பயத்தங்காய் மருத்துவ பயன்கள் | Thatta Payaru in Tamil
நம் அன்றாட வாழ்வில் நாம் பல விதமான உணவுப் பொருட்கள பயன்படுத்துகிறோம்.
ஆனால், நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணங்கள் உண்டு.
பயத்தங்காய் பயன்கள் பற்றியும் அதை பயன்படுத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
உடல் உஷ்ணம்
கோடை காலங்களில் உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் பயத்தங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் உஷ்ண தணிந்து, உடல் குளிர்ச்சி பெரும்.
பசியின்மை
பசியின்மையால் பலரும் அவதிப்படுவார்கள். பயத்தங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பசி உணர்வு ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் இந்த காய், சிறந்த நீர்பெருக்கியாகவும் செயல்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
பயத்தங்காயில், வைட்டமின் C இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலில் நோய் ஏற்படாமல் காக்க உதவுகிறது.
பைத்தங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கபத்தால் ஏற்படும் பிரச்சனை நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் ஒரு சிலர் நோயால் அவதிப்படுவார்கள்.
அப்படி இருப்பவர்கள், நோய் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த பயத்தங்காயை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஃபோலேட் என்ற சத்து, இதில் அதிக அளவில் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை சாப்பிடுவது, மிக அவசியமான ஒன்று.
பயத்தங்காயில், நிறைய சத்துக்கள் உள்ளன. கர்ப்பிணி பெண்கள் பயத்தங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தையின் நரம்பு மண்டலம், நன்றாக இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நரம்பு மண்டலத்தில் எந்த விதமான கோளாறுகளும் ஏற்படாமல் காக்க உதவும்.
உடல் எடை
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பயத்தங்காயை தொடர்ந்து சாப்பிடலாம். இந்த காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் எளிதில் ஜீரணமாகும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், பயத்தங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.இதய நோய் வராமல் தடுக்ககும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள், இந்த காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
புற்றுநோய்
புற்றுநோயை தடுப்பதில் பயத்தங்கள் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். பயத்தங்காயில் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுத்து புற்றுநோய் வராம காக்க உதவுகிறது.
இதனையும் படிக்கலாமே
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil(Opens in a new browser tab)
- சீத்தாப்பழம் நன்மைகள் | Seethapalam Benefits in Tamil(Opens in a new browser tab)
- மக்காச்சோளம் பயன்கள் | Makka Cholam in Tamil(Opens in a new browser tab)
- ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language(Opens in a new browser tab)
- ஆமணக்கு எண்ணெய் பயன்கள் | Amanakku Oil Uses in Tamil(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
3 Comments
Comments are closed.