கடல் மீன் பயன்கள் | Sea Fish Benefits in Tamil

கடல் மீன் பயன்கள் | Sea Fish Benefits in Tamil

அசைவ உணவு என்றதுமே நிறைய பேர் விரும்பி சாப்பிடுவது chicken தான். அதே சமயம் எங்குமே பிராய்லர் கோழியின் ஆதிக்கமே அதிகம் உள்ளது.

பிராய்லர் கோழியை பொறுத்தவரையில் வியாபார நோக்கத்திற்காக ஹார்மோன் ஊசி போடுவதால் அதில் தீமைகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இதே நிலைதான் பண்ணையில் வளர்க்கப்படும் மீன்களும். ஆனால் கடல் மீன்கள் சாப்பிடு பொழுது ஏராளமான நன்மைகள் கிடக்கிறது என்பது நிறைய பேருக்கு தெரிந்து இருக்க வாய்ப்புகள் குறைவு தான்.

அந்த வகையில் கடல் மீன்கள் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடக்கிறது? எந்த மீன்களில் இந்த நன்மைகள் அதிகம்? என்பதை பற்றி பார்ப்போம்.

மீன் வகைகள் படம்

புரதசத்து

நமது உடலுக்கு தேவையான புரதசத்து இந்த கடல் மீன்கள் சாப்பிடுவதால் கிடக்கிறது. உண்மையில் நம் உடல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்களில் மிக முக்கியமானது புரதசத்து.

அதாவது, நம்முடைய உடல் உறுப்புகள் நகம், தலைமுடி, சருமம் இவை அனைத்திலும் புரதமே உள்ளது. அதே போன்று திசுக்களின் உருவாக்கத்திற்கு காரணமும் புரதமே.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். முக்கியமாக, நம் உடலில் ஏற்படுகின்ற தேய்மானங்களை கூட புரதமே சீர் செய்கிறது . அதே போன்று, ஹீமோகுளோபின்தான் ஆக்ஸிஜன்ஐ உடல் முழுவதும் எடுத்து செல்கின்றது.

எனவே வளரும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரதசத்து சத்து, மிக அவசியம்.

இன்னும் சொல்லப் போனால் நம் உடலில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது புரத சத்துதான்.

அந்த வகையில் புரத சத்து அதிகம் உள்ள கடல் மீன்களை அடிக்கடி சாப்பிடும் பொழுது நம்முடைய உடலும், ஆரோக்கியமாக இருக்கும்.

அதிலும், அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்பு இல்லாமல் இருப்பது இதன் சிறப்பாகும்.

அது மட்டுமல்ல கடல் மீன்களில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறையவே உள்ளன.

கடல் மீன் வகைகள்

இதய ஆரோக்கியம்

முக்கியமாக இதய ஆரோக்கியத்தின் மிகப்பெரிய எதிரி கொலஸ்ட்ரால். இந்த, கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கடல் மீன்களில் அதிகம் உள்ளது.

காரணம் இதிலுள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் தான். இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

மேலும் கெட்ட கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது. அதாவது ரத்தக்குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் தடுப்பதால் ரத்தம் உறையாமலும், ரத்தம் சீராக பாயவும் உதவி செய்கிறது.

அதாவது இந்த கடல் மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால் இந்த மீன்களை சாப்பிடு பொழுது இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே கடல் மீன்களை, இதயத்தின் நண்பன் என்றே சொல்லலாம். எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது கடல் மீன்களை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கடல் மீன் பயன்கள்

பக்கவாதம்

கானாங்கெழுத்தி என்ற கடல் மீன்களை கேரளா மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம், இந்த கானாங்கெழுத்தி மீன் சாப்பிட்டால் பக்கவாதம் போன்ற, பிரச்சனைகள் வராமல் தடுக்கும் என்பது.

எலும்புகள் மற்றும் பற்கள்

இந்த கடல் மீன்களை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் நமக்கு வைட்டமின் டி சத்து கிடக்கிறது. இதனால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்கும்.

காரணம் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி நம் எலும்பு வளர்ச்சியை ஆரோக்கியமாக்க இந்த வைட்டமின் டி சத்து நமக்கு தேவை.
மேலும், ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற எலும்பு தேய்மான நோயையும் கட்டுப்படுத்தி நம் எலும்புகளையும், வலிமையாக்குகிறது.

மூட்டு வலி

பொதுவாக மூட்டு வலி உள்ளவர்கள் மூட்டில் வீக்கம் உள்ளவர்கள் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் கடல் மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் ஆகும்.

சரும ஆரோக்கியம்

நமது சருமம், ஆரோக்கியமாக இருக்க ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

இந்த அமிலம் முக சுருக்கத்தை தடுத்து என்றும், இளமையாக இருக்க உதவும் என்று, ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.

which fish is good for health in tamil

புற்றுநோய்

அதே போன்று இந்தஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் புற்றுநோயை வராமல் தடுக்கும் சக்தி உடையது. குறிப்பாக குடல் புற்றுநோயை குணப்படுத்துவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.

அது மட்டுமின்றி பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை வரவிடாமல் தடுக்கக்கூடியது. மேலும், இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் நமது உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.

மூளை ஆரோக்கியம்

அதேபோன்று மீன் என்று அழைக்கப்படக்கூடிய கடல் மீனான மத்தி மீனில் அதிக அளவு பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கடல் மீன்களை அடிக்கடி சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். அதாவது, இதில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சி நரம்பு அணுக்களை வளர்க்கவும், அறிவாற்றல், ஞாபகத்திறன் என்று ஒட்டுமொத்த மூளை செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

குறிப்பாக Alzheimer என்று சொல்லக்கூடிய ஞாபக மறதியினால் அவதிப்படுபவர்கள் வாரம் இரண்டு முறை இந்த உணவை சேர்த்து வருவது நல்லது.

fish benefits in tamil

கடல் மீன் ஏன் சாப்பிட வேண்டும்?

ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்று குறைவு.

ஆற்று மீன்களிலும், வளர்ப்பு மீன்களிலும் இது மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

இதனால்தான் ஆழ்கடல் மீன்களை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருபவர்களுக்கு மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவதில்லை என்று ஆய்வுகள் சொல்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் வெளிநாட்டினர் கடல் மட்டும் இறக்குமதி செய்வதின் காரணமும் இதுதான். எனவே அசைவ உணவுகளில் எப்பொழுதுமே கடல் உணவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தர வேண்டும்.

முக்கியமாக பிராய்லர் கோழிகளின் இறைச்சியை சாப்பிடுவதால் அதன் விரைவான வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் ஊக்க மருந்துகள் நம் திசுக்களையும் ஹார்மோன்களையும் வேகமாக முதிர்ச்சி அடைய செய்கின்றன என்றும், கூறப்படுகிறது.

எனவே வாரம் இரண்டு முறை கடல் மீன்களை வாங்கி சாப்பிடுங்கள். சொல்லப் போனால் எல்லா வயதினருக்கும் ஏற்ற அசைவ உணவு, கடல் மீன்கள்.

அது மட்டுமல்ல இந்த மீன்களை நீண்ட நேரம் எண்ணெயில் பொரிப்பதன் மூலம், அதில் உள்ள, DHA மற்றும் EPA ஆகிய உடலுக்கு நன்மை பயக்கும் மூலக்கூறுகள் சிதையக்கூடும். அதே போன்று புரத சத்தும் எண்ணெயில் கரைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே, வேக வைத்தல் முறையில் அதாவது குழம்பு போன்று செய்து சாப்பிடுவதன் மூலம் இதன் முழு நன்மைகளையும் பெற முடியும்.

உண்பதற்கு ஏற்ற மீன்கள்

முக்கியமாக கடல் மீன்களில் மத்தி மீன், சாலமன் மீன், கானான் கெளுத்தி, சூரிய மீன்கள், வஞ்சரம் போன்ற மீன்கள் மிகவும் பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனென்றால் கடல் மீன்களில் அதிக அளவில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் உள்ளது.

மேலும் இந்த மீனில் உள்ள கொழுப்பு அமிலத்தில் மெலடோனின் என்ற தூக்கத்தை சீர்படுத்தும் ஹார்மோன் அடங்கியுள்ளது. எனவே என்றும் ஆரோக்கியமாக இருக்க கடல் மீன்களை அடிக்கடி சாப்பிடுங்கள்.

முக்கியமாக மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில் சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் உடல் எடையும் அதிகரிக்காது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: 누누티비
  2. Pingback: fox888
  3. Pingback: Highbay
  4. Pingback: Apple gift card

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning