கேரட் நன்மைகள் தீமைகள் | Carrot Benefits in Tamil
நம்மில் நிறைய பேர் இன்று இயற்கை உணவுகளை தவிர்த்து எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என பல உணவுகளை இன்று அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள்.
நாம் தினமும் உண்ணும் உணவுகளில் இயற்கை உணவுகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அந்த வகையில் தினமும் ஒரு கேரட்டை பச்சையாக ஒரு மாதம் சாப்பிட்டால் என்னென்ன அற்புதமான மாற்றம் கிடைக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.
செரிமானம்
பொதுவாக உயிர் சத்துக்கள் நிறைந்த கேரட்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. கேரட் கடித்து உண்பதால், உமிழ்நீர் அதிகமாக சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர குடல்பு வயிற்று வலி, அஜீரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.
பற்களில் கரை
பற்களில் கரை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்த கரை மறைந்துவிடும். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.
இரத்த சுத்திகரிப்பு
கேரட்டில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தி விருத்தி அடைய செய்கிறது. ரத்தத்தில் உள்ள செவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை நீக்குகிறது.
ரத்தத்தில் தேவையில்லாத யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால், மூட்டு வீக்கம், வாத நோய்கள் தீரும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் புற்று நோயிலிருந்து காக்கவும், கேரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கருவுற்ற பெண்கள்
கருவுற்ற பெண்கள் தினமும் ஒரு கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், களைப்பு ஏற்படாது. சோகை நீங்கும். குழந்தை நல்ல நிறமாகவும் வலுவாகவும் பிறக்கும்.
ஆண்மை
பாதி வேக வைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை அதிகரிக்கும். எனவே, ஆண்கள் தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வருவது நல்லது.
கண்கள் ஆரோக்கியம்
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கரோட்டின் தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. மாலை கண் நோயையும் தடுக்கிறது.
வயிற்று பிரச்சினைகள்
கேரட்டை, தயிர் பச்சடியாக, மதிய உணவு வேளைகளில் உண்டு வந்தால், வாய்வு மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
மேலும் வயிற்றுப் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும்.
சரும ஆரோக்கியம்
தோல் வறட்சி நீங்கி பளபளப்பாகும். முகப்பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.
முக்கியமாக தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக வயதான தோற்றம் மறையும். இளம் வயதில் ஏற்படும் முதுமை தோற்றம் மாறும்.
உடல் எடை குறைய
பொதுவாக கேரட்டை உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள நார்ச்சத்து பசியை அடக்கும்.
அதனால் சாப்பிடும் அளவு குறைந்து உடலில் உள்ள அதிகப்படியான சதை குறையும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கேரட் வெளியேற்றும். கொழுப்புகள் சேர விடாமலும் பாதுகாக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்தான் எளிதில் நோய்களானது தொற்றிக்கொள்ளும். எனவே, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாக்குங்கள்.
கேரட் தீமைகள்
கேரட்டில் இருக்க கூடிய பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. அனால் அதிக அளவில் கேரட் சாப்பிட்டால் அது பக்க விளைவினை ஏற்படுத்தும்.
கேரட் அதிக அளவில் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
கேரட்டில் 12 கிராம் அளவு கார்போஹைட்ரெட் மற்றும் 4 கிராம் நார் சத்து அடங்கியுள்ளது. இந்த இரண்டு சத்தும் சிறுகுடலில் சரியாக செரிக்காமல் போய் விட்டால் பெருங்குடலில் புளிப்பு தன்மையை ஏற்படுத்தும்.
அதனால் சிறுகுடலில் வாயு ஏற்பட்டு வயிற்றுப் பிடிப்பு, வாய்வு பிடிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இதனையும் படிக்கலாமே
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
- கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் | Calcium Foods in Tamil
- மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil
- ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
- குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Rice Benefits in Tamil
- புடலங்காய் நன்மைகள் | Pudalangai in Tamil
- புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
5 Comments
Comments are closed.