சிவப்பு பீன்ஸ் நன்மைகள் | Red Beans in Tamil

சிவப்பு பீன்ஸ் நன்மைகள் | Red Beans in Tamil

சிவப்பு பீன்ஸ் கிட்னி என்றும் கூறுவார்கள். இந்த பீன்ஸ் பார்ப்பதற்கு கிட்னி வடிவத்தில் இருக்கும். பொதுவாக இதைப் பற்றி அவ்வளவாக நிறைய பேருக்கு தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதில் நமது உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதிலும் இதில் அதிகம் இருப்பதால் அசைவ உணவு சாப்பிடாதவர்கள் அசைவத்திற்கு மாற்றாக இதனை சாப்பிடலாம்.

அது மட்டுமல்ல இதன் சுவையும் அருமையாக இருக்கும். இதன் நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால் இவ்வளவு நாள் இதை மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றும்.

மூளை செயல்பாடு

பொதுவாக நம் மூளையின் செயல்பாடுகளுக்கும், நரம்புகளுக்கும் வைட்டமின் கே, மிகவும் அவசியமான ஒன்று.

அந்த வகையில் வைட்டமின் கே இதில் வளமாக நிறைந்துள்ளது. அது மட்டுமல்ல இதில் அதிகப்படியாக டயமின் இருப்பதால் மூளையின் செல்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இதிலுள்ள அடிப்படையான எட்டு அமினோ அமிலங்கள் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் பிற நோய்கள் எதுவும் எளிதாக நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

kidney bean in tamil

இரத்த சர்க்கரை

இது கார்போஹைட்ரேட்டின் மெட்டபாலிசத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. முக்கியமாக உணவு சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவு கூடுவதை தடுக்கிறது.

அதோடு இதில் கணிசமான அளவு புரதம் இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது.

அதேபோன்று இதில் குறைந்த glycemic index உடன் கார்போஹைட்ரேட் உள்ளதால் ரத்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

எலும்பு உறுதி

இந்த சிவப்பு பீன்ஸ் இல் இருக்கக்கூடிய, மெக்னீசியம் மற்றும் கால்சியம் எலும்புகளின் உருதித்தன்மையை அதிகப்படுத்துகிறது.

எலும்பு தேய்மானம் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும். இதில் இருக்கும் ஃபோலேட் எலும்புகளை வலுவாக்குகிறது.

kidney beans in tamil

ஆஸ்துமா

இது ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கும். அதாவது நமது உடலில் மக்னீசியம் சத்து குறைந்தால்தான் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்.

கண்

இதில் உள்ள துத்தநாக சத்து கண்களின் பாதுகாப்பிற்கு உதவுகிறது. பொதுவாக நமது உடலில் போதிய அளவு துத்தநாக சத்து இருந்தால் மட்டுமே கண் தொடர்பான பிற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

அதே போன்று வயதான பிறகு ஏற்படக்கூடிய கண்புரை வராமல் தடுக்கவும் இந்த சிவப்பு பீன்ஸ் உதவுகிறது.

red beans in tamil

தலைமுடி

இந்த சிவப்பு பீன்ஸ் இல் பயோட்டின், புரதம், இரும்பு சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் இவை தலைமுடியின் வளர்ச்சிக்கும், உறுதித்தன்மைக்கும் அவசியமாகும்.

பொதுவாக நமது உடலில் பயோட்டின் குறையும் பொழுதுதான் நகம் மற்றும் முடி வறண்டு எளிதாக உடைவதும், வேகமாக உதிர்வதும் தொடரும்.

இதற்கு இந்த சிவப்பு பீன்ஸ் சிறந்த மாற்றாக அமைந்திடும்.

சருமம்

உள்ள போலிக் அமிலம், சருமத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்வதற்கும், பருக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவுகிறது.

red kidney beans in tamil

மேலும்

வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் நோய் ஏற்படாமலும் தடுக்கக் கூடியது இந்த சிவப்பு பீன்ஸ்.

இந்த சிவப்பு பீன்ஸ் விரைவில் செரிமானமாகிவிடும். அதோடு உடலில் சேரக்கூடிய நச்சுக்களையும் வெளியேற வைக்கிறது.

இதில் உள்ள இரும்பு சத்து ரத்த சோகையை போக்குகிறது. அடுத்ததாக இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.
முக்கியமாக இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சிவப்பு பீன்ஸ் நன்மைகள்

அதோடு இதில் இருக்கும் ஃபோலேட் சத்து பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதோடு cardio vascular system முறையாக வேலை செய்ய உதவுகிறது.

மேற்கண்ட நன்மைகளை கொண்ட இந்த சிகப்பு பீன்ஸினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு மிக மிக நல்லது.

இதை சுண்டலாகவோ அல்லது gravy போன்றோ, அல்லது நீங்க விரும்பிய சுவையில் செய்து சாப்பிடலாம். இதன் சசுவையும் non-veg போன்றே அபாரமாக இருக்கும்.

இது அனைத்து இடங்களிலும் கிடக்கிறது. நீங்களும் வாங்கி சமைத்து சாப்பிட்டு பயன்பெறுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வளைத்ததின் Disclaimer  பக்கத்தினை படிக்கவும்

Related Posts

3 Comments

  1. Pingback: ruby carts

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning