புடலங்காய் நன்மைகள் | Pudalangai in Tamil
நம் உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் நம் உணவிலேயே இருக்கின்றன. அதனால்தான் நம் முன்னோர், உணவையே மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
நமக்குத்தான் இதன் அருமை தெரிவதில்லை. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் புடலங்காயா என்று, வெறுப்போடு கேட்பது போன்றும் அதற்கு மாற்றாக பர்கர் வாங்கி சாப்பிடுவது போன்றும் காட்டப்படுகிறது.
ஆனால், உண்மையில் புடலங்காய் எத்தன நன்மைகள் இருக்கு தெரியுமா? புடலங்காயை வாரம் இரண்டு முறை சமைத்து சாப்பிட்டாலே போதும் நமக்கு ஏராளமான கிடக்கிறது.
பொதுவாக நாம் சாப்பிடுகிற உணவு என்பது ருசிக்காக மட்டுமல்லாமல் சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அவைதான் நோய்கள் வரவிடாமல் தடுக்கும்.
அந்த வகையில் புடலங்காய் எந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது என்பதை பற்றி பார்ப்போம்.
குளிர்ச்சி
புடலங்காய் அதிக நீர்ச்சத்து உள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.
வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெப்பத்தின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.
மேலும், உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை உடையது.
குடல் புண்
குடல் புண் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாயிலும் புண் ஏற்படும். இவர்கள் வாரம் ஒருமுறை புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் வாய்ப்புண் மட்டுமல்ல குடல்புண், தொண்டைப்புண், ஆறும்.மேலும் வயிற்றுப் பூச்சி இருந்தாலும், நீங்கி விடும்.
மலச்சிக்கல்
இதில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கலைப் போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. பொதுவாக, பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் உடல் மற்றும் மனதளவில் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
இப்படிப்பட்ட தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை தீர அடிக்கடி புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கும்.
மேலும் அஜீரணக் கோளாறு இருந்தாலும் நீங்கி உணவு எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.
மூலநோய் உள்ளவர்களுக்கு, புடலங்காய் நல்ல மருந்தாக செயல்படுகிறது.
மேலும், நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கக்கூடியது.
பெண்கள் ஆரோக்கியம்
புடலங்காய் அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும்.
கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும் கண் பார்வையும் அதிகரிக்க செய்கிறது.
இதய ஆரோக்கியம்
நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும் இதயத்திற்கு நலத்தை தருகின்ற இது போன்ற உணவுகள் சாப்பிட்டு வருவது நல்லது.
எனவே, அடிக்கடி புடலங்காய் கொண்டு உணவுகளை சாப்பிடு நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்
நமது உடலில் இருக்க கூடிய இந்த கல்லீரலானது உணவில் இருக்கும் விஷ தன்மைகளை முறித்து உடலுக்கு நன்மையை செய்கின்றது.
இப்படியான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி புடலங்காய் கொண்டு செய்யப்படும் பொரியல் சமைத்து சாப்பிட்டு வர கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கிவிடும்.
தலைமுடி
தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி புடலங்களை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு சிறுநீரில் அதிக அளவு சர்க்கரை சத்துக்கள் வெளியேறாமல் தடுக்கிறது.
மேலும் உடல் எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் உதவுகிறது.
ஆண்கள் ஆரோக்கியம்
உடல் உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாகின்றன.
புடலங்காய் குளிர்ச்சித்தன்மை நிறைந்த ஒரு காய் என்பதால் இது சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
மேலும்
எனவே இதன் மருத்துவ பலன்கள் முழுமையாக உங்களுக்கு கிடைப்பதற்கு வாரத்திற்கு, இரண்டு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிடுவதால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி பெற முடியும்.
புடலங்காயில் நன்கு முற்றிய புடலங்காய் சாப்பிடுவதை தவிர்த்து பிஞ்சு, நடுத்தர, முதிர்ச்சி அடைந்த புடலங்காய் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
இதனையும் படிக்கலாமே
- அவல் நன்மைகள் | Aval Benefits in Tamil
- சப்ஜா விதை நன்மைகள் | Sabja Seeds Benefits in Tamil
- வாந்தி நிற்க பாட்டி வைத்தியம் | How To Stop Vomiting in Tamil
- தலை வலி குணமாக | Headache Home Remedies in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- முதுகு வலி குணமாக | Muthugu Vali Remedy in Tamil
- புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food in Tamil
- குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Rice Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
7 Comments
Comments are closed.