

கண்களில் ஏற்படும் பலவித பார்வை கோளாறுகள் அனைத்தும் தடுக்கப்படும். சிலர் பக்குவப்படாத உணவுகளை உண்பதாலும், உடலில் வாதம் அதிகரிப்பதாலும் வாயு தொந்தரவு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.

உலர் திராட்சை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

irumbu sathu food in tamil

தர்பூசணி பழம்

ஒரு தர்பூசணி பழத்தில் பனிரெண்டு மில்லிகிராம் அளவிற்கு இரும்பு நிறைந்துள்ளது. மேலும், இதில், ஏராளமான வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனை சாப்பிட்டு வந்தால் உங்களை எப்போதும் இளமையுடன் வைத்திருக்க உதவும்.

மாதுளம் பழம்

இரும்புச் சத்து நிறைந்த ஒரு சிறந்த பழம் மாதுளம் பழம். நூறு கிராம் மாதுளம் பழத்தில் 0.3 மில்லி கிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

மேலும் இதில் புரதச்சத்து, மெக்னீசியம், வைட்டமின், பொட்டாசியம், வைட்டமின் B, வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிடென்ட் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் இரும்புச் சத்து மிகுந்து காணப்படுகின்றது. உடலுக்கு உறுதி அளிக்கும் பழங்களில் அத்திப்பழம் மிக, மிகச் சிறந்த பழமாகும்.

தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்கள் ரத்த சோகை மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சனை இருக்கவே இருக்காது.

முக்கியமாக ஆண்களுக்கு அத்திப்பழம் மிகவும் நல்லது.

கொய்யாப்பழம்

பழங்களில் சிறந்த பழம் கொய்யாப்பழம் ஆகும். நமது ஊர் பகுதிகளில் மிகவும் எளிதாக கிடைக்கக்கூடியது கொய்யாப்பழம்.

இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் போன்ற நிறைந்துள்ளன. மேலும், கொய்யாப்பழத்திற்கு ரத்த சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தியும் உண்டு.

Iron Rich Foods in Tamil

சோயா பீன்ஸ்

பச்சை சோயா பீன்ஸில் இரும்புச் சத்து மிகுதியாக இருக்கின்றது. அசைவ உணவுக்கு நிகரான ஒரே சைவ உணவு இதுதான்.

அசைவ உணவுகளில்தான் புரதச் சத்து அதிகம் கிடைக்கின்றது என்பது பலரின் கருத்து ஆக இருக்கின்றது. அசைவ உணவுக்கு இணையான சைவ உணவுதான் சோயாபீன்ஸ்.

ஐந்து லிட்டர் பசும்பாலில் உள்ள புரதம் ஒரு கிலோ மாமிசத்தில் உள்ள புரதம் இருபத்தி நான்கு நாட்டுக்கோழி முட்டைகளுக்கு இணையான புரதச்சத்து, சோயா பீன்ஸில் உள்ளது.

எடையை குறைப்பதில் சோயாவுக்கு முக்கிய பங்குண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரட்டுவதில் சோயா உதவும்.

ஏனென்றால், சோயாவில் நல்ல கொழுப்புகள் நிறைவாக உள்ளது. , இதயத்திற்கும் மிக நல்லது.

இதய நோய் பாதித்தவர்கள், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, அவசியம் இரும்புச்சத்து தேவை.

மற்ற பருப்புக்களை விட சோயாவில் இரும்புச்சத்தும் சற்றே அதிகம். அதாவது பத்து புள்ளி நான்கு சதவிகிதம் சோயாவில் உள்ள புரோட்டீன் ஆனது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகின்றது. சைவ பிரியர்களுக்கு சோயா சிறந்த ஊட்டச்சத்து உணவாக விளங்குகின்றது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

 

 

Related Posts

2 Comments

  1. Pingback: b52 club

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning