நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil

நன்னாரி பயன்கள் | Nannari Benefits in Tamil

இம்மூலிகையானது பரவலாக இந்தியா முழுவதும் காணப்படுகிறது. இது செம்மண் பூமியிலும், மலை சார்ந்த பகுதியிலும், கிராமப்புறங்களிலும் தானாகவே வளரக்கூடிய சிறு கொடியினமாகும்.

சிறந்த மூலிகையான நன்னாரியின் இலைகள், வேர், பட்டை என அனைத்துமே பயன் தருபவை ஆகும்.

நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil

நன்னாரி செடி

இதன் வேரானது மிகுந்த வாசனை உடையதாக இருக்கும். இதன் இலையானது நீண்ட ஈட்டி போன்ற வடிவிலும், இலையின் மேல் புறத்தில் வெண்ணிற நரம்பு வரம்புகள் உடையதாக அமைந்திருக்கும்.

இதனுடைய பூக்கள் சிறிய பூக்களாக சிவந்த நிறத்திலும், இதன் காய்களும் சிறியதாக அமைந்திருக்கும்.

உடைத்தால் பால் வரக்கூடிய தன்மை பெற்றிருக்கும். இது விதைகள் மூலமும், cuttings மூலமும், இன உற்பத்தி ஆகிறது.

நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil

வேறு பெயர்கள்

இதனுடைய வேரே மருந்தாக பயன்படுகிறது. இதற்கு மாற்றுப் பெயராக, அங்காடி மூலி, பால்குடி, நீர்ண்டி, கிருஷ்ணவள்ளி, சாரியம், சுகந்தி, நறுக்குமூலம் என்றும் இன்னும் இதற்கு அநேக பெயர்களும் உண்டு.

பொதுவான குணம்

  • நன்னாரி வேரானது உடல் உஷ்ணத்தை தணிக்கக் கூடியது.
  • தீராத தாகம், அதிப்பித்தம், நீர் ஏற்றம், பித்த நோய்கள், சிறு பூச்சிகளின் கணிசம், வாயில் நீர் சுரப்பு, புணர்ச்சியின் போது சூடாகுதல், மதுநீர், கிரந்தி, சுர வேகம் யாவும் தீரும்.
  • கீழ்பிடிப்பு, இதய ரோகங்கள், வெள்ளைப்படுதல், நீர் எரிச்சல் யாவும் குணமாகும்.
  • நன்னாரி வேரானது அதிகமான மருத்துவப் பொருட்களுடன் கூட்டாக சேர்க்கப்படுகிறது.
  • அதாவது லேகியங்களிலும், திரவியங்களிலும், வாசனை பொருட்களாகவும், மருந்துப் பொருள பயன்படுத்தப்படுகிறது.
  • நன்னாரி வேர் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண, விஷக்கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.

நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil

நன்னாரி மருத்துவம்

நீர் எரிச்சல்

சுகந்த வாசனை உடைய, நன்னாரி வேரை உலர்த்தி, இடித்து, சூரணமாக செய்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை அளவிற்கு எடுத்து காய்ச்சி பசுவின் பாலுடன் கலந்து அதனுடன் கற்கண்டு சூரணம் கூட்டி தினம் இருவேளையாக சாப்பிட்ட பின்பு உள்ளுக்கு அருந்த உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

நீர் சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் சிவந்த நிறத்துடன் போகுதல். நீர் கொதிப்பு, முதலியவைகள் குணமாகும்.

நாள்பட்ட இருமல்

நன்னாரி வேரை, ஐம்பது கிராம் அளவிற்கு எடுத்து அரை லிட்டர் நீரில் ஊற வைத்து, ஒரு மணி சட்டியில் போட்டு, சுண்ட காய்ச்சி வடிகட்டி, முப்பது மில்லி அளவிற்கு எடுத்து அதனுடன் சிறிது ஜலமும் கூட்டி இரு வேளையாக சாப்பிட்ட பின்பு அருந்தி வர நாள்பட்ட இருமல், மூச்சை, பித்த எரிச்சல், வெள்ளைப்படுதல், பித்த நோய்கள், உடல் உறவால் ஏற்படுகின்ற சூடு, சுர வேகம், தீராத தாகம், இவைகள் நீங்கும். மேலும், இளமை திரும்பும்.

நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil

பித்தம்

நன்னாரி வேரை கொண்டு வந்து அரைத்து, சூரணமாக செய்து வைத்துக் கொண்டு அரை தேக்கரண்டி அளவிற்கு எடுத்து, தேநீர் குழைத்துச் சாப்பிட அரிப்பித்தம், மதுநீர், பித்தத்தினால் ஏற்படுகின்ற நோய்கள், இருதய நோய்கள், வாயில் நீர் சுரப்பு இவைகள் நீங்கும்.

உடல் உஷ்ணம்

இந்த நன்னாரியை சர்ப்பத்தாகவோ, ஊறல் நீராகவோ அல்லது சூரணமாகவோ, அல்லது கசாயமாகவோ, தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு பயன்படுத்தினால் கண் விழிப்பதினால் ஏற்படுகின்ற உஷ்ணம், வாகனத்தினால் ஏற்படுகின்ற உஷ்ணம், வெயிலின் தாக்கத்தினால் ஏற்படுகின்ற உஷ்ணம், புணர்ச்சியினால் ஏற்படுகின்ற உஷ்ணம், வேலைவலுவினால் ஏற்படுகின்ற உஷ்ணம் இது போன்ற அனைத்து விதமான உஷ்ணத்தையும் போக்கி உடலில் உள்ள அனைத்து பாகத்தையும் சமச்சீராக வைத்து நம் உடலை பாதுகாக்கும்.

நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil

நமது உடலில் உஷ்ணமானது சீராக இருக்கும் பொழுது பிணிகள் அண்டாது. அதே நேரத்தில் நமது உடம்பில் மிகுதியான உஷ்ணங்கள் வரும் பொழுது பலவித நோய்களும் இன்னல்களும் ஏற்படுகின்றது.
ஆகையால் நன்னாரி பயன்படுத்தி உடலுக்கு வருவது மிகவும் நல்லது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning